தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு (PJயின் ஆய்விற்கு மறுப்பு) - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Friday, July 14, 2017

தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு (PJயின் ஆய்விற்கு மறுப்பு)



PJயின் தஸ்பீஹ் சம்பந்தமான ஆய்விற்கு ஆதாரபூர்வமான மறுப்பு
  1. முன்னுரை
  2. தஸ்பீஹ் தொழுகை ஆய்வின் ஆரம்பம்
  3. தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்கள்
  4. ஸலாதுத் தஸ்பீஹ் பற்றிய ஹதீஸ்கள் ஆதாரபூர்வமானவை எனஏற்றுக்கொண்ட
    ஹதீஸ்கலை அறிஞர்களின் பட்டியல்
  5. தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்றும் முறை
  6. தஸ்பீஹ் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற முடியுமா?
  7. தஸ்பீஹ் தொழுகை ஓர் அறிமுகம்
முன்னுரை

இஸ்லாம்தான் இந்த உலகில் முதலாவது தோன்றிய கொள்கையாகும். இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில்தான் இந்த உலகம் ஆரம்பமானது. இந்த உலகத்தில் அப்போது நேர்வழியைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் அழ்ழாஹ்வின் வழிகாட்டல் மட்டுமே இருந்தது. முஸ்லிம்கள் அழ்ழாஹ்வின் வழிகாட்டலைக் கைவிட்டு, அல்லது அதனுடன் சேர்த்து ஏனையவற்றையும் பின்பற்ற ஆரம்பித்தபோதே இந்த உலகில் வழிகேடு ஆரம்பமானது. வழிகேட்டின் ஆரம்பம் iஷத்தானுக்கு அடிபணிவதில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அவ்வாறு வெளிப்படையான தவறைச் செய்வோர் அதனைப் பிழையாக நினைக்காத வண்ணம் iஷத்தான் அந்த செயல்களைச் செய்வோருக்கு அவற்றை அழகுபடுத்திக் காட்டுகின் றான். இது அழ்ழாஹ்வின் தண்டனைகளில் ஒன்று என்பதை பெரும்பாலான மக்கள் அறியவில்லை. அழ்ழாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:-

(நபியே!) செயல்களால் மிகவும் நஷ;டம் அடைந்தவர்கள் பற்றி உங்களுக்கு நாம் அறிவி;க்கட்டுமா? (என நீர்) கேளும். அவர்கள் உலக வாழ்வில் மேற்கொண்ட முயற்சி வழிதவறிவிட் டது. அத்துடன் செயல்களால் சிறந்ததையே அவர்கள் செய்வதாகப் பிழையாகவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
(18 : 103,104 )

இந்த நிலையானது அழ்ழாஹ்வின் புறமிருந்து கெட்டவர்களுக்கு அவர்கள் உணராத விதத்தில் தரப்பட்டிருக்கும் மிகப்பயங்கரமான தண்டனை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலை எமது சமூகத்தில் பரவிக் காணப்படுகின்றது. அழ்ழாஹ்வின் வேதத்திலிருந்து எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்களாகவே நல்லதாக நினைத்துக் கொண்டு எத்தனையோ
செயல்களைச் செய்கின்றனர். மார்க்கத்தில் நல்லதா கெட்டதா என அறிந்து கொள்வதற்கு அழ்ழாஹ்வின் வேதத்தில் அவை உள்ளதா எனப் பார்ப்பதற்குப் பதிலாக ஏனையவற்றில் ஆதாரம் தேடுகின்றனர். இதுதான் மனிதனின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை iஷத்தான் மனிதர்களை இடறச்செய்யும் முதலாவது இடம். ஏனெனில் இந்த இடத்தில் தவறிவிடுகின்றவன் அதன் பின்னால் வரக்கூடிய ஒவ்வொரு விடயத்திலும் தவறான வழியில் செல்வது மட்டுமல்ல, அவன் செல்லும் தவறான வழியை நேர்வழி என நினைத்து அதில் அடம்பிடிக்கவும் துணிந்து விடுகின்றான்.

இதன் காரணமாகத்தான் மனித சமூகம் வழிதவறும் ஒவ்வொரு காலத்திலும் அழ்ழாஹ் தனது தூதர்களை அனுப்பி மீண்டும் தனது வஹியை மாத்திரம் பின்பற்றும் நேர்வழியின்பால் அழைக்கின்றான். அவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் மேற்கொண்ட அழைப்புப்பணி பின்வரும் அடிப்படையை வலியுறுத்தியே அமைந்திருந்தது:-

நீங்கள் அழ்ழாஹ்வை அஞ்சுங்கள், எனக்கு வழிப்படுங்கள்.
( 26 : 163 )

படைத்தவனால் வழங்கப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்த்துவிட்ட சமூகம் தனக்கு மாத்திரம் துரோகம் இழைத்துக்கொள்ளவில்லை. மாறாக மனித சமூகத்திற்கே துரோகம் இழைத்துவிட்டது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கமைய அடிப்படையிலேயே தவறிவிட்டனர். எனவே இஸ்லாத் திற்குரிய விNஷட சிறப்புத்தண்மை இல்லாதுபோய், அதன்பிறகு இஸ்லாத்தின் மூலம் கிடைக்கும் சிறந்த விளைவுகளும் இல்லாமற் போய்விட்டன. சிறந்ததொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்காகத் தரப்பட்ட சட்டங்கள் அவற்றிற்கு மத்தியில் இருந்த உயிரோட்டமான தொடர்பு அறுந்துவிட்டதனால் அவை வெறுமனே சடங்குகளாக மாறிவிட்டன.
இந்த சமூகத்தின் இன்றைய நிலை என்னவெனில்: யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சாண் சாணாகப் பின்பற்றிச் செல்கின்றனர். அழ்ழாஹ்வின் வேதத்தை முதுகிற்குப் பின்னால் எறிந்துவிட்டுத் தாங்களாகவே எழுதியவற்றை மார்க்கமாகப் பின் பற்றியதில் தொடங்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து அழ்ழாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உட்படுவதற்கு யூத, கிறிஸ்தவர்கள் என்னென்ன செய்தார்களோ அவை அனைத்தையும் எமது சமூகம் செய்யத் துணிந்துவிட்டது. பணத்திற்காகவும் பட்டத்திற்காகவும் மார்க்கத்தை விற்கும் அறிஞர்கள் மலிந்து விட்டார்கள். தலை வாருவதில்கூட யூத கிறிஸ்தவர்களின் வழிமுறையைப் பின்பற்றும் அளவிற்கு சமூகத்தின் நிலை ஆகிவிட்டது. இந்த நிலை தோன்றும் என ரஸூலுழ்ழாஹி முன்னறிவிப்புச் செய்திருந்தாலும் இதிலிருந்து விடுபட்டு அழ்ழாஹ்வின் அருளில் வாழும் ஒரு கூட்டம் இடையிடையே தோன்றும் எனவும் கூறியுள்ளார்கள். அந்தக் கூட்டம் மக்கள் சீர்கெடுத் தவற்றை சீர்படுத்துவார்கள். அவர்களுக்கு அழ்ழாஹ்வின் தூதரின் வாழ்த்து என்றென்றும் உண்டு என்பதே மகிழ்ச்சிக்குரியதாகும்.

சிறந்ததொரு சமுதாயத்தினைத் தோற்றுவிப்பதற்கான அத்தனை வழிகளையும் ரஸூலுழ்ழாஹி அவர்கள் காட்டித் தந்திருக்கின்றார்கள் என எமது சமூகத்திலுள்ளவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அந்த வழிகளைப் பின்பற்றி சிறந்ததொரு சமூகத்தைத் தோற்றுவிப்பதில் அவர்கள் தங்களது பங்களிப்பை மறந்து விடுகிறார்கள்.

இந்த நிலையை மாற்றி அமைப்பதற்காகத் தோன்றிய தௌஹீத் எனும் பிரிவின் பிரச்சாரம் அழ்ழாஹ்வின் வேதத்தில் ஆதாரம் இல்லாதவை களையப்பட வேண்டும் என ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் கொள்கைத் தெளிவு, தூய்மை, நிதானம் போன்ற அடிப்படை அம்சங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பிரச்சாரம் இன்று அசத்தியங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தன்னையும் அதே அசத்தியங்களின் மற்றுமொரு பிரிவாக ஆக்கிக் கொண்டுள்ள அவல நிலையைக் காண்கின்றோம். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே தஸ்பீஹ் தொழுகை பற்றிய எமது இந்த ஆய்வு அமைந்திருக்கின்றது.

இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை தோன்றியதன் பின்னர் ஒரு உண்மை முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை: தூய்மையான இஸ்லாத்தை நோக்கி முழுமையாக இந்த மக்களை அழைப்பது மாத்திரமேயாகும். இந்த முயற்சி கொள்கை, கூட்டமைப்பு, நம்பிக் கைகள், வணக்க வழிபாடுகள், அன்றாட வாழ்க்கைமுறை சட்ட திட்டங்கள், உயர் பண்புகள் என ஒரு முழுமையான சீர்திருத்தத்தை நோக்கியதாக அமைய வேண்டுமே தவிர சில சட்டங்களில் சீர்திருத் தத்திற்காகக் குரல் கொடுத்துவிட்டு வேறு சில சட்டங்களில் சமூகம் செய்யும் அதே தவறைச் செய்துகொண்டிருப்பதானது ஓட்டைக் குடத்தில் நீர் சேமித்த கதையாகிவிடும். ஏனெனில் அழ்ழாஹ்வுக்காக எனும் தூய்மையை அத்திவாரமாகக் கொண்டு, முழுமையான சீர்திருத்த நோக்கம் இல்லாத எந்தவொரு சீர்திருத்தப் பணியும் பிரயோஜனம் தரக்கூடியதல்ல என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆகவே அகீதா எனும் நம்பிக்கை முதற்கொண்டு ஒவ்வொரு அம்சத்திலும் அழ்ழாஹ்வின் வேதத்தின்படி நடக்கும் நேர்வழியை நோக்கிய அழைப்பின் ஒரு சிறிய பகுதியே இந்த தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஆய்வாகும். இதனை ஒரு ஆரம்பமாகக் கொண்டு ஒரு முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி உங்களை அழைக் கிறோம். வாசகர்களாகிய நீங்களும் நேர்வழியில் நடப்பதன் மூலம் அழ்ழாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்கு முழு முயற்சி செய்யவேண்டும் என்பதையே உங்களிடம் நாம் எதிர்பார்க்கின்றோம். எமது இந்த முயற்சி வெற்றிபெறுவதற்கு உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் தாராள மனதுடன் வரவேற்கின்றோம்.
மீண்டும் சந்திக்கும் வரை அன்புடன் ஆசிரியர்.



தஸ்பீஹ் தொழுகை ஆய்வின் ஆரம்பம்
தீவிரவாதத்திற்கும் மிதவாதத்திற்கும் மத்தியில் இஸ்லாம் தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானதா? அடிப்படையற்றதா?
ஆரம்பமுதல் இறுதிவரை மாற்றமடையாமல் பாதுகாக்கப் பட்ட ஒரே மார்க்கம் என்றால் அது இறுதிவேதம் மட்டுமேயாகும். தொடராக நபிமார்களை அனுப்பிக்கொண்டிருந்த அல்லாஹ், இறுதி நபியாகிய ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் நபிமார்களின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். மனிதர்களுக்கு நேர் வழிகாட்டும் பொறுப்பைச் செய்து வந்த நபிமார்களின் வருகை நின்றுவிட்டாலும் அவர்களது அளப்பரிய சேவையின் காரணமாக பிரயோசனம் பெற்றுக்கொண்டிருந்த மனித சமூகம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதால் நபிமார்களின் சேவை மனித சமூகத் திற்குத் தேவையானதாகவே இருந்துகொண்டிருக்கின்றது. எனவே கருணையாளனான அழ்ழாஹ் செய்தமிகப் பெரிய அருள் என்ன வெனில் இறுதி நபி மரணித்துவிட்டாலும் அவர்கள் கொண்டுவந்த போதனையை இறுதிநாள் வரை உயிரோட்டமுள்ளதாக வைத்த தேயாகும். இதுபற்றி அழ்ழாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும்போது பின்வறுமாறு கூறுகின்றான்:-

(நபியே) அவ்வாறே உமக்கு நமது கட்டளைகளில் உயிருள்ளதை வஹிமூலமாக அறிவித்தோம்.
(42:52)

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது சமூகம் தெளிவான நேர் வழியைக் கையிலே வைத்துக்கொண்டு, அதனை அச்சொட்டாகப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, iஷத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்தவற்றைப் பின்பற்றத் தலைப்பட்டு விட்டது. அழ்ழாஹ் வழங்கிய வஹியைக் கைவிட்டதன் காரணமாக வஹியின் மூலம் அடையப்பெற்றிருந்த நேர்வழியிலிருந்து சமூகம் தவறிச் சென்று விட்டது. நிச்சயமாக இதுதான் எனது நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்;;, பல பாதைகளைப் பின்பற்றா தீர்கள். அவை (அழ்ழாஹ்வாகிய) அவனது வழியிலிருந்து உங் களைப் பிரித்துவிடும். இவற்றைக் கொண்டு நீங்கள் அஞ்சி நடப் பதற்காக அவன் உங்களுக்கு உபதேசம் செய்திருக்கிறான்.
( 06 : 153 )

எனவே ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது சமூகம் தூய தீனிலிருந்து தூரமாகிச் சென்றவுடன் தீனிலே உள்ளவை எவை? புகுத்தப்பட்டவை எவை? எனக் கண்டறிந்து கொள்வது எவ்வாறு என்பதுகூடத் தெரியாத அளவிற்கு மக்களது நிலை ஆகிவிட்டது. எனவே மக்கள் அவ்வப்போது ஆலிம் எனும் பெயரிலுள்ளவர்கள் சொல்வது அனைத்தையும் மார்க்கம் என நினைத்துப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அவற்றில் ஆதாரபூர்வமானது எது? ஆதாரம் அற்றது எது? என்பதை அளப்பதற்குரிய அளவுகோல் அவர்களிடம் இருக்கவும் இல்லை, ஆதாரம் உள்ளவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற உணர்வும் இருக்கவில்லை.

சமூகம் இவ்வாறான நிலையில் இருக்க காலத்துக்குக் காலம் சீர்திருத்தம் என்று ஒவ்வொரு விதமான சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள். கடந்துபோன காலங்களை விட்டுவிட்டு நாம் வாழக்கூடிய இந்தக் காலத்தை எடுத்துப் பார்த்தால் அதிலும் சீர் திருத்தம் எனும் பெயரில் பல்வேறு இயக்கங்கள் செயல்படுவதைக் காணமுடிகின்றது. ஆனால் தம்மை முஸ்லிம்களாக அடையாளப் படுத்தும் இந்த சமூகம் இந்த இயக்கங்கள் மூலம் உண்மையான இஸ்லாத்தின்பால் வழிகாட்டப்பட்டுள்ளதா? எனப்பார்த்தால் விடை கவலைக்குரியதாகவே உள்ளது. இத்தகைய இயக்கங்களில் தௌஹீத் எனும் பிரிவை எடுத்துப் பார்த்தால் அது சத்தியத்திற்கு மிக நெருக்கமாக வந்து, மீண்டும் அசத்தியத்தின்பால் முன்னரை விட வேகமாகச் செல்லும் பரிதாபகரமான நிலையையே காண முடிகின்றது. இவர்களது நிலை சிறிய குழியிலிருந்து மீண்டவன் அதள பாதாளத்தில் வீழ்ந்த கதையாகி விட்டது. இன்னும்
தெளிவாகச் சொல்வதானால் ஷஷஇஸ்லாத்தில் ஆதாரபூர்வமானதை யும், ஆதாரமற்றதையும் மிகத்தெளிவாக அறிவித்துத் தரக்கூடியது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது ஹதீஸ் என்பதனால் ஹதீஸ்க ளையே முதன்மைப் படுத்த வேண்டும்ஷஷ எனச் பிரச்சாரத்தை ஆரம் பித்த தௌஹீத் எனும் பிரிவார், இன்று ஹதீஸ்களை நிராகரிப் போர்களுடன் இணைந்து விட்டார்கள். ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டுகளாக எவ்விதக் கலப்படமும் இல்லாத பொக்கிஷ மாகக் கருதப்பட்டுவந்த ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய முதல்தரம் வாய்ந்த ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ் களையே மறுக்கும் நிலையை இவர்கள் அடைந்துவிட்டனர்.

இந்த இடத்தில் தௌஹீத் எனும் பிரிவைக் குறிப்பிட்டதற்கான காரணம் இவர்கள்தான் தஸ்பீஹ் தொழுகை எவ்வித ஆதாரமும் அற்றது எனும் கூற்றை முன்வைப்பவர்கள். தஸ்பீஹ் தொழுகையை மட்டுமல்ல, ஆதாரபூர்வமான இன்னும் எத்தனையோ அம்சங்களை இவர்கள் அடியோடு மறுக்கின்றனர். அவைபற்றி இன்ஷh அழ்ழாஹ் எதிர்வரும் காலங்களில் படிப்படியாக மக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்துவோம்.

தமிழ்பேசும் மக்களுக்கு மத்தியில் தௌஹீத் எனும் பிரிவின் உப பிரிவுகள் எத்தனையோ காணப்பட்டாலும் தென் இந்தியாவைச் சேர்ந்த பீ. ஜே. என்பவர்தான் இஸ்லாமிய சட்டதிட்டங்களை குழப்பியடிப்பதில் முதண்மையானவர். இவரின் பின்புலத்தில் ஒரு பட்டாளமும் இருக்கின்றது. இவர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றி மறுத்து எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தஸ்பீஹ் தொழுகையின் உண்மை நிலையை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம். கூடுதல் குறைவு இன்றி சத்தியத்தை அப்படியே மக்கள்முன் தெளிவுபடுத்துவது ஜமாஅதுல் முஸ்லிமீனாகிய எமது வழமை என்பதை இலங்கை மக்கள் அறிவார்கள். அந்த வகையில் தஸ்பீஹ் தொழுகை பற்றியும் சரியான முடிவை நாம் எழுதுவதை வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஸ்பீஹ் தொழுகை கூடுமா ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? எனும் தலைப்பில் தௌஹீத் எனும் பிரிவார் எழுதியுள்ள மேற்படி ஆய்வு அவர்களது பாரிய முயற்சியாக இருந்தாலும் அந்த ஆய்வின் மையப்புள்ளியில் அவர்கள் தவறிழைத்துள்ளனர் என்பதே உண்மை. எனவே அவர்களது முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கிறது எனக் கூறினால் அது ஒருபோதும் தவறானதல்ல. அதற்கான காரணங்கள் பல இருக்கக்கூடும். என்றாலும் வழமையாகவே அவர்களிடம் இருக்கக்கூடிய அவசரத் தண்மையின் காரணமாக, ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடாததும் ஒரு காரணம் என்பது அந்த ஆய்வைப் படிக்கும் போது புலனாகின்றது..
அவர்களது ஆய்வு பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:-

இஸ்லாமிய கடமைகளில் கூடுதலாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணி இஸ்லாமியர்கள் சிலர் மார்க்கம் சொல்லித்தராத பல வணக்கங் களைச் செய்து வருகின்றனர். உதாரணமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு. இவற்றுக்கு எவ்வித ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது.இதைப் போன்று பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட சில செய்திகளை அடிப்படையா கக் கொண்டும் சில வணக்கங்களைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் தஸ்பீஹ் தொழுகை. இந்தத் தஸ்பீஹ் தொழுகையைப்பற்றி என்னென்ன செய்திகள் கூறப்படுகின்றன என்ற முழுவிபரத்தையும் பார்ப்போம்.





முதலாவதாக இந்த ஆய்வில் பராஅத் நோன்பு மார்க்கம் சொல்லித்தராத வணக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியது போன்று பீ. ஜே.யும் அவரைச் சார்ந்தவர்களும் சீர்திருத்தப் போர்வையில் சீர்கெடுத்தவற்றுள் இந்த பராஅத் நோன்பும் அடங்கும். பராஅத் எனும் பெயர் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலே கிடையாது, ஆனால் பராஅத் நோன்பு நோற்கப்படும் தினங்களில் ஒன்றாகிய ஷஃபான் பிறை பதினைந்தில் ஒரு நோன்புநோற்க வேண்டும் என்பதுடன், அதனைப் பிடிக்கத் தவறியவர்கள் ரமழான் முடிந்ததும் அந்த ஒன்றிற்குப் பதிலாக இரண்டு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்பதும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வலியுறுத்திச் சொன்ன கட்டளையாகும்.

அடுத்ததாக தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸ்களின் தரத்தை பலவீனமானது அல்லது இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இவர்கள் எவ்வாறு தவறிழைத்துள்ளனர் என்பது பற்;றி விபரமாக எழுதுவதே இச்சிறு நூலின் நோக்கமாகும்.

தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக ஒன்பது அறிவிப்புக்களை முன்வைத்துள்ள இவர்கள் ஒவ்வொரு ஹதீஸினது அறிவிப்பாளர் வரிசையையும் எடுத்து அவற்றில் வரும் அறிவிப்பாளர்களில் யாரைப்பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் குறைகூறியுள்ளனரோ அதுபற்றி விபரமாக எழுதியுள்ளனர்.

இந்த சர்ச்சை சம்பந்தமாக தெளிவான விளக்கத்தைப் பெற விரும்புபவர்கள் இந்த இடத்திலே ஹதீஸ் கலையின் சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதில் தவறுவிடும்போதுதான் சரியான முடிவை அடைந்து கொள்வதிலும் தவறிவிட நேர்ந்து விடுகின்றது. இதனால் பிழையான முடிவை அடைந்த எல்லோரும் இந்தக் காரணத்தினால்தான் பிழைவிட்டனர் என்றும் கூறிவிடமுடியாது. ஏனெனில் ஒரு சிலர் சுய இலாபத்திற்காகவும் சத்தியத்தை மறுக்கின்றனர்.

ஹதீஸ்கலையில் பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது எனும் இரண்டு வகையான செய்திகளையும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட முடியா விட்டாலும் அந்த இரண்டு வகைகளும் வேறுவேறாகக் கூறப்படுவதிலிருந்தே அந்த இரண்டிற்குமிடையில் வித்தியாசம் இருக்கின்றது என்பதை மக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்பு என்பது அந்த அறிவிப்பாளர் வரிசையில் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது பொய் சொல்லக்கூடியவர் இருக்கின்றார் என்பது பொருளாகும். எனவே இட்டுக்கட்டப்பட்டது என உறுதியாகிவிட்டால், அந்த செய்தி தூர எறியப்பட்டுவிடும்.

ஹதீஸ் பலவீனமானது எனக்கூறப்படுவதன் பொருள் அதன் அறிவிப்பாளர்களில் பொய்யர்கள் இருக்கின்றார்கள் என்பதல்ல. மாறாக அந்த அறிவிப்பு உறுதியான, நம்பிக்கைதரக்கூடிய தரத்தில் இல்லை என்பதுவே பொருளாகும். எனவே இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப் புறக்கணிப்பது போன்று பலவீனமான ஹதீஸை, ஹதீஸ்கலை அறிஞர்கள் புறக்கணிப்பதில்லை. அத்துடன் உறுதி ஏற்படவில்லை எனும் காரணத்தினால் ஒதுக்கப்பட்ட ஹதீஸைப் பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்தக்கூடிய சான்றுகள் கிடைக்கும் போது பலவீனமான நிலையிலிருந்த அந்த ஹதீஸை பலமான ஹதீஸ்களின் பட்டியலிலே ஹதீஸ்கலை அறிஞர்கள் சேர்த்து விடுவார்கள். இது எப்படியெனில் நேர்மையானவராகவும், பொய் சொல்லாதவராகவும் எம்மால் அறியப்பட்ட ஒருவர் அவரது வயது முதிர்ந்த நிலையில் எம்மிடம் ஒரு செய்தியைச் சொல்வதை ஒத்த தாகும். ஞாபக சக்தி குறைந்துவிட்டதனால் அவர் கூறுவதை எப்படி முழுமையாக நம்புவது எனும் சிந்தனையில் நாம் இருக்கும்போது அதேபோன்ற இன்னுமொரு மனிதரும் வந்து, அதேபோன்ற செய்தி யைச் சொல்லும்போது எமக்கு அந்த செய்தி பற்றிய நம்பிக்கை உறுதியாகிவிடுகின்றதல்லவா....? உண்மை என்னவென்றால் இவ்வளவு ஆழ ஊடுருவி இத்தகைய நுணுக்கங்களை அடைந்து கொள்வதற்கு பரந்துபட்ட அறிவும், நிதானமான ஆய்வும் மிக மிக அவசியமாகும்.

நாம் இங்கு தெளிவுபடுத்தியுள்ள உண்மையை தஸ்பீஹ் தொழுகையை மறுக்கும் பீ. ஜே. யே அவரது ஆய்வில் உண்மைப் படுத்தியுள்ளதைக் கவணியுங்கள். தஸ்பீஹ் தொழுகைக்கானஆதாரமாக முன்வைக்கப்படும் ஹதீஸைப் பலவீனமானது எனக் கூறி அதனை மறுத்து, அதில் வரக்கூடிய ஒரு அறிவிப்பாளர் பற்றி எழுதும்போது பின்வறுமாறு பீ. ஜே. எழுதியுள்ளார்:-

அபூராஃபியு (ரலி) அவர்கள் வழியாகப்பதிவு செய்த மற்றொரு இமாம் பைஹகீ அவர்கள் தனது அஸ்ஸுனுல் குப்ரா எனும் நூலில் இடம்பெறும் வேறொரு செய்தியைப்பற்றி கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார். இவர் பலவீனமானவராவார்.
(நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)


இதிலே நாம் இரண்டு விடயங்களைக் கவணிக்க வேண்டும்.

1 - இமாம் பைஹகீ அவர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றிய அறிவிப்பில் வரக்கூடிய அறிவிப்பாளரை பலவீனமானவர் எனக்கூறியிருப்பது.

2 - இமாம் பைஹகீ அவர்கள் மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கின்றார் எனக்கூறியிருப்பது.

மேற்கண்ட இரண்டு விடயங்களையும் கவணித்தவர்கள் பீ. ஜே. தஸ்பீஹ் தொழுகையை மறுக்கும் அதேவேளை நாம் கூறிய உண்மையை ஏற்றுக்கொண்டிருப்பதனை விளங்கிக் கொள்ள முடியும். அதாவது ஷஷமூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கும் ஹதீஸை ஏற்க முடியாது, அதேநேரம் அவரது அறிவிப்பிற்கு சான்றுகளும், துணைகளும் கிடைத்துவிட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக உறுதிபெற்றுவிடும் என்பதே அந்த உண்மையாகும்.

தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரங்கள்

தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக முக்கியமான இரண்டு ஹதீஸ்கள் காணப்படுகின்றன.
1 - ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபை நோக்கிக் கூறியதாவது:- அப்பாஸே! எனது பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? உங்களுக்குக் கொடுக்கட்டுமா? உங்களுக்குக் கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களில் பத்து விடயங்களை ஏற்படுத்தட்டுமா? அதனை நீங்கள் செய்தால் அழ்ழாஹ் உங்களது பாவங்களில் முன்னையது, பின்னை யது, பழையது, புதியது, தவறுதலாக செய்தது, தெரிந்து கொண்டே செய்தது, சிறியது, பெரியது, இரகசியமானது, பரகசியமானது ஆகிய அனைத்தையும் மன்னித்துவிடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரதுல் பாதிஹாவையும் மற்றொரு ஸூராவையும் ஓத வேண்டும். முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே ஸுப்ஹானழ்ழாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லழ்ழாஹு வழ்ழாஹு அக்பர் என பதினைந்து முறை கூறுங்கள். பின்னர் நீங்கள் ருகூஃ செய்து ருகூஃவில் இருந்த வண்ணம் அதனைப் பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ருகூஃவிலிருந்து உயர்த்தி அதனைப் பத்து விடுத்தம் கூறுங்கள். பின்னர் குணிந்து ஸுஜூது செய்து, ஸுஜூதுசெய்த நிலையிலேயே அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி பத்து முறை கூறுங்கள், பின்னர் ஸுஜூது செய்து பத்து முறை அதனைக் கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்து முறை கூறுங்கள். எனவே அது ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தி ஜந்தாகும். அதனை நான்கு ரக்அத்துக்களிலும் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒருமுறை உங்களால் செய்ய முடிந்தால் செய்துகொள்ளுங்கள், அவ்வாறு செய்யாவிட்டால் ஒவ் வொரு வெள்ளிக்கிழமையிலும் ஒரு முறை (செய்துகொள்ளுங்கள்,) அவ்வாறு செய்யாவிட்டால் ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை (செய்துகொள்ளுங்கள்,) அவ்வாறு செய்யாவிட்டால் ஒவ்வொருவருடத்திலும் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்,) அவ்வாறு செய்யாவிட்டால் உங்களது வாழ்நாளில் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்,)

(அபூதாவூத் - கி.ஸலாத்)

2- அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு)அவர்களை நோக்கி ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எனது பெரிய தந்தையே! உங்களைச்சேர்த்து நடக்கட்டுமா? உங்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்குப் பிரயோசனம் அளிக்கட்டுமா? எனக் கேட்டார்கள். ஆம் அழ்ழாஹ்வின் தூதரவர் களே! என (அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) ) கூறினார்கள். அப்போது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எனது பெரிய தந்தையே! நான்கு ரக்அத்துக்கள் தொழுங்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாதிஹாவையும், மற்றொரு ஸூராவையும் ஓதிக்கொள்ளுங்கள். ஓதல் முடிந்ததும் அழ்ழாஹு அக்பர், வல்ஹம்துலில்லாஹ், வஸுப்ஹானழ்ழாஹ், வலா இலாஹ இல்லழ்ழாஹ் என ருகூஃ செய்வதற்கு முன்னர் பதினைந்து முறை கூறுங்கள், பின்னர் ருகூஃ செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் ஸுஜூது செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனைப் பத்துமுறை கூறுங்கள், பின்னர் இரண்டாம் முறை ஸுஜூது செய்து அதனைப் பத்து முறை கூறுங்கள், பின்னர் உங்களது தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னர் அதனைப் பத்து முறை கூறுங்கள். அது ஒவ்வொரு ரக்அத்திலும் எழுபத்தி ஐந்து விடுத்தமாகும். அது நான்கு ரக்அத்துக்களில் முன்நூறு விடுத்தமாகும். உங்களது பாவம் அடர்ந்த மணலினளவு இருந்தாலும் அவற்றை அழ்ழாஹ் உங்களுக்கு மன்னித்துவிடுவான் எனக் கூறினார்கள். (அதற்கு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) ஒரு நாளையிலே அவற்றைச் செய்ய யாருக்குத்தான் முடியும்? எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) ஒவ்வொரு நாளும் உங்களால் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக் கிழமையில் ஒருமுறை செய்யுங்கள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உங்களால் செய்யமுடியாவிட்டால் மாதத்தில் ஒரு முறை செய்யுங்கள்,
வருடத்தில் ஒரு முறையாவது செய்யுங்கள் எனும் அளவுவரை அதனைக் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

(திர்மிதி - கி.வித்ர்)

இங்கு நாம் தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானது என்பதற்கு இரண்டு ஹதீஸ்களை முன் வைத்துள்ளோம். அந்த இரண்டு ஹதீஸ்கள் பற்றியும் தஸ்பீஹ் தொழுகையை மறுக்கும் பீ.ஜே. என்ன கூறுகின்றார் என இப்போது பார்ப்போம்.

இங்கு நாம் இக்ரிமா வழியில் இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை முதலாவது ஆதாரமாக முன் வைத்துள்ளோம். அந்த ஹதீஸை விமர்சித்து பீ. ஜே. பின்வரு மாறு எழுதுகின்றார்:-
இந்த ஹதீஸ்தான் தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்பவர்கள் வலிமையான ஆதாரமாகக்காட்டக்கூடிய செய்தியாகும். இந்தச்செய்தியின் தரம் என்ன? ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தி தொடர்பாக என்ன கருத்துக் கூறுகின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. அதில் ஏற்றமானது இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும் என்று ஹாபிழ் முன்திர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பதுல் அஹ்வதீ)

இக்ரிமா, இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர் தொடரைப்போன்று அழகிய தொடர், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வேறு எதிலும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகின்றார்கள். (துஹ்பதுல் அஹ்வதீ)

இப்னுல்ஜவ்ஸீ அவர்கள் இச்செய்தியில் இடம்பெறும் மூஸா பின் அப்துல்அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று விமர்சித்து இப்னு அபப்hஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை இட்டுக்கட்டப்பட்டது என்று குறிப்பிடுகின்றார்கள். இதற்கு மறுப்புத்தெரிவிக்கும்போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள்

மூஸா பின் அப்துல்அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று சொல்லும் இப்னு ஜவ்ஸீன் கூற்று தவறானதாகும். ஏனெனில் இமாம் நஸயீ, இப்னுமயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று பதிலளிக்கிறார்கள்.(துஹ்பதுல் அஹ்வதீ)

இவ்வாறு பலர் இச்செய்தியைப்பற்றிக் குறிப்பிட்டாலும் இதில் குறைபாடு உள்ளது என்பதை மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக உறுதிப்படுத்தும் ஹதீஸ்கள் கிடையாது என்று இமாம் உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக ஆதாரப்பூர்வமான, ஹஸன் நிலையில் உள்ள ஹதீஸ்கள் கிடையாது. இப்னுல்ஜவ்ஸீ அவர்கள் தஸ்பீஹ் தொழுகை தொடர்பான ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று மிகைப்படுத்தி சொல்லியுள்ளார்கள் என அபூபக்ர் பின் அல்அரபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் அப்துல்அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் சிலவேளைகளில் தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று அபுல் ஃபழ்ல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்னுல் மதீனீ அவர்கள் இவர் பலவீனமாhனவர் என்று குறிப்பிடுகிறார்கள். (இமாம் தஹபீ) நான் கூறுகிறேன், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப் படுபவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவைகள். (இச்செய்தியை அவர் அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலமே அறிவித்துள்ளார்) மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை.
(நூல் : மீஸானுல் இஃதிதால பாகம் 6, பக்கம் 550)

மூஸா பின் அப்துல்அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கோளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். (நூல் தக்ரீபுத்தஹ்தீப் பாகம் 1 பக்கம் 552)

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இவ்வாறு பல விதமான விமர்சனங்களைக் குறிப்பிடும் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக இவ்வாறு கூறுகிறார்கள்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷhத் ஆகும்.(அரிதானது, நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது) இந்தச் செய்தியில் கடுமையான தனிக்கருத்துக்கள் இருப்பதாலும் இதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும் மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன்முறைஇருப்பதாலும் (இச்செய்தி பலவீனம் அடைகிறது) மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமியா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம் 2. பக்கம் 8) 


இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்களின் ஹதீஸ் பற்றி பீ. ஜே. முன்வைக்கும் அனைத்துக் குற்றச் சாட்டுக்களையும் அப்படியே உங்கள் முன்னால் எடுத்து வைத் துள்ளோம். அதில் முதலாவது குற்றச்சாட்டுக்கான பதிலை அவரே தந்திருப்பதை அவரது வாசகத்தைப் படிப்பவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். அதாவது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலுள்ள மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்பதை எடுத்து எழுதிவிட்டு, அந்தக்கூற்று தவறானது என இமாம் இப்னு ஹஜர் நிரூபித்திருப்பதையும் எடுத்து எழுதியுள்ளார். எனவே அந்த முதலாவது குற்றச்சாட்டு அர்த்தமற்றதாகி விடுகின்றது.

இரண்டாவதாக மேற்குறிப்பிடப்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்தே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது எனும் குற்றச் சாட்டையும் இமாம் ஜவ்ஸீ அவர்கள் முன்வைத்திருந்தார்கள். முன்வைத்த காரணம் தவறு என்பதால் அதனடிப்படையில் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டும் தவறு என்றாகி விடுகின்றது. எனவே ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவு எவ்வித அடிப்படையுமற்றது.

அடுத்ததாக இதில் குறைபாடு உள்ளது என்பதை மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என பீ. ஜே. விபரிக்காமல் கூறியுள்ளார். அது என்ன என்பதைத் தெளிவுபடுத்தாத வரையில் அந்தக் குற்றச்சாட்டு ஹதீஸ் கலையில் குறைபாடாகக் கருதப்படமாட்டாது.
உண்மையில் மற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் என்ன கூறியுள்ளார்கள் எனப் பார்த்தால் மார்க்கத்தில் தஸ்பீஹ் தொழுகை என்பது அன்று தொடக்கம் இன்றுவரை நடைபெற்று வரக்கூடிய நற்செயல் என்பதாகவே நிரூபனமாகின்றது. உதாரணமாக பீ. ஜே. இங்கு குறிப்பிடாத சில இமாம்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக என்ன கூறியுள்ளார்கள் என்பதை இந்த இடத்தில் உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.

இமாம் திர்மிதி அவர்கள் அபூராபிஃ வழியாக வரும் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸைப் பதிந்துவிட்டு எழுதுகின்றார்கள்:-

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களைத் தொட்டும் பல ஹதீஸ்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றிலே அதிகமானவை ஸஹீஹானவையல்ல. இந்த விடயத்திலே இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு), அப்துழ்ழாஹ் இப்னு உமர் (ரலியழ்ழாஹுஅன்ஹு), பழ்ல் இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) போன்றோர் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவாளிகளில் நின்றும் இப்னுல் முபாரக் உட்பட பலர் தஸ்பீஹ் தொழுகை பற்றி அறிவித்திருப்பதுடன், அதன் சிறப்புப் பற்றியும் கூறியுள்ளனர்.

இமாம் இப்னு ஹஜர் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

முன்னால் தோன்றிய இமாம்களும், பின்னர் வந்த இமாம்களும் இந்த ஹதீஸை ஸஹீஹ் என ஏற்றுக்கொள்வதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இமாம் இப்னு ஹுஸைமா, இமாம் ஹாகிம் போன்றோர் இதனை ஸஹீஹ் (ஏற்றுக்கொள்ளப்படுவதில் உயர்தரம்) எனக்கூறியிருக்க, அறிஞர் கூட்டம் ஒன்று இதனை ஹஸன் (ஏற்றுக்கொள்ளப்படுவதில் தரம் குறைந்தது) எனக் கூறியுள்ளது.
(மிர்காத் : பாகம் :03 பக்கம் :993)
உண்மையைத் தேடும் நேர்மையான உள்ளங் கொண்டவர்களே! மற்ற ஹதீஸ்கலை அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக என்ன கூறியுள்ளார்கள் என்பதற்கு இரண்டு இமாம் களினது கூற்றை மட்டும் மேலே தந்துள்ளோம். அந்த இரண்டு இமாம்களும் பொதுவாக ஏனைய இமாம்கள் என்ன கூறியுள்ளனர் என்பதைக் கூறிவிட்டனர்.

இந்த இரண்டு இமாம்களும் குறிப்பிட்டவர்களுள் இமாம் ஹாகிமும் இடம்பெறுகிறார்கள். தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸின் அறிவிப்பாளர்களில் பலவீனமானவர் உள்ளார் எனக்கூறிய அதே இமாம் ஹாகிம், ஒட்டுமொத்தமாக தஸ்பீஹ் தொழுகை என வரும்போது அதனை ஸஹீஹ் எனக்கூறுகின்றார்கள். இதுதான் இந்த ஆய்வின் ஆரம்பத்தில் வாசகர்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஹதீஸ் கலை உண்மை என நாம் உங்களுக்கு முன்வைத்ததாகும். எனவே ஹதீஸ்கலை அறிஞர்கள் ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையிலே வரக்கூடிய அறிவிப்பாளரைப் பலவீ னமானவர் எனக் கூறுவதை வைத்து, அந்த ஹதீஸையே பலவீன மானது என விளங்கிக்கொண்டால் அது அவ்வாறு விளங்கியவருக்கு ஹதீஸ் கலை பற்றிய அறிவு போதாது என்பதையே காட்டும். மாறாக அவரது முடிவு ஹதீஸ்கலை விதிகளின் அடிப்படையில் சரியானது என்பது பொருளல்ல.

அதனையடுத்து பீ. ஜே. "தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக உறுதிப்படுத்தும் ஹதீஸ்கள் கிடையாது" என்ற தனது வாதத்தை நிரூபிப்பதற்காக அவ்வாறான ஹதீஸ்கள் இல்லை எனக் கூறும் இரண்டு இமாம்களது கூற்றுக்களை முன்வைத்துள்ளார்.

முழுமையான அறிவு கொடுக்கப்பட்டவர் உலகிலே எவரும் இல்லை. மூஸா அவர்களிடம் உலகில் மிகப்பெரிய அறிவாளி பற்றிக் கேட்கப்பட்டதும், தன்னைவிட உயர்ந்தவர் எவருமில்லை எனக்கூறினார்கள். இல்லை உம்மைவிட அறிந்தவரானஹிழ்ர் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் செல்லுங்கள் எனக் கூறி அழ்ழாஹ் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அனுப்பிவைத்தான் என்பது ஸஹீஹுல் புஹாரியிலே பதிவாகியுள்ள சம்பவமாகும். இதனடிப்படையில் "இல்லை எனப்படும்போது இருப்பதாக எவரும் நிரூபித்தால் இருக்கின்றது என்பதே ஹதீஸ்கலையில் ஏற்றுக் கொள்ளப்படும்" என்பதும் ஹதீஸ்கலை விதிகளில் ஒன்றாகும்.

ஆகவே ஆதாரபூர்வமாக தஸ்பீஹ் தொழுகை இருக்கின்றது என நிரூபிக்கப்பட்ட பின், அதனை மறுத்து எவராவது ஒரு இமாம் கூறியுள்ளார் என்றால் அந்த விடயம் குறிப்பிட்ட அந்த இமாமின் அறிவுக்கு எட்டவில்லை என்பதுவே முடிவாகும். இதற்கு ஆதாரமாக மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சம்பவத்தை முன்வைத்து விட்டோம். எனவே மேற்கண்ட இரு இமாம்களினதும் கூற்று ஆதாரபூர்வமான ஹதீஸிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே உண்மையாகும்.

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நாம் முன்வைத்த முதலாவது ஹதீஸைக் குறைகாண்பதற்காக பீ. ஜே. முன்வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டு, அதன் அறிவிப்பாளர் வரிசையில் நான்காவது இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்பதாகும். இதனை நிரூபிப்பதற்காக ஹதீஸ் கலையில் அனேகமாக சரியான, நடுநிலையான முடிவைக் கூறுபவராகக் கருதப்படும் இமாம் இப்னு ஹஜர் அவர்களினது கூற்றையும் எடுத்துவைத்துள்ளார்.

இந்த விடயத்தில் பீ.ஜே. கூறக்கூடிய விடயம் உண்மை என்பதால் நாம் அதனை அப்படியே அங்கீகரிக்கின்றோம். அதில் எங்களுக்கு வேறு கருத்துக் கிடையாது. அதாவது மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்பது உண்மையே. உண்மையை எவர் கூறினாலும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்வதுவே உண்மை முஸ்லிம்களினதும், சுவனத்தை ஆதரவு வைப்பவர்களினதும் பண்பாகும். ஆகவே முஸா பின் அப்தில் அஸீஸ் பலவீனமானவர் என்பதை நாம் ஏற்றக்கொள்கின்றோம்.
மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்பதை இமாம் இப்னு ஹஜர் எவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் என்பதையும் நாம் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கோளாறு உள்ளவர் என்றுதான் இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள். இவ்வாறு கூறியதிலிருந்து மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவரது அறிவிப்புக்கள் தூக்கி வீசிவிட வேண்டியவையா.....? அல்லது சான்றுகள், துணைகள் கிடைக்கும்போது ஏற்றுக்கொள்ளும் தரத்தை அடைந்துவிடும் என்பதனால் மேலதிக ஆய்வுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட வேண்டியவையா..........? என்பதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்துவிட முடியும். ஏனெனில் ஏற்கெனவே இது பற்றிய தெளிவை இந்த ஆய்வின் ஆரம்பத்தில் உங்களுக்கு நாம் தந்துள்ளோம்.

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நாம் முன்வைத்த முதலாவது ஹதீஸைக் குறைகாண்பதற்காக பீ. ஜே. முன்வைத்துள்ள இறுதிக் குற்றச்சாட்டு, இமாம் இப்னு ஹஜரின் கூற்றாகும்.

பீ. ஜே. தனது ஆய்வை முடிப்பதற்கும் இமாம் இப்னு ஹஜரின் முடிவையே பயன்படுத்தியுள்ளார். எனவே இமாம் இப்னு ஹஜரின் முடிவு சம்பந்தமாக இரண்டாவது ஹதீஸ் பற்றிய குற்றச் சாட்டுகளுக்குப் பதில் அளித்ததன் பின்பு இரண்டிற்கும் சேர்த்து ஒன்றாகவே தெளிவான பதிலை இன்ஷh அழ்ழாஹ் முன்வைப்போம்.

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நாம் முன்வைத்த இரண்டாவது ஹதீஸைப்பற்றி பீ. ஜே. எடுத்து வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

அதுபற்றி பீ.ஜே. கூறுவதாவது:-
அபூராபிவு (ரலி) அவர்களின் ஹதீஸின் தரத்தைப்பற்றி ஆய்வு செய்வோம்.
அபூராபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனுஸ் ஸுக்ரா, இமாம் தபரானி
அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூற்களில் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷPத் அர்ரபதீ என்பவரே இடம்பெறுகிறார்.

இதில் இடம்பெறும் மூஸா பின் உபைதா பின் நஷPத் அர்ரபதீ என்பவர் நம்பகமானவரா? ஆதாரத்திற்கு ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவரா? என்பதைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப்பார்ப்போம்.

முதலில் இச்செய்தியைப்பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக்காண்போம்.

மூஸா பின் உபைதா என்பவர் நல்லவர் எனினும் அவரது நினைவாற்றல் (குறைவு) காரணத்தினால் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கியுள்ளனர். (நூல்: திர்மிதீ 1078)

மூஸா பின் உபைதா அர்ரபதீ என்பர் அபூ அப்துல் அஸீஸ் என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டவர். இவரின் நினைவாற்றல் காரணமாக யாஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் மற்றும் இவரல்லாதவர்களும் விமர்சித்துள்ளனர். மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமாக்கப்பட்டவர். யஹ்யா பின் ஸஈத் மற்றும் இவரல்லாதவர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். (நூல்: திர்மிதீ3262)

இவரைப்பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ கேட்டபோது....

முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக்கொள்ளமாட்டேன் என இமாம் புகாரி குறிப்பிட்டார்கள்.
(நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம் 1, பக்கம் 309) அபூராஃபிவு வழியாகப் பதிவு செய்த மற்றொரு இமாம் பைஹகீ அவர்கள் தனது அஸ்ஸுனுல் குப்ரா என்று நூலில் இவர் இடம்பெறும் வேறொரு செய்தியைப்பற்றி கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார். அவர் பலவீனமானவராவார். (நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)

இமாம் புகாரி அவர்கள் தனது தாரிகுல் கபீர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

மூஸா பின் உபைதா பின் நஷPத் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப் பட்டவர். இவ்வாறு அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள். அந்நாட்களில் (அவர் வாழும் நாட்களில்) அவரை விட்டும் நாங்கள் தவிர்ந்து வந்தோம்
என்று கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள். (தாரிகுல் கபீர் பாகம் 7, பக்கம் 291)

இதே கருத்தை இமாம் புகாரீ அவர்களின் இயற்றிய இன்னொரு நூலான அத்தாரிகுஸ் ஸகீரிலும் குறிப்பிட்டுள்ளார்கள் (பாகம் 2, பக்கம் 93)

மூஸா பின் உபைதா என்பவரை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் முக்கியமானவர் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ஆவார்கள். அவர்களின் விமர்சனத்தைக் காண்போம்.

எனது கருத்துப்படி மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகளை பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகள் எழுதப்படாது. அவரிடமிருந்து எந்தவொன்றையும் நான் வெளியிட மாட்டேன். அவரின் ஹதீஸ்கள் மறுக்கப்படவேண்டியவை என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின்மூலம் மூஸா பின் உபைதா
என்பவர் அறிவித்த ஹதீஸை கடந்து சென்றபோது இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இது மூஸாபின்உபைதா என்பவரின்சரக்கு என
கூறிவிட்டுதனது வாயை மூடி கோணலாக்கியவாறு தனது கையை உதறினார்கள். மேலும் இவர் ஹதீஸை (முறைப்படி) மனனம் செய்தவரில்லை என்றும் குறிப் பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ பாகம் 6, பக்கம் 334)

மூஸா பின் உபைதா, இஸ்ஹாக் பின் அபீஃபர்வா, ஜுவைபிர், அப்துர் ரஹ்மான் பின் ஸியாத் ஆகிய நான்கு நபர்களின் செய்திகள் எழுதப் படாது என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: லுஅஃபாஉல் உகைலீ பாகம் 3, பக்கம் 161)

மூஸா பின் உபைதா அர்ரபதீ, அப்துர் ரஹ்மான் பின் ஸியாத்அல் இஃப்ரீகீ ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதமாட்டேன் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல்அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(நூல்: ஹாகிம் பாகம் 2, பக்கம் 251)

அவருடைய ஹதீஸ் என்னிடத்தில் எந்த மதிப்பும் அற்றது என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள். நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம் 320)
இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் மூஸா பின் உபைதாவைப்பற்றி.......

உறுதியான நினைவாற்றல் கோட்டைவிடுபவர் எதற்கு அடிப்படை இருக்காதோ அப்படிப்பட்ட செய்திகளை யூகமாகக் கொண்டு வருவார். நம்பகத்திற்குப்பாத்திரமானவர்களின் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு அடிப்படையற்றசெய்தியை அறிவிப்பார். எனவே தகவல் என்றகோணத்தில் இவரை ஆதாரமாகக்கொள்ளுதல் நீங்கிவிடுகிறது. அவர் தன் அளவில் சிறந்தவராக இருந்தாலும் சரியே
(நூல்: மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 235)

இமாம் இன்னுமயீன் அவர்கள் மூஸா பின் உபைதாவைப்பற்றி.......

மூஸா பின் உபைதா பலவீனமானவர். (நூல்: தாரீக் இப்னு மயீன் பாகம் 1, பக்கம் 199)
இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது என்று இப்னுமயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்
(நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம் 320)

மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று இப்னு மயீன் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம் 320)

மூஸா பின் உபைதா என்பவரைப்பற்றி இன்னும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

மூஸா பின் உபைதா என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவராவார்.இவர் மறுக்கப்படவேண்டிய ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அலீ பின் அல்மதீனீ அவர்களும் ஹதீஸ் துறையில் வலிமைவாய்ந்தவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அபூஹாத்தம் அவர்களும் பலவீனமானவர் என்று ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் நம்பகமானவர் இல்லை என்றும் இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப் பாகம் 10, பக்கம் 320)

இமாம் அஹ்மத் அவர்களிடம் மூஸா பின் உபைதா என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(நூல்: தஹ்தீபுல் கமால் பாகம் 29, பக்கம் 112)


இவைதான் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நாம் முன்வைத்த இரண்டாவது ஹதீஸ் பற்றி பீ. ஜே. முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள். இந்த முழுக் குற்றச்சாட்டையும் எடுத்துப் பார்த்தால் அதில் இரண்டு விடயங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

1 - மூஸா பின் உபைதா பலவீனமானவர்

2 - மூஸா பின் உபைதா என்பவரை இமாம் அஹ்மத்
பின் ஹம்பல் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

இந்த இரண்டு விடயங்கள் தவிர இரண்டாவது ஹதீஸ் பற்றிய பீ.ஜே.யின் குற்றச்சாட்டில் வேறு எதுவுமே கிடையாது.

விமர்சித்தவர்கள் கூட அவரளவில் அவர் நேர்மையானவர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதை வாசகர்கள் இங்கு முதலாவது நோக்க வேண்டும். இரண்டாவதாக மூஸா பின் உபைதா என்பவரை மிகக்கடுமையாக விமர்சித்த இமாம் அஹ்மத் பின் ஹம்பல் உட்பட அனைவரும் அவரைப் பலவீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். மூஸா பின் உபைதா வைப் பலவீனமானவர் எனக் கூறுகின்ற அனேகமான இமாம்களின் கூற்றுக்களை ஊன்றிக் கவனிக்கும்போது அவரது ஞாபகசக்தியின் குறைவையே கூறுகின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இவை அனைத்தும் எமக்கு உணர்த்தக்கூடிய செய்தி என்ன வெனில் மூஸா பின் உபைதா என்பவரின் செய்தி அவர் மட்டும் தனித்து அறிவிக்கும்போது அந்தச் செய்தி ஆதாரத்திற்கு உரியதாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு உறுதியானதல்ல என்கின்ற அதேநேரம், மூஸா பின் உபைதாவின் செய்தியை உண்மைப் படுத்தக்கூடிய ஒரு சான்று கிடைக்கும்போது அவரது செய்தியிலுள்ள பலவீனம் நீங்கிவிடுகின்றது என்பதாகும். இதனை உண்மைப் படுத்தக்கூடிய வாசகங்களை பீ. ஜே. தனது குற்றச்சாட்டுக்கு முன் வைத்த ஆதாரத்திலேயே காணலாம். இமாம் பைஹகியின் கூற்றாக:-

இச்செய்தியை மூஸா பின் உபைதா தனித்து அறிவிக்கிறார்.அவர் பலவீனமானவராவார்.
(நூல்: பைஹகீ பாகம் 5, பக்கம் 117)
என பீ. ஜே. அவரது ஆய்விலேயே குறிப்பிட்டுள்ளார்.

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக நாம் முன்வைத்த இரண்டாவது ஹதீஸில் வரக்கூடிய மூஸா பின் உபைதா பலவீனமானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அதே
போன்று அவர் பற்றி மிகக் கடுமையாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் விமர்சித்துள்ளார்கள் என்கின்ற செய்திகள் இருப்பதும் உண்மைதான். எனவேதான் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்களது இந்த நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து முக்கியமான ஹதீஸ் கலை அறிஞரான இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கான பதிலில் இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானதா? அல்லது ஆதாரமற்றதா? என்பதற்கான பதிலும் மிக விரிவாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

மிஷ;காத்துல் மஸாபீஹ் எனும் ஹதீஸ் தொகுப்பில் காணப்படும் சில ஹதீஸ்கள் பற்றி இமாம் இப்னு ஹஜர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் உட்பட பல இமாம்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்டவை எனக் கூறுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? என்பதும் ஒன்றாகும். அதற்கு இமாம் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு பதில் எழுதியுள்ளார்கள் :-

இமாம் அஹ்மத் அவர்களைத் தொட்டும் அவ்வாறு கூறப்படுவதில் சிக்கல் இருக்கின்றது. ஏனெனில் அவர்களைத் தொட்டும் முரண்பட்ட செய்திகள் வந்துள்ளன. இந்த ஹதீஸைப் பற்றி இட்டுக் கட்டப்பட்டது என அவர்கள் கூறியதாக எவரும் தெளிவாகக் கூறவில்லை.

அஷ; iஷஹ் அல் முவப்பிக் இப்னு குதாமா அவர்கள் அபூபக்ர் அல் அஸ்ரம் அவர்களைத் தொட்டும் அறிவிப்பதானது :-
இமாம் அஹ்மத் அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள்:- அது எனக்கு விருப்பமானதாக இல்லை, அது பற்றிய (ஹதீஸ்களிலே) ஸஹீஹானது எதுவும் இல்லை எனக் கூறி மறுப்பவரைப் போன்று தங்களது கையை உதறிவிட்டார்கள்.
அஷ;iஷஹ் அல்முவப்பிக் கூறுகிறார்கள்:"அது (தஸ்பீஹ் தொழுகை) சம்பந்தமாக எந்தவொரு ஹதீஸையும் இமாம் அஹ்மத் அவர்கள் உறுதிப் படுத்தவில்லை, அதனை முஸ்தஹப்பானது எனக் கருதவும் இல்லை, எவரேனும் ஒரு மனிதர் அதனைச் செய்தால் குற்றமில்லை."

(இமாம் இப்னு ஹஜர்) கூறுகிறேன்: நிச்சயமாக இமாம் அஹ்மத் அந்தக் கருத்திலிருந்து வாபஸ் பெற்றுவிட்டார் என்பதாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. அலிய்யிப்னு ஸஈத் அன்னஸாஇ கூறுகின்றார்கள்:- இமாம் அஹ்மத் அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகை பற்றிக் கேட்டேன். என்னிடம் அது சம்பந்தமானவை எதுவுமே ஸஹீஹானது அல்ல எனக் கூறினார்கள். அப்போது நான் முஸ்தமிர் பின் ரையான் அபுல் ஹுரைராவைத் தொட்டும், அவர் அப்துழ்ழாஹ் பின் அம்ரைத் தொட்டும் எனக்கூறினேன். உடனே உமக்கு யார் இந்த ஹதீஸை அறிவித்தது......? எனக் கேட்டார்கள். முஸ்லிம் பின் இப்ராஹீம் என நான் கூறினேன். அதற்கவர்கள் அந்த அறிவிப்பாளர் தொடரைப் பற்றி திருப்தியடைந்தவரைப் போன்று "முஸ்தமிர் உறுதியானவராயிற்றே!" எனக் கூறினார்கள்.

எனவே இமாம் அஹ்மத் அவர்கள் பற்றி வரக்கூடிய இந்த அறிவிப்பு இமாமவர்கள் தங்களது முடிவிலிருந்து ( தஸ்பீஹ் தொழுகை ) முஸ்தஹப் எனும் முடிவிற்கு மாறிவிட்டார்கள் என்பதைக் காட்டுகின்றது. இமாமவர்களைத் தொட்டும் ஏனையோர் இதுவல்லாதவற்றை அறிவித்திருப்பதைப் பொறுத்த வரையிலும் அது (தஸ்பீஹ் தொழுகை) சம்பந்தமான ஹதீஸ்களை உறுதிப்படுத்தி, அதன்படி அமல் செய்தவர்களுக்கு முரணானதாகும்.

தொடர்ந்தும் இமாம் இப்னு ஹஜர் கூறுகின்றார்கள்:-

(தஸ்பீஹ் தொழுகை) சம்பந்தமான ஹதீஸ்களை இமாம்களும், ஹதீஸ்கலை வல்லுனர்களுமாகிய அபூதாவூத் தங்களது ஸுனனிலும், திர்மிதி தங்களது ஜமிஇலும் பதிந்து வைத்துள்ளார்கள். இப்னு ஹுஸைமா தங்களது ஸஹீஹில் பதிந்து விட்டு, ஹதீஸ் ஸஹீஹாக இருந்தால் என்று கூறியிருக்கிறார்கள். இமாம் ஹாகிம் தங்களது முஸ்தத்ரகில் பதிந்துவிட்டு, இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள். இமாம் தாரகுத்னீ இதுபற்றிய அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளையும் ஒன்று சேர்த்து ஒரே தொகுப்பாக மாற்றியிருக்கின்றார்கள். பின்னர் இமாம் ஹதீப் அவர்களும் அவ்வாறு செய்துள்ளார்கள். பின்னர் ஹாபிழ் அபூமூஸா அல் மதீனீ அவர்களும் இவ்வாறு தொகுத்து, தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானது என நிரூபித்தல் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.

இந்த அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளில் இருந்தும், பத்து ஸஹாபாக்களைத் தொட்டும் தொடர்பு அறுபடாத அறிவிப்பாளர் வரிசைகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. மேலும் பல்வேறு தாபியீன் களினின்றும் முர்ஸலான (தாபியீன்களுடன் நின்று விடக்கூடியது ) அறிவிப்பாளர் வரிசைகளும் கிடைத்துள்ளன.

இமாம் திர்மிதீ தங்களது ஜாமிஇல் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக வந்தவை எனத் தலைப்பிட்டு அனஸ் அவர்களைத் தொட்டும் ருகூஃ, ஸுஜூதிலே சொல்லப்படும் தஸ்பீஹ்களுக்கு மேலதிகமாக பொதுவாக தொழுகையிலே சொல்லும் தஸ்பீஹ் பற்றிய ஹதீஸைப் பதிந்ததன் பின் கூறுகிறார்கள்:-

அப்துழ்ழாஹ் பின் அப்பாஸ்(ரலியழ்ழாஹுஅன்ஹு), அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரலியழ்ழாஹுஅன்ஹு), பழ்ல் பின் அப்பாஸ்(ரலியழ்ழாஹுஅன்ஹு), அபூராபிஃ (ரலியழ்ழாஹுஅன்ஹு) ஆகியோர் அறிவிக்கும் ஹதீஸ்களும் இந்தத் தலைப்பிலே காணப்படுகின்றன.
அப்துழ்ழாஹ் பின் உமர் பின் ஹத்தாப் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்களது ஹதீஸிலும் வந்திருக்கின்றது என எங்களது ஆசிரியர் ஹாபிழ் அபுல் பழ்ல் பின் இராகி அவர்கள் கூறுகிறார்கள். இவை அனைத் திற்கும் மேலதிகமாக அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலியழ்ழாஹுஅன்ஹு) , அலி பின் அபீதாலிப் ,அவர்களது சகோ தரர் ஜஃபர்பின் அபீதாலிப்
(ரலியழ்ழாஹுஅன்ஹு) ,அவர்களது மகன் அப்பாஸ் பின் ஜஃபர் (ரலியழ்ழாஹுஅன்ஹு), விசுவாசிகளின் தாயாரான உம்மு ஸலமா (ரலியழ்ழாஹுஅன்ஹா) , பெயர் குறிப்பிடப்படாத ஒரு அன்ஸாரி ஆகியோரைத் தொட்டும்கூட அறிவிக்கப்படுவதனை இமாம் நவவி அவர்களின் அத்கார் எனும் நூலின் ஹதீஸ்கள் பற்றி அலசும்போது நான் எழுதியிருக்கின்றேன். ஹாபிழ் மிஸி அவர்கள் ஷஷபெயர் குறிப்பிடப்படாதவர் ஜாபிர் (ரலியழ்ழாஹுஅன்ஹு) என கூறப்படுவதாகக்ஷஷ கூறியுள்ளார்.

எனவே இமாம் திர்மிதி அனஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) மூலம் பதிந்திருக்கின்ற ஹதீஸை விடுத்து மேலுள்ள இவர்கள் பத்து நபர்களாவர். மேலதிகமாக உம்முஸலமா (ரலியழ்ழாஹுஅன்ஹா) அவர்களும் ஒரு அன்ஸாரியும் இருக்கின்றார்கள்.

முர்ஸலாகப் பதிவு செய்துள்ளவர்களைப் பொறுத்தமட்டிலும் முஹம்மத் பின் கஅப் அல்கரழி, அபுல்ஜவ்ஸாஉ, முஜாஹித், இஸ்மாயீல் பின் ராபிஃ, உர்வா பின் ருவைம் போன்ற இவர்களைத் தொட்டும் முர்ஸலாக அறிவிக்கப்பட்டிருப்பது போன்று இவர்களில் சிலரைத் தொட்டும் மவ்ஸூலாகவும் (அதாவது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) வரை தொடராகவுள்ள அறிவிப்பாளர் வரிசை) அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்களது ஹதீஸைப் பொறுத்த வரையிலும் அவர்களைத் தொட்டும் பல வழிகளிலே வந்துள்ளது. ஹகம் பின் அபான் இக்ரிமா மூலமாக இப்னு அப்பாஸிடமிருந்து அறிவிப்பதாகஅபூ தாவூத், இப்னுமாஜா, இப்னு ஹுஸைமா உட்பட வேறு சிலரும் அறிவிக்கின்ற அறிவிப்புத்தான் இவற் றிலே மிகவும் உறுதியானதாகும். இந்த ஹதீஸிற்கு அதாவு, அபுல் ஜவ்ஸாவு உட்பட வேறு சிலரும் இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்யும் வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் இருக்கின்றன.

இர்ஷhத் எனும் நூலில் இமாம் ஹலீல் அவர்கள் இமாம் முஸ்லிம் கூறியதாக அறிவிப்பாளர் வரிசையுடன் எழுதியுள்ளதாவது :-

இந்த ஹதீஸிலே இதனைவிடச் சிறந்ததொரு அறிவிப்பாளர் வரிசை பதிவு செய்யப்பட வில்லை.

அபூபக்ர் பின் அபூதாவூத் என்பவர் தங்களது தந்தையை மூலம் அறிவிப்பதாவது:-

தஸ்பீஹ் தொழுகையிலே இதனைத் தவிர எந்தவொரு ஸஹீஹான ஹதீஸும் கிடையாது.

இதனைத்தொடர்ந்து இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தாங்கள் முன்னால் குறிப்பிட்ட ஸஹாபாக்களின் அறிவிப்புக்கள் பற்றியும், முர்ஸலான அறிவிப்புக்கள் பற்றியும் விபரித்துவிட்டு, இறுதியாக எழுதுவதாவது:-

இந்த அனைத்து ஹதீஸ்களையும் அவற்றிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றின் அறிவிப்பாளர்களின் நிலை களையும் விபரித்து தனியொரு நூலாக நான் ஒன்று சேர்த்துள்ளேன். அதிலே ஸஹீஹானது, லயீபானது என நிறுவ முயலும் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கான முன்னுதாரணம் காணப்படுகின்றது. இமாம்களான ஹாகிம், இப்னுல் ஜவ்ஸி ஆகியோரே அவ்விருவருமாவர். இமாம் ஹாகிமைப் பொறுத்த மட்டிலும் ஸஹீஹ் என்று கூறுவதில் தீவிரமானவர் என்பது பிரபல்யமாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸியைப் பொறுத்தமட்டிலும் இட்டுக்கட்டப்பட்டது எனக் கூறுவதில் தீவிரமானவர் என்பது பிரபல் யமாகும். அவர்களில் ஒவ்வொரு நபரும் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் இது ஸஹீஹானது என இமாம் ஹாகிமும், இது இட்டக்கட்டப்பட்டது என இமாம் இப்னுல் ஜவ்ஸியும் தெளிவாகக் கூறியுள்ளனர். உண்மை என்னவெனில் முதலாவது (நாமும் முதலாவதாக இந்த ஆய்வில் முன் வைத்த இப்னு அப்பாஸ் அவர்களது ) ஹதீஸை உறுதிப்படுத்தக்கூடிய அதிகமான அறிவிப்பாளர் வரிசைகள் காணப்படுவதன் காரணமாக இந்த (ஹதீஸ்) ஹஸன் (ஆதார மாக ஏற்றுக்கொள்ளக்கூடியது) எனும் தரத் திலே இருக்கின்றது என்பதேயாகும். அழ்ழாஹ்வே மிகவும் அறிந்தவன்.
(மி. மஸாபீஹ் மஅத்தஹ்கீக் லில் அல்பானி பாகம் 03)

இமாம் இப்னு ஹஜரின் நேரடியான பதிலை அப்படியே உங்கள் முன் தந்துள்ளோம். இதனை வாசிக்கும் சாதாரண ஒருவர் கூட இமாம் இப்னு ஹஜரின் இந்தப் பதில் ஆழமானதும், விரிவா னதுமான ஆராய்ச்சியின் பின்னால் கிடைத்த முடிவு என்பதனைக் விளங்கிக் கொள்ளலாம். பல இமாம்களின் முடிவுகளை எடுத்து அவற்றை அலசி ஆராய்ந்து இறுதியிலே ஆதாரங்களின் அடிப் படையில் ஒரு நீதமான முடிவிற்கு இமாம் இப்னு ஹஜர் வந்துள்ளார்கள்.
பெரும் இமாம்களாகிய இமாம் ஹாகிம், இமாம் இப்னுல் ஜவ்ஸி போன்றோரிடமே அவசரத்தண்மை காணப்படும்போது பீ.ஜே. போன்றவரிடம் அது காணப்படுவது ஆச்சரியமானதல்ல. இமாம் இப்னு ஹஜரின் இறுதியானதும், சரியானதுமான கூற்று இருக்கத்தக்க இமாமினது பழைய கூற்றை மட்டும் பார்த்துவிட்டு பீ.ஜே. அவசரப்பட்டு தவறான முடிவிற்கு வந்துவிட்டார். இத்தகைய தவறுகள் ஏற்படுவது இயல்பானதேயாகும். ஹதீஸ் கலையில் நுழையக்கூடிய பீ. ஜே. போன்ற சாதாரண மனிதர்களுக்கும் மேலாக, ஹதீஸ் பற்றிய ஆராய்ச்சியில் தங்களது வாழ் நாளையே செலவிட்டவர்களிடம் கூட இத்தகைய தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதுதான் உண்மை. இதில் மதிக்கத்தக்க பண்பு என்னவென்றால் உண்மையான அறிஞர்கள் தங்களது தவறான முடிவுகள்பற்றி தெரியவரும் போது அதனை ஏற்றுக் கொள்வார்கள். அவ்வாறான தவறுகள் சாதாரணமாக நிகழும் எனவும் அவ்வாறான சந்தர்ப் பங்களில் அதனைக் காண்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விபரிக்கும் அறிஞர் ஒருவர் என்ன எழுதியுள்ளார் என்பதை உதாரணத்திற்காக இங்கு தருகின்றோம்.

அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ்கலை அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் முழுமையாக ஹதீஸ் கலையில் ஈடுபாடு கொண்டிருந்த அறிஞராவார். ஆரம்ப காலத்தில் வாழ்ந்த இமாம்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்கள் அனைத் தையும் தொகுத்து வைத்ததானது அந்த இமாம்களின் முதற்கட்ட சேவையாகும். அவ்வாறு தொகுக்கப்பட்ட ஹதீஸ் நூல்களை எடுத்து அவற்றில் இருக்கும் ஹதீஸ்களை ஸஹீஹ், ழஈப் என அமல் செய்வதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியுமான ஹதீஸ்களை, அமல் செய்வதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாதவற்றிலிருந்து வேறாக ஒதுக்கியது அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி செய்த அளப்பரிய சேவையாகும். இவ்வாறு அந்த அறிஞர் சீர்படுத்திய ஹதீஸ் நூல் களில் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலும் அடங்கும். அந்த நூலின் முன்னுரையில் அறிஞரவர்கள் எழுதுவதைப் பாருங்கள்:-
"(முன்னுரையை) முடித்துக்கொள்வதற்கு முன்னர் முக்கியமான ஒரு விடயம் பற்றி எச்சரிப்பது மிக அவசியமாகும். அது என்னவென்றால் எனது இந்தத் திட்டத்திலும், இதுவல்லாத வேறு இடங்களிலும் உள்ளவற்றைப் படிக்கக்கூடிய சிலர், சில ஹதீஸ்களின் தரம்பற்றி நான் கூறியிருப்பதற்கு மாற்றமாக மற்றொரு நூலிலே நான் எழுதியுள்ளதைக் காண்பார்கள். ஓரு இடத்திலே ஏற்றுக்கொள்ள முடியாத அறிவிப்பாளர் வரிசை அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஹதீஸ் எனக் கூறப்பட்டது, இன்னுமொரு இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது எனக் கூறப்பட்டிருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் மனிதன் தவறு, மறதி போன்றவற்றிற்கிடையில் படைக்கப்பட்டவன் என்பதை அவர்கள் நிiனைவில் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்."

இவ்வாறு எழுதிய அறிஞர் தொடர்ந்து எழுதும்போது மற்றொரு முக்கியமான காரணத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்:-

சில இடங்களில் அந்த நூலிலே இருக்கின்ற அறிவிப்பாளர் வரிசையை அடிப்படையாகக் கொண்டு ஹதீஸ்கலை விதிகளின் முடிவின்படி அந்த ஹதீஸ் ஸஹீஹ் என்றோ அல்லது ழஈப் என்றோ தீர்ப்புக்கூறுவேன். அதன் பின்னர் வேறு நூல்களில் காணப்படும் அறிவிப்பாளர் வரிசை களையும் கவணித்து, ஆராய்ச்சியின் பின்னர் மற்றொரு நூலிலே வேறு ஒரு தீர்ப்பைக் கூறுவேன். அத்தகைய சந்தர்ப் பங்களிலும் முன்னால் சுட்டிக்காட்டப்பட்ட முரண்பாடு தோன்றும்.
(முகத்திமது ஸுனன் அபீதாவூத் லில் அல்பானி)

நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் இந்த இடத்தில் முக்கியமான ஒரு உண்மையைக் கூறியுள்ளார்கள். ஏனையவற்றில் மனிதன் பிழை விடுவது போன்று, ஒரு ஹதீஸின் தனியொரு அறிவிப்பாளர் வரிசையைக் கவனித்துத் தவறாகத் தீர்ப்புக் கூறுகின்ற ஒரு ஹதீஸ்கலை அறிஞர் அதன் பின்னர் அவருக்குக் கிடைக்கின்ற ஏனைய அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்டு முன்னர் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக சரியான தீர்ப்பை அவர் வழங்குவார் என்பதே அந்த உண்மையாகும்.

இதுவரை நாம் தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானது என்பதற்கு இரண்டு ஹதீஸ்களை முன்வைத்துவிட்டு, "தஸ்பீஹ் தொழுகை ஆதாரம் அற்றது" எனக்கூறி பீ. ஜே. வெளியிட்டிருக்கும் ஆய்வில் நாம் முன்வைத்த இந்த இரண்டு ஹதீஸ் பற்றியும் பீ. ஜே. எழுதியிருக்கும் அத்தனை குற்றச் சாட்டுக்களிலும் ஒரேயொரு குற்றச்சாட்டைத் தவிர ஏனைய அனைத்திற்கும் தெளிவான பதிலைத் தந்துவிட்டோம். மீதமுள்ள அந்த ஒரு குற்றச் சாட்டு ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் இப்னு ஹஜர் அவர்கள் நாம் முதலாவதாக முன்வைத்த ஹதீஸை "ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" எனக் கூறியதை சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டதாகும். அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆய்வின் இறுதியிலே பதில் தருவதாக முன்னால் எழுதியிருந்தோம். இப்போது அதற்குரிய இடம் வந்துவிட்டது.

இதுவரைக்கும் நாம் எழுதியவற்றில் இறுதியாக நாம் தஸ்பீஹ் தொழுகை பற்றிய பல்வேறு சர்ச்சைக்கு ஒரு சிறந்த முற்றுப் புள்ளியாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ள விரிவான ஆய்வைத்தான் சில பக்கங்கள் முன்னால் குறிப்பிட்டுள்ளோம். அப்படியானால் அதே இமாம் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக எழுதும்போது "ஏற்றுக்கொள்ளும் தரத்தில் எந்தவொரு ஹதீஸும் இல்லை" எனக் கூறியிருப்பதாக பீ. ஜே. தக்க ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருப்பது உங்களுக்கு ஆச்சரியமாகவே தோன்றும். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. "உங்களது தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் எதனையுமே அறியாதவர்களாகவே உங்களை நாம் வெளியேற்றினோம்" என அழ்ழாஹ் கூறுகின்றான். ஆகவே ஒவ்வொரு அறிஞரும் படிப்படியாகவே அறிவைப் பெற்றுக் கொள்கின்றார் என்பதே உண்மையாகும். இது பற்றிய மேலதிக விளக்கங்களை எழுதுவதற்கு முன்னர் பீ. ஜே. எழுதியுள்ளதை உங்களுக்குத் தருகின்றோம் : -
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இவ்வாறு பல விதமான விமர்சனங்களைக் குறிப்பிடும் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக இவ்வாறு கூறுகிறார்கள்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷhத் ஆகும்.(அரிதானது, நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது) இந்தச் செய்தியில் கடுமையான தனிக்கருத்துக்கள் இருப்பதாலும் இதற்கு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும் மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன்முறை இருப்பதாலும் (இச்செய்தி பலவீனம் அடைகிறது) மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமியா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
(நூல்: தல்கீஸுல் ஹபீர், பாகம் 2. பக்கம் 8) 
இமாம் இப்னு ஹஜர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார்கள் என பீ. ஜே. எழுதியுள்ளது உண்மையே. ஆனால் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று பீ. ஜே. யின் ஆய்வுதான் நிதானம் தவறி, பக்கசார்புடையதாகக் காணப்படுகின்றது. இந்த உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு இந்த இடத்தில் இமாம் இப்னு ஹஜர் எழுதியுள்ளதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் தொடரையும் அறிந்துகொள்வது அவசியமானது. இமாம் இப்னு ஹஜர் தங்களது கருத்தை எழுதியதன் பின்னர் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக மற்றொரு இமாமின் கருத்துப் பற்றியும் எழுதியுள்ளார்கள். அது பின்வருமாறு காணப்படுகின்றது :-
இமாம் முஹ்யுத்தீன் அவர்களின் கருத்து முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஷரஹுல் முஹத்தப் எனும் நூலில் எழுதும்போது ஷஷ(தஸ்பீஹ் தொழுகை) பற்றிய ஹதீஸ் பலவீனமானது. அந்தத் தொழுகை முஸ்தஹப் எனக் கூறப்படுவது பற்றி பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பரீட்சயமான தொழுகை அமைப்பினின்றும் அதிலே மாற்றம் காணப்படுகின்றது. எனவே அது நிறைவேற்றப் படாமல் இருப்பதுவே பொருத்தமானதாகும். அது பற்றிய ஹதீஸ் ஆதாரபூர்வமானதல்லஷஷ என எழுதியுள்ளார்கள். தஹ்தீபுல் அஸ்மா வல்லுகாத் எனும் நூலில் எழுதும்போது :- ஷஷதிர்மிதியிலும் அது அல்லாத நூல்களிலும் தஸ்பீஹ் தொழுகை பற்றியதோர் ஹதீஸ் ஹஸன் (ஆதாரமாகக் கொள்ளக்கூடிய) தரத்தில் வந்திருக்கின்றது. எங்களது தோழர்களில் மஹாமிலியும் அவரல்லாதவர்களும் ஷஷ(தஸ் பீஹ் தொழுகை) சிறந்ததொரு செயல்ஷஷ எனக் கூறியுள்ளனர். (இமாம் நவவி அவர்கள் தங்களது) அத்கார் எனும் நூலில் முஸ்தஹப்பானது எனும் கருத்தின்பால் சாய்ந்துள்ளார்கள்.ஷஷ எனக் குறிப்பிடுகின்றார்கள்.
(த. ஹபீர் பாபு ஸுஜூதிஸ்ஸஹ்வ்)

இமாம் அஹ்மத் அவர்கள் ஆரம்பத்தில் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஸஹீஹான எந்த ஹதீஸும் கிடையாது எனக் கூறிவிட்டுப் பின்னர் தங்களது தவறான முடிவை மாற்றி, அது முஸ்தஹப்பானது எனும் முடிவிற்கு வந்தார்கள் என்பதை இமாம் இப்னு ஹஜர் அவர்களே சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதனை முன்னால் நாங்கள் எடுத்து எழுதிவிட்டோம். விரும்பியவர்கள் மீட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அண்மைக்காலத்தில் வாழ்ந்து மரணித்துவிட்ட ஹதீஸ்கலை அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி முரண்பட்ட முடிவுகள் தோன்றும் என்பதை எழுத்து மூலம் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதாவது ஷஷஒரு அறிவிப்பாளர் வரிசையுடன் மட்டும் ஒரு ஹதீஸ்
கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கும் ஒரே அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாக இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ் பலவீனமானது என முடிவு செய்யப்படும். பின்னர் அந்த ஹதீஸை உண்மைப்படுத்தக்கூடிய அறிவிப்புகளும், மேலதிக சான்றுகளும் கிடைக்கும்போது அதே ஹதீஸை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளத் தகுந்தது என முன்னர் கூறியதற்கு முரணாகக் கூறப்படும்.ஷஷ என எழுதியபின் அவ்வாறு நடந்துள்ளதற்கான உதாரணம் ஒன்றையும் எடுத்துக் காட்டுகின்றார்.

இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு மேலே எழுதப்பட்டுள்ள மூன்று அறிஞர்களின் உதாரணங்களிலிருந்தும் ஒரு உண்மை தெளிவாகி இருக்கும். அதாவது ஹதீஸ் கலைக்காக வாழ் நாளையே அர்ப்பணித்த அறிஞர்களுக்கும்கூட படிப்படியாகவே அறிவுஞானம் கிடைக்கிறது என்பதே அந்த உண்மையாகும். அதே நேரம் அந்தக் கலையில் ஈடுபட்ட அறிஞர்கள் படிப்படியாக அறிவைப் பெற்றிருக்கின்றார்கள் என்பது அவர்களது உயர் அந்தஸ்த்தில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது.

அந்த மூன்று அறிஞர்களில் இருவர்; தஸ்பீஹ் தொழு கையுடைய விடயத்தில் ஆரம்பத்தில் ஷஷதஸ்பீஹ் தொழுகை கிடையாதுஷஷ எனக்கூறிவிட்டுப் பிறகு, தங்களது முடிவு பிழை எனத் தெரிந்ததும் மாற்றியிருக்கின்றார்கள். மூன்றாமவர் இவ்வாறான முரண் பாடுகள் தோன்றுவது சாத்தியமானதே என எழுதியுள்ளார்.

இப்போது நீங்கள் ஷஷதஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவைஷஷ என இமாம் இப்னு ஹஜர் கூறிய கூற்றையும், அதன் பின்னர் அவர்களே தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக நபியவர்களைத் தொட்டும் வரக்கூடிய அறிவிப்புக்கள், ஸஹாபாக்களைத் தொட்டும் வரக்கூடிய அறிவிப் புக்கள் என அனைத்தையும் ஒன்று திரட்டி தனியொரு தொகுப்பாக சேர்த்ததன் பின்னால் கூறிய கூற்றையும் எடுத்துப் பார்க்கும்போது, ஹதீஸ்கலை உண்மைகளின் அடிப்படையில் இந்த இரண்டு கூற்றில் எது ஏற்கத்தகுந்தது என்பதை மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்தத் துறையில் ஈடுபடக்கூடிய ஏனைய அறிஞர்களுக்கு சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம் இமாம் இப்னு ஹஜர் அவர்களுக்கும் நடந்திருக்கின்றது என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் தனக்குக் கிடைத்த ஒருசில அறிவிப்பாளர் வரிசையை வைத்துப் பார்க்கும்போது கிடைக்காத தெளிவு, தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக வரக்கூடிய முழு அறிவிப்பாளர் வரிசைகளும் ஒரே நேரத்தில் கிடைத்தபோது ஏற்பட்டிருக்கின்றது. எனவே தான் ஆரம்பத்தில் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் ஷஷஹஸன் எனும் தரத்தை அடையவில்லைஷஷ எனக் கூறிய இமாம் அவர்கள் பின்னர் அவை ஷஷஹஸன் எனும் தரத்தில் இருக்கின்றன என்பதே உண்மையாகும்ஷஷ என அவர்களே ஏற்றுக்கொள்கின்றார்கள்.

ஷஷதஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவைஷஷ என எழுதியதன் பின்னர், மற்றொரு இமாம் இதே முடிவைக் கூறிவிட்டுப் பின்னர் தங்களது தவறான முடிவை மாற்றி இருப்பதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதியிருந்தும் அதுபற்றி பீ. ஜே. எதுவுமே குறிப்பிடாதது நம்பகத் தண்மைக்கு முரணானதேயாகும்.

வாசகர்கள் மற்றொரு முக்கியமான அம்சத்தைக் கவனிக்க வேண்டும். தஸ்பீஹ் தொழுகை பற்றி முரண்பட்ட முடிவுகளைக் கூறியுள்ள ஹதீஸ்கலை அறிஞர்கள் முதலில் ஆதா ரமற்றது எனக்கூறியதன் பின்னர் ஆதாரபூர்வமானது எனும் முடிவுக்கு வந்திருக்கின்றார்களேயன்றி, முதலில் ஆதாரபூர்வமானது எனக் கூறிவிட்டுப் பின்னர் அது ஆதாரமற்றது என எந்த ஒரு இமாமும் கூறவில்லை. இது சுட்டிக்காட்டுவது என்னவெனில் தஸ்பீஹ் தொழுகை ஆதாரமற்றது எனும் முடிவு ஒன்று அல்லது ஒரு சில அறிவிப்பாளர் வரிசையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதனைத்தான். அதே நேரம் தஸ்பீஹ் தொழுகை ஆதா ரபூர்வமானது எனும் முடிவு அது சம்பந்தமாக வரக்கூடிய அனைத்து வழிகளையும் ஒன்று திரட்டி எடுக்கப்பட்டதன் காரணமாகத்தான் ஆரம்பத்தில் ஹஸன் எனும் தரத்தில் இருக்கிறது என ஏற்றுக் கொள்ளாத அறிஞர்கள் கூட, பின்னர் அது ஹஸன் எனும் (ஏற்றுக் கொள்ளும்) தரத்தில் உள்ளது என ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதுவே உண்மையாகும்.

தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானது எனும் உண்மையை நிரூபிப்பதற்கு இதுவரை நாம் இரண்டு ஹதீஸ்களை முன் வைத்துவிட்டு, தஸ்பீஹ் தொழுகை ஆதாரமற்றது எனக் கூறுவோர் அந்த இரண்டு ஹதீஸ்களை மறுப்பதற்கு அவ்விரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையின் அடிப்படையில் கூறும் ஒவ்வொரு காரணத்தையும் தனித் தனியாக எடுத்து அவற்றிற்கான தக்க பதில்களையும் தெளிவாக எழுதிவிட்டோம்.

அதன் பின்னர் பீ. ஜே. தனது ஆய்வின் இறுதியில் தஸ்பீஹ் தொழுகை பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் சொல்லக்கூடிய தொழுகை முறை பற்றியும் விமர்சித்துள்ளார். அதுபற்றி பீ. ஜே. எழுதும்போது பின்வருமாறு கூறுகின்றார்:-
தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது. அவ்வாறு இருக்கும்போது அதை நடைமுறைப்படுத்த சரியான, ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்கவேண்டும். ஆனால் எந்தக் குறைகளும் இல்லாத செய்திகள் இல்லை.

பல அறிவிப்புகள் இருந்தாலும் அனைத்திலும் குறைகள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் பல அறிவிப்புகள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும் அதைச் சொல்லவேண்டிய இடங்கள்பற்றியும் மாற்றமான கருத்துக்களையும் தெரிவிக்கின்றன.

தஸ்பீஹ் தொழுகை ஆதாரமற்றது என நிரூபிக்க முயலும் பீ. ஜே. யின் இந்தக் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனெனில் தஸ்பீஹ் தொழுகை ஏனைய தொழுகை போன்றல்லாமல் பலமுறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது என எழுதியுள்ளார். ஆனால் சிந்திக்கின்ற எவருமே இதில் உண்மை இல்லை என்பதை மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகைகளைவிட அதிலே தஸ்பீஹ் சொல்வதைத் தவிர ஏனைய விடயங்களில் வேறு எந்த மாற்றமும் இல்லையே? உண்மை இவ்வாறிருக்க பல முறைகளில் வித்தியாசப் படுகின்றது எனக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. இருக்கும் வித்தியாசத்தை எடுத்துப் பார்த்தால் அனேகமாக எல்லாத் தொழுகைகளும் ஒன்றுக்கு ஒன்று வித்தியசப்படவே செய்கின்றன. ஜந்து நேரத் தொழுகைக்கும் வருடத்தில் இரு முறை நிறைவேற்றப்படும் பெருநாள் தொழுகைக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் காணப்படுகிறது. ஏனைய தொழு கைகளையும் ஜனாஸாத் தொழுகையையும் எடுத்துக் கொண்டால் இரண்டிற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இவர்களுக்குத் தென்படவில்லையா? ஏன் வித்ர் தொழுகையையும் ஏனைய தொழுகைகளையும் எடுத்துப் பார்த்தால் இஸ்லாத்திலே ஒரு ரக்அத் உள்ள தொழுகை வேறு ஏதாவது காணப்படுகின் றதா....? எனவே உண்மை என்னவென்றால் ஷஷதஸ்பீஹ் தொழுகை ஏனைய தொழுகைகளைவிட மாற்றமானதுஷஷ எனக் கூறுவது அத் தகையதொரு தொழுகை இஸ்லாத்திலே இல்லை என்பதற்கு எந்தவிதத்திலும் ஆதாரமாக அமைய மாட்டாது. ஏனெனில் ஒவ்வொரு வகையான தொழுகைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு பட்டதாகவே காணப்படுகின்றது. இந்த உண்மையை உதாரணங்கள் மூலம் மேலே உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதேபோன்று இங்கு பீ;. ஜே. முன்வைத்துள்ள மற்றொரு குற்றச்சாட்டு ஷஷ பல அறிவிப்புக்கள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும், அதைச் சொல்ல வேண்டிய இடங்கள் பற்றியும் மாற்றமான கருத் துக்களைத் தெரிவிக்கின்றனஷஷ என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டிலும் எந்தவித உண்மையும் இல்லை. ஏனெனில் நாம் ஆதாரத்திற்கு முன்வைத்த இரு ஹதீஸ்களிலும், அவற்றிற்கு சான்றாக முன் வைக்கும் ஹதீஸ்களிலும் தஸ்பீஹின் எண்ணிக்கையிலோ அல்லது அவை கூறப்படவேண்டிய இடங்களிளோ எந்த வித்தியாசமும் இல் லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானது எனக் கூறக்கூடியோரே வித்தியாசமாக வரக்கூடிய அறிவிப்புகளை ஏற்க முடியாதவை எனக்கூறி ஏற்கெனவே ஓதுக்கி யுள்ளனர். அவற்றில் ஒன்று திர்மிதியிலே அப்துழ்ழாஹ் பின் முபாரக் அவர்களின் சொந்தக்கூற்றாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது ஹதீஸே அல்ல. அதேபோன்று இப்னு உமர் மூலமாக இமாம் ஹாகிம் அவர்கள் பதிந்துள்ளதொரு அறிவிப்பில் ஆதாரபூர்வமான தஸ்பீஹை விட அதிகமான வார்த்தைகள் இருக்கின்றன. அதில் வரக்கூடிய அறிவிப்பாளர் வரிசையில் ஒருவர் பொய்யர் எனும் அளவிற்கு விமர்சிக்கப்பட்டுள்ளதால் அந்த அறிவிப்பும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ஒன்றாகும்.

எனவே தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸ்களின் கருத்தின் அடிப்படையில் காணப்படும் குறைகள் எனும் ரீதியில் பீ. ஜே. யினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டு களுக்கும் தக்க பதிலை முன் வைத்துவிட்டோம். அல்ஹம்து லில்லாஹ்!

சரி! தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் ஆதாரத்திற்கு ஏற்கக் கூடியவைதானா என்பதில் இதன் பிறகும் எவருக்கேனும் சந்தேகம் இருக்குமானால் அவரது உள்ளமும் தஸ்பீஹ் தொழுகை பற்றி திருப்தி அடைந்து ஆறுதலடைந்திட இன்னும் சிறிது விளக்கம் தருகின்றோம். அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி ஆராயும் எந்தவொரு ஹதீஸ்கலை அறிஞரும் தஸ்பீஹ் தொழுகை ஆதாரமுள்ளது எனும் முடிவிற்கே வருவார்கள். இதற்கு நாம் மேலே சுட்டிக்காட்டிய மூன்று இமாம்களும் அந்த முடிவிற்கு வந்திருப்பதே சான்றாகும். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஷஷழஈபானதுஷஷ என்று கூறிவிட்டுப் பின்னர் தங்களது முடிவை மாற்றியுள்ளனர். இவ்வாறு அந்தக் கலையில் போதிய ஈடுபாடு உள்ள ஒருவர் தஸ்பீஹ் தொழுகை பற்றிய அனைத்து அறிவிப்புக்களையும் பார்க்கும்போது குறைந்த பட்சம் அந்த ஹதீஸ்கள் ஹஸன் எனும் தரத்தில் உள்ளதைப் புரிந்து கொள்வார். இந்த உண்மை பற்றிய நம்பிக்கை உங்கள் உள்ளத்தில் மேலும் உறுதியாகப் பதிந்திடும் பொருட்டு தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை ஆய்வு செய்த மற்றொரு அறிஞர் எழுதியுள்ளதையும் உங்களுக்குத் தருகின்றோம்.

மிர்காத் எனும் ஹதீஸ் விளக்கவுரை நூலின் அடிக் குறிப்பை எழுதியுள்ள அறிஞர் சுட்டிக்காட்டுவதாவது:-

இமாம்களான அபூதாவூத், இப்னுமாஜா ஆகியோர் இந்த ஹதீஸை பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதிவு செய்துள்ளனர். அதிலே ஹகம் பின் அபான் ஹதீஸை அறிவித்ததாக மூஸா பின் அப்துல் அஸீஸ் அறிவிக் கின்றார். அவ்விருவரும் ஞாபகசக்தி (குறைவு) காரணமாக பலவீனமானவர்கள். இமாம் ஹாகிமும், பின்னர் இமாம் தஹபியும் அந்த (ஹதீஸ்) நம்பகமானது என சுட்டிக்காட்டியுள்ளனர். அது சரியானதே. எனெனில் அந்த ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது அல்லது எவ்வித அடிப்படையும் அற்றது எனக் கூறுவோருக்கு மாறாக, அதிலே கவனம் செலுத்தும் எவரும் ஷஷஅதற்கு ஓர் அடிப்படையுண்டுஷஷ என உறுதியாகக் கூறும் அளவிற்கு அதற்குப் பல அறிவிப்பாளர் வரிசைகளும் சான்றுகளும் நிச்சயமாக இருக்கின்றன. அதன் அறிவிப்பாளர் வரிசைகளை இமாம் ஹதீப் அல் பஃதாதி அவர்கள் தனியொரு தொகுப்பாக ஒன்று திரட்டியுள்ளார்கள். அது டமஸ்கஸில் உள்ள ழாஹிரிய்யா நூல் நிலையத்தில் கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றது. அல்லாமா அபுல்ஹஸனாத் அல்லக்னவீ தங்களது அல் ஆசாருல் மர்பூஆ பில் அஹ்பாரில் மவ்ழுஆ எனும் நூலில் இது பற்றி சரி யான முடிவை அலசி ஆராய்ந்து (பக்கம் 353 முதல் 374 வரை )எழுதியுள்ளார்கள். விரிவான விளக்கம் பெற விரும்புவோர் அதனைப் படித்துக் கொள்ளட்டும். ஏனெனில் இத்தத் தலைப்பிலே எழுதப்பட்டவற்றுள் வேறு எதனையும் படிக்கத் தேவையில்லாத அளவிற்கு இதில் உள்ளவை போதுமானதாக இருக்கின்றது.நூலின் ஆசிரியர் அவர்கள் அபூராபிஃ வழியாக வரும் அறிவிப்பாளர் வரிசையை எடுத்துக்காட்டி இந்த ஹதீஸை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

( மிர்காத் : பாபு ஸ. தஸ்பீஹ் )


இது எவ்வளவு தெளிவான நிதானமான முடிவு என்பதனை இதில் அடங்கியிருக்கும் கருத்தைக் கொண்டே இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் முதலாவது ஆதாரமாக முன்வைத்த இப்னு அப்பாஸ் (ரலியழ்ழாஹுஅன்ஹு) அவர்களின் ஹதீஸின் மீது பீ. ஜே. எடுத்து வைத்த குற்றச்சாட்டே அதில் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் இடம்பெறுகிறார் என்பதுதான். அவர் பலவீனமானவர் என்பதை நிரூபிக்க பீ.ஜே. பல இமாம்களது கூற்றுக்களை எடுத்துக்கூறி அதிக சிரத்தை எடுத்திருந்தார். பல பக்கங்களை அதற்காக
ஒதுக்கியிருந்தார். ஆனால் ஹதீஸ்கலையில் முழு ஈடுபாடுள்ள ஒருவருக்கு மூஸா பின் அப்துல் அஸீஸ் பலவீனமானவர் எனும் செய்தி மிகச் சாதாரணமான ஒன்று. அதனால்தான் மேற்கண்ட அடிக்குறிப்பை எழுதிய அறிஞர் ஒரே வார்த்தையில் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவரும் அவரிடமிருந்து அறிவிக்கும் ஹகம்
பின் அபான் ஆகிய இருவருமே ஞாபக சக்தி குறைவு காரணமாக பலவீனமானவர்கள் என்பதைக் கூறிவிட்டார்கள். இதனைக் கடந்து இத்தகைய பலவீனமான அறிவிப்புகள் பல ஒன்று சேறும்போது அது ஏற்றுக் கொள்ளும் தரத்தில் உள்ளதா என்பதைக் கண்டறிவதுதான் உண்மையில் ஒருவருக்கு ஹதீஸ் கலையில் இருக்கக்கூடிய அவரது ஆழமான அறிவைக் குறிக்கும். அப்படியில்லாமல் மூஸா பின் அப்துல் அஸீஸ் பலவீனமானவர் என்பது பற்றி பீ. ஜே. எழுதியுள்ளவை அப்படியே அறிவிப்பாளர்களின் விபரம் எழுதப்பட்டுள்ள நூல்களைப் புரட்டி எவரும் கூறிவிடலாம். தற்போது இன்னும் இலகுவாக கணனிகளைத் தட்டி விடுவதன் மூலம்கூட அந்த விபரங்களைப் பெற முடியும்.

ஒரு அறிஞரின் தஸ்பீஹ் தொழுகை பற்றிய சுருக்கமான ஆனால் தெளிவான ஒரு ஆய்வை நீங்கள் மேலே படித்தீர்கள். அதிலும் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் ஹஸன் எனும் தரத்தில் உள்ளது என்பதை சுருக்கமாக இல்லாமல் ஷஷஅதற்குப் பல அறிவிப்பாளர் வரிசைகளும் சான்றுகளும் நிச்சயமாக இருக்கின்றன.ஷஷ எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதியுடைய அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் அனைத்துமே அவை குறைந்த பட்சம் ஹஸன் எனும் தரத்தில் உள்ளன எனும் உண்மையையே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கும்போது முற்கால அறிஞர்கள், பிற்கால அறிஞர்கள் என எத்தனையோ அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் நம்பகமானவை என்பதை ஆராய்ச்சியின் பின்னர் கூறியுள்ளனர். எனவே எமது அறிவுக்கு எட்டிய வரையில் இவ்வாறு தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை ஆராய்ந்ததன் பின்னர் அவை முஸ்லிம்களால் ஏற்று பின்பற்றப்பட தகுதியானவையே எனும் உண்மையை கூறியுள்ள அறிஞர்களின் பட்டியல் ஒன்றை இப்போது உங்களுக்கு நாம் தொகுத்துத் தருகின்றோம்.


ஸலாதுத் தஸ்பீஹ் பற்றிய ஹ தீஸ்கள் ஆதாரபூர்வமானவை என ஏற்றுக்கொண்ட
ஹதீஸ்கலை அறிஞர்களின் பட்டியல்!
  1. ஹாபிழ் அபூபக்;ர் அல்ஆஜுரி !
    ( தர்கீப் வ தர்ஹீப் - பாபு ஸ. தஸ்பீஹ் )
  2. அபூமுஹம்மத் அப்துர்ரஹீம் அல்மிஸ்ரி !
    ( தர்கீப் வ தர்ஹீப் - பாபு ஸ. தஸ்பீஹ் )
  3. அபுல் ஹஸன் அல் முகத்தஸி !
    ( தர்கீப் வ தர்ஹீப் - பாபு ஸ. தஸ்பீஹ் )
  4. நாஸிருத்தீன் அல்பானி !
    ( த. வ தர்ஹீப் மஅத்தஹ்கீக் - பாபு ஸ. தஸ்பீஹ் )
  5. அபூ அலி இப்னுஸ்ஸகன் !
    ( த. ஹபீர் - பாபு ஸு. ஸஹ்வ் )
  6. இமாம் ஹாகிம் !
  7. இமாம் தாரகுத்னீ !
    ( மிர்காத் பாபு ஸ. தஸ்பீஹ் )
  8. இமாம் இப்னு ஹஜர் !
    (மி. மஸா. மஅத்தஹ்கீக் லில் அல்பானி பாகம் 03)
  9. அபூ மூஸா அல்மதீனி !
    (த. ஹபீர் - பாபு ஸு.ஸஹ்வி)
  10. இமாம் தஹபி !
    ( மிஷ;காத் மஅத்தஹ்கீக் பாபு ஸ. தஸ்பீஹ் )
  11. இமாம் திர்மிதி !
  12. இமாம் இப்னு ஹுஸைமா !
  13. இமாம் இப்னு ஹிப்பான் !
    ( தர்கீப் வ தர்ஹீப் - பாபு ஸ. தஸ்பீஹ் )
  14. இமாம் நவவி !!!!!!
    ( த. ஹபீர் - பாபு ஸு. ஸஹ்வ் )
உண்மையான ஒரு முஸ்லிம் குர்ஆன் ஹதீஸினை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். மாறாக தனக்கு விருப்பமானதை ஏற்றுக்கொண்டு, வெறுப்பானதை மறுப்பதென்பது ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடியதே. மேலே நாம் பதின்னான்கு அறிஞர்களின் பெயரைப் பட்டியல் இட்டுள்ளோம். இவர்கள் இனைவரும் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை ஆராய்ந்து அவை ஆதாரமாகக் கொள்ளப்படத் தகுதியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இதுவரை காலமும் இத்தகையதொரு தொழுகை இஸ்லாத்திலே கிடையாது என நினைத்திருந்தவர்கள் தங்களது முடிவை மாற்றி உண்மையை ஏற்றுக் கொள்வது மாத்திரமே அவர்களை நேர்வழிக்கு இட்டுச் செல்லும்.
இமாம் தாரகுத்னீ கூறியுள்ளதாவது:-
அல்குர்ஆனிய அத்தியாயங்களின் சிறப்பு பற்றி வந்திருக்கும் (ஹதீஸ்களில்) மிகவும் சரியானது குல் ஹுவழ்ழாஹு அஹத் என்பதன் சிறப்பேயாகும், அத்துடன் தொழுகைகளின் சிறப்புக்கள்பற்றி வந்திருக்கும் (ஹதீஸ்களில்) மிகவும் சரியானது தஸ்பீஹ் தொழுகை பற்றியவையே ஆகும்.
(மிர்காத் : பாகம் 03, பக்கம் : 995)

இமாம் அப்துழ்ழாஹ் பின் முபாரக் கூறுகிறார்கள்:-
தஸ்பீஹ் தொழுகை பற்றி (ஹதீஸ்களிலே) ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையிலும் அதனைப் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்வதானது விருப்பத்திற்குரியதாகும். அதனை விட்டும் பொடுபோக்காக இருக்கக்கூடாது.
(மிர்காத் : பாகம் 03, பக்கம் : 995)
இதுவரை அழ்ழாஹ்வின் உதவியால் தஸ்பீஹ் தொழுகை பற்றி மக்கள் முன் நாம் எதனைத் தெளிவுபடுத்த நாடினோமோ அதனை விரிவான முறையில் நாம் நிறைவேற்றியிருக்கிறோம். தஸ்பீஹ் தொழுகையை மறுப்போரின் சமகால ஆய்வும் எமது இந்த முயற்சி முழுமை பெறுவதற்கு ஒரு காரணமாகும். முழுமையான இந்த ஆய்வை மேற்கொண்டதன் நோக்கம் தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் அதற்கான தெளிவான ஆதாரத்தைத் தன்னிடம் கொண்டிருக்கவேண்டும் என்பதேயாகும். எமது எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கு தஸ்பீஹ் தொழுகைபற்றி முன்வைக்கப்படும் அனைத்து சந்தேகங்களும் இந்த ஆய்வில் நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது. இருந்த போதிலும் இமாம் இப்னு ஹஜர் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸை ஓரிடத்திலே ஷஷஷhத்ஷஷ என்றதொரு வார்த்தையைப் பயன்படுத்தி ஷஷதஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்லஷஷ எனக் கூறியிருப்பதானது வாசகர்களில் ஒரு சிலருக்கு சிலவேளை உள்ளத்தை நெருடிக்கொண்டிருப்பதற்கு இடம்பாடு இருக்கின்றது. எனவே அந்தக் குறைக்கும் இடம் வைக் காமல் இறுதி அம்சமாக ஹதீஸ் கலையில் ஷஷஷhத்ஷஷ எனும் வார்த்தையின் உண்மைப் பொருளையும், அது இங்கு பொறுந்தக்கூடியதா என்பது பற்றியும் தெளிவு படுத்துவது மிகவும் பிரயோசனமாக இருக்கும் எனக் கருதுகின்றோம்.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ளதை பீ. ஜே. தனது ஆய்வில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷhத் ஆகும்.(அரிதானது, நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது)




முதலில் ஹதீஸ் கலையில் "ஷhத்"எனும் வார்த்தை எதனைக் குறிக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கலாநிதி ஸுப்ஹி அஸ்ஸாலிஹ் தனதுஷஷஹதீஸ்கலையும் அதன் சொற்பிரயோகங்களும்ஷஷ எனும் நூலில் எழுதுவதாவது:- "ஷhத்" என்பதற்கு வரைவிலக்கணம் கூறுவது சிரமமானது. அதன் சிரமம் காரணமாகத்தான் தனியொரு தலைப்பாக அது பற்றி அறிஞர்கள் எழுதவில்லை. இருந்தாலும் இதிலே இரண்டு விடயங்கள் கவணிக்கப்படும். பொதுவாக தணியொருவர் வித்தியாசமாக அறிவிப் பதையே ("ஷhத்" என்பது) குறிக்கும். குறிப்பாகக் கூறுவதென்றால் மக்பூல் (நம்பத்தகுந்தவர்களில் கடைசியான) தரத்திலுள்ளவர் தன்னைவிடச் சிறந்தவரது அறிவிப்பிற்கு முரணாக அறிவித்தது ("ஷhத்" எனப்படும்.) இதுதான் பரிபாiஷயின் அடிப்படையில் "ஷhத்" என்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் என இமாம் இப்னு ஹஜர் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

எனவே ஒரு அறிவிப்பை ஹதீஸ்கலையில் "ஷhத்" எனக் கூறுவதானால் அதிலே இரண்டு விடயங்களை நாம் கவணிக்க வேண்டும்.

1 - நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களில் தரம் குறைந்த ஒருவர் ஒரு செய்தியைத் தனியாக அவர் மட்டும் அறிவிக்க வேண்டும்.

2 - தரம் குறைந்தவர் தணியாக அறிவிக்கும் செய்தி தன்னைவிட உயர்வானவர் அறிவிக்கும் செய்திக்கு முரணானதாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளும் ஒன்று சேராத வரையில் ஒரு செய்தியை "ஷhத்" என ஒருபோதும் குறிப்பிட முடியாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் பார்க்கும்போது சுய மாகவே விளங்கும் விடயம் ஒரு ஹதீஸை "ஷhத்" எனக் கூறுபவாஅந்த ஹதீஸின் கருத்துக்கு முரணான கருத்தைக் கூறக்கூடிய ஒரு ஹதீஸைக் காட்ட வேண்டும். அது இல்லாத வரையில் ஒரு ஹதீஸை "ஷhத்" என ஒருபோதும் கூற முடியாது. அத்தகைய ஒரு அறிவிப்பு இருக்கவேண்டும் என்பது ஹதீஸ்கலை கூறக்கூடிய சட்டம். அந்த சட்டத்தை இமாம் இப்னுஹஜர் அவர்களே சரியானது என உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். இதன்படி "ஷhத்" எனப் படும் அறிவிப்பிற்கு முரணாக, சரியான செய்தியைக் கூறக்கூடிய அறிவிப்பை ஹதீஸ் கலையில் "ஷhத்" எனக் கூறப்படும்.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸை இமாம் இப்னு ஹஜர் "ஷhத்" எனக் கூறியிருப்பதாக எழுதியிருக்கும் பீ. ஜே. அதனை நிரூபிப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களை பலவீனமாக்க முயற் சிப்பவர்கள் அவை "ஷhத்" என நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டால்கூட அது நிறைவேறப்போவதும் இல்லை. ஏனெனில் அத்தகையதொரு அறிவிப்பே கிடையாது.

எனவே தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் ஆதாரம் அற்றதாக மாறுவதற்கு அது "ஷhத்" எனும் வரையறைக்குள்ளும் அடங்காது என்பதனை வாசகர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவேதான் தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்களில் ஒரு விரிவான ஆராய்ச்சியைச் செய்த இமாம் இப்னு ஹஜர் அவர் கள் இறுதியாக சரியானதும், உறுதியானதுமான முடிவாகஷஷ"ஷhத்" அவை
குறைந்த பட்சம் ஹஸன் எனும் தரத்தில் உள்ளவை ஷஷஎன்பதாக அறிவித்துவிட்டார்கள். இமாம் இப்னு ஹஜர் அவர்களே தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸை ஹஸன் எனும் தரத்தில் உள்ளது என ஏற்றுக்கொண்டுவிட்டாலும் அவர்களது பழைய கூற்றை வைத்து "ஷhத்" எனும் குற்றச்சாட்டை ஒருசிலர் முன்வைப்பதன் காரணமாக அது பற்றிய தெளிவையும் சேர்ப்பதனால் இந்த ஆய்வைப் படிக்கும் வாசகர்களுக்கு முழுமையான பிரயோஜனம் கிடைக்கும் என்பதன் காரணமாகவே "ஷhத்" பற்றிய தெளிவையும் இங்கு சேர்த்துள்ளோம்.
ஆக தஸ்பீஹ் தொழுகை பற்றிய இந்த ஆய்வின் இறுதியானதும், உறுதியானதுமான முடிவு தஸ்பீஹ் தொழுகை ஆதாரபூர்வமானதே! தஸ்பீஹ் தொழுகை அடிப்படையற்றது எனும் கூற்றுத்தான் உண்மையில் அடிப்படையற்றது!! இந்தத் தொழு கையை ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருசிலர் தமக்குக் கிடைத்த ஒரு சில அறிவிப்புக்களை மாத்திரம் கவணித்துவிட்டு அவை ஏற் கத்தக்கவை அல்ல என ஒதுக்கியதன் பின்னர் தஸ்பீஹ் தொழு கை பற்றிய அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளையும் ஒன்று சேர்த்து ஆராய்ந்ததன் பலனாக தங்களது தவறான முடிவுகளை மாற்றியுள்ளனர்!!!

ஆகவே தனது ஆய்வின் ஆரம்பத்திலேயே தஸ்பீஹ் தொழுகை பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்ப டையில் செய்யப்படும் அமல் என பீ. ஜே. குத்திய முத்திரை எந்த அளவிற்கு உண்மையானது என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருக்கும். எனவே இதன் பிறகு தஸ்பீஹ் தொழுகை தொழ நாட்டம் கொள்ளும் எவரும் அதனை முழு மனத் திருப்தியோடு நிறைவேற்றலாம் என்பது உண்மையாகவே அழ்ழாஹ்வின் திருப்திக்காக செயல்படுவோருக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. உண்மையாகவே நேர்வழியைத்தேடும் ஒருவருக்கு இத்தகைய மகிழ்ச்சி எமது முயற்சியால் கிடைக்கின்றது என்றால் அதற்காக நிச்சயம் நாம் அழ்ழாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்குர்ஆனும் அல்ஹதீஸும் காட்டும் வழியில் நாம் நடந்தால் மாத்திரமே நேர்வழியை அடைய முடியும். நேர்வழியை அடையாத எவரும் சுவனம் செல்ல முடியாது என்பதுடன், நேர்வழியில் இருப்போர் அதனை ஏனையவர்களுக்கு எத்திவைப்பதும் அவர்களது கடமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். அதனைக் கொண்டு ஏனையவர்கள் நேர்வழியை அடையும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் இந்த அழைப்பாளர்களுக்கு உயர்கூலி அழ்ழாஹ்விடம் காத்திருக்கவே செய்கின்றது.


தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்றும் முறை!


தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்றும் முறைபற்றி தஸ்பீஹ் தொழுகைக்கான ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ள ஹதீஸில் ஒரு விடயத்தைத்தவிர ஏனைய அனைத்து விடங்களும் தெளிவாகக் காணப்படுகிறது. வழமையான நப்லான தொழுகைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுமோ அதேபோன்றுதான் தஸ்பீஹ் தொழுகை யும் நிறைவேற்றப்படும். தஸ்பீஹ் தொழுகையில், அதற்குரிய ஆதார மாக முன்வைக்கப்ட்டுள்ள ஹதீஸில் வந்துள்ளது போன்று ஒவ் வொரு ரக்அத்திலும் எழுபத்தி ஜந்து தஸ்பீஹ்கள் என மொத்தம் நான்கு ரக்அத்திலும் முன்நூறு தஸ்பீஹ்கள் கூறப்பட வேண்டும்.
இவ்வாறு விNஷடமான இந்த தஸ்பீஹ்களைக் கூறுவதே இந்தத் தொழுகையின் சிறப்பு அம்சமாகும்.

அதேநேரம் பொதுவாக நப்ல் தொழுகைக்குரிய முக்கிய அம்சம் ஒன்றினையும் இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும். அதுபற்றி ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பின்வருமாறு கூறுகின்றார்கள்:-


(நப்லான) இரவுத் தொழுகையும், பகல் (தொழுகையும்) இரண்டிரண்டு ரக்அத்துக்களாகும்.
(அஹ்மத், அபூயஃலா - ஸஹீஹ், ஜா.ஸகீர் : 3831)


எனவே பகலிலோ அல்லது இரவிலோ ஒரு முஸ்லிம் அழ்ழாஹ்வுக்காக நப்லான எந்தத் தொழுகையைத் தொழுதாலும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகவே தொழவேண்டும். ரஸூலுழ் ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் நப்லான எல்லாத் தொழுகையையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகவே தொழுதுள்ளார்கள். எனவே இந்த நடைமுறையின் அடிப்படையில் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தஸ்பீஹ் தொழுகையையும் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாகவே தொழவேண்டும்.
ஆகவே நாம் தஸ்பீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய விதம் முதலில் தொழுகைக்கு தக்பீர் கட்டி, ஸூரத்துல் பாதிஹாவையும் மற்றொரு ஸூராவையும் ஓத வேண்டும். அதன் பின்னர் நிலையில் நின்றவண்ணம் ஸுப்ஹானழ்ழாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லழ்ழாஹு வழ்ழாஹு அக்பர் என பதினைந்து விடுத்தம் கூற வேண்டும். அதன் பிறகு ருகூஃவிற்கு சென்று அதில் வழமையாகக் கூறக்கூடியதைக் கூறியதன் பின்னால் மேற்கண்ட தஸ்பீஹைப் பத்து விடுத்தம் கூற வேண்டும். பின்னர் நிலைக்கு வந்து அதில் வழமையாகக் கூறக்கூடியதைக் கூறியதன் பின்னால் மேற்கண்ட தஸ்பீஹைப் பத்துவிடுத்தம் கூறவேண்டும். அதன் பின்னர் ஸுஜூதிற்குச் சென்று அதில் வழமையாகக் கூறக் கூடியதைக் கூறியதன் பின்னால் மேற்கண்ட தஸ்பீஹைப் பத்து விடுத்தம் கூற வேண்டும். அதனையடுத்து நடு இருப்பிற்கு வந்து அதில் வழமையாகக் கூறக்கூடியதைக் கூறியதன் பின்னால் மேற் கண்ட தஸ்பீஹைப் பத்துவிடுத்தம் கூறவேண்டும். பின்னர் மீண்டும் ஸுஜூதிற்குச் சென்று அதில் வழமையாகக் கூறக்கூடியதைக் கூறி அதன் பின்னால் மேற்கண்ட தஸ்பீஹைப் பத்து விடுத்தம் கூற வேண்டும். அதனையடுத்து ஓய்விருப்பிற்கு (இரண்டாவது ரக்அத் திற்கு எழுவதற்கு முன் சிறிது அமருதல் ) வந்து மேற்கண்ட தஸ்பீஹைப் பத்து விடுத்தம் கூற வேண்டும். பின்னர் எழுந்து முதல் ரக்அத்தைப்போன்றே இரண்டாவதையும் நிறைவேற்ற வேண்டும். முதல் ரக்அத்தில் ஓய்விருப்பில் கூறிய பத்து தஸ்பீஹையும் இரண் டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்தின் இருப்பில் ஸலாம் கொடுப் பதற்கு முன்னர் கூற வேண்டும். இவ்வாறு முதல் இரு ரக்அத்துக்களை நிறைவேற்றி, ஸலாம் கூறி முடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மீண்டும் ஆரம்பத்தில் இரு ரக்அத்துக்களை நிறை வேற்றிய அதே விதத்தில் மேலும் இரண்டு ரக்அத்துக்களை நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக மொத்தம் நான்கு ரக்அத்துக்கள் தொழுவதன் மூலம் தஸ்பீஹ் தொழுகை முழுமையடைகின்றது.



தஸ்பீஹ் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற முடியுமா?


தஸ்பீஹ் தொழுகை இஸ்லாத்தில் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதொரு சிறந்த ஒரு அமலாகும். ஒரு சிலரின் அவ சரத் தண்மையின் காரணமாக அதில் அவர்கள் சந்தேகத்தை உண்டு பண்ணியதன் காரணமாகக் குழம்பிப் போயிருந்த பொது மக்கள் அழ்ழாஹ்வின் அருளினால் எமது தஸ்பீஹ் தொழுகை பற்றிய இந்த ஆய்வைப் படித்ததும் அவர்களின் சந்தேகங்கள் அடியோடு மறைந்திருக்கும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

இப்போது ஒருசிலர் தஸ்பீஹ் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற முடியுமா? அதற்கு அழ்ழாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனில் அல்லது அல்ஹதீஸில் ஆதாரம் இருக்கின்றதா? என அடுத்த கேள்வியை முன்வைக்கின்றனர். இவ்வாறான கேள்விகள் தூய்மையின் அடிப்படையில் முன்வைக்கப்படுமானால் உண்மையில் அவை வரவேற்கத்தக்கதே. பின்பற்றும் நோக்கமின்றி வெறுமனே பொது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதுதான் நோக்கமாக இருந்தால் அது அவர்களுக்கு நஷ;டமாக அமையுமேயன்றி அது உண்மை முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எப்படியிருந்தாலும் இந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவது முஸ்லிம்கள் மீது அவசியமானதாகவே இருக்கின்றது. ஏனெனில் மார்க்க விடயங்களில் ஆதாரம் இல்லாமல் எதனையும் மார்க்கம் என நாம் செய்ய முடியாது.

தஸ்பீஹ் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற முடியும் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் காணப்பகின்றன. தஸ்பீஹ் தொழுகை என்பது நப்ல் தொழுகையில் அடங்கக் கூடியதாகும். நப்ல் தொழுகைகளை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூட்டாக நிறை வேற்றியுள்ளார்கள். அதனை விபரிக்கக்கூடிய சில ஹதீஸ்களை இங்கு உங்களுக்குத் தருகின்றோம். பத்ர் யுத்ததில் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுடன் இருந்த இத்பான் பின் மாலிக் (ரலியழ்ழாஹுஅன்ஹு) கூறுகின்றார்கள் :- பனூ சாலிம் கோத்திரத் தாரிடத்தில் எனது கூட்டத்தினருக்கு தொழுகை நடாத்திக் கொண் டிருந்தேன். மழை வந்துவிட்டால் எனக்கும் அவர்களுக்கும் இடை யில் ஓடை குறுக்கிட்டுவிடும். அந்த நிலையில் அதனைக் கடந்து அவர்களது மஸ்ஜிதை நோக்கிச் செல்வதானது எனக்கு சிரமமாக இருக்கும். எனவே நான் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்து கூறியதாவது:- நிச்சயமாக நான் பார்வையிழந்தவனாக உள்ளேன்.
எனக்கும் எனது கூட்டத்தாருக்கும் இடையிலுள்ள ஓடை மழைகள் வந்துவிட்டால் (நிறைந்து) ஓடுகின்றது. எனவே அதனைக் கடந்து செல்வது எனக்கு சிரமமாக ஆகிவிடுகின்றது. ஆகவே தாங்கள் எனது வீட்டிற்கு வந்து ஓரிடத்தில் தொழுதால் அந்த இடத்தைத் தொழுமிடமாக எடுத்துக் கொள்ளலாம் என நான் விரும்புகிறேன். அதற்கு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (அவ்வாறே) செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்னர் பகல் (வெயில்) கடுமையானபோது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அபூபக்கர் அவர்களுடன் என்னிடம் வந்து அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித் தேன். எனினும் அவர்கள் அமரவில்லை. உமது வீட்டில் எந்த இடத்தில் நாம் தொழுவதை நீர்விரும்புகின்றீர்? எனக்கேட்டார்கள். அவர்கள் தொழவேண்டும் என நான் விரும்பிய இடத்தின்பால் சுட்டிக் காட்டினேன். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) (போய்) நின்று தக்பீர் கட்டினார்கள். நாமும் அவர்களின் பின்னால் வரிசையில் நின்றோம். இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். அவர் கள் ஸலாம் கொடுத்தபோது நாங்களும் ஸலாம் கொடுத்தோம். அதன் பின்னர் அவர்களுக்காக செய்யப்படும் உணவைப் பரிமாறு வதற்காக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை நிறுத்திக் கொண்டேன் ..............

(ஸஹீஹுல் புஹாரி )


ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களது இந்த செயல் இரண்டு விடயங்களை உறுதிப்படுத்துகின்றது.
1- நப்லான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றலாம்.

2- நப்லான தொழுகைகள் இரண்டிரண்டாக
நிறைவேற்றப்பட வேண்டும்.

நப்லான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றலாம் என்பதற்காக ஒரு ஆதாரம் போதுமானது. இருந்தும் மேலதிகமாக மற்றுமொரு ஆதாரத்தையும் உங்களுக்குத் தருகின்றோம்.

ஆயிஷா (ரலியழ்ழாஹுஅன்ஹா) கூறுகின்றார்கள்:-

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஒருமுறை நடு இரவில் வெளியேறிச் சென்று பள்ளியில் தொழுதார்கள். ஒருசில மனிதர் அவர்களுடன் சேர்ந்து தொழுதார்கள். பின்னர் மக்கள் காலையை அடைந்ததும் (இது பற்றிக்) கதைத்துக் கொண்டார்கள். எனவே (அன்று இரவு) அவர்களைவிட அதிகமானோர் ஒன்று சோர்ந்தார்கள். (ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) )தொழுதார்கள், அவர்களுடன் சேர்ந்து அங்கு உள்ளவர்களும் தொழுதார்கள். பின்னர் மக்கள் காலையை அடைந்ததும் (இதுபற்றிக்) கதைத்துக் கொண்டார்கள். மூன்றாம் இரவு பள்ளியில் உள்ளவர்கள் இன்னும் அதிகரித்து விட்டார்கள். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) வெளியேறித்(தொழ) அவர்களது தொழுகையைப் பின்பற்றித் தொழப்பட்டது. நான்காம் நாள் இரவானபோது அங்கு உள்ளவர்களுக்கு இடம் போதாத அளவிற்கு ஆகிவிட்டது........
(ஸஹீஹுல் புஹாரி கி . ஸலாதுத்தராவீஹ்)

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் ஸஹீஹுல் புஹாரியிலே காணப்படக்கூடிய ஹதீஸ்களாகும். அந்த இரண்டு ஹதீஸ்களும் நப்லான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றலாம் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே தஸ்பீஹ் தொழு கையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனும் கேள்விக்கும் தெளிவாhன பதிலை ஸஹீஹான ஹதீஸிலே காட்டியிருக்கின்றோம். அல்ஹம்து லில்லாஹ்!


தஸ்பீஹ் தொழுகை ஓர் அறிமுகம்!


இஸ்லாத்திலே மிகச்சிறந்த செயலாகத் தொழுகை காணப் படுகின்றது. ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு ஜந்து தொழுகைகள் கட்டாயம் தொழுதே ஆக வேண்டும் என அழ்;ழாஹ் கட்டளை பிறப்பித்துள்ளான். ஜந்து நேரத் தொழுகை தவிர இன்னும் சில தொழுகைகளையும் அழ்ழாஹ் எமக்குத் தந்துள்ளான். அவற்றை நாம் நப்லான தொழுகைகள் என்கின்றோம். இந்தத் தொழுகை களை அதிகமதிகம் செய்வதன் மூலம் அழ்ழாஹ்வின் நெருக்கத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம். எம்மை அறியாமல் எமது கடமை யான தொழுகைகளில் ஏற்படக்கூடிய குறைகளுக்குப் பரிகாரமா கவும் இந்த நப்லான தொழுகைகள் அமைகின்றன. இத்தகைய நப்லான பல தொழுகைகள் காணப்படுகின்றன. அவற்றில் தஸ்பீஹ் தொழுகையும் ஒன்றாகும்.

தஸ்பீஹ் தொழுகை என்பது ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களால் தங்களது சிறிய தற்தையாகிய அப்பாஸ் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு விNஷட தொழுகையாகும். இத்தத் தொழுகை ஒரு அடியானை அழ்ழாஹ்விடத்தில் நெருக்கிவைப்பதுடன் அவனது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது. அவனது சிறிய பாவங்கள் ஒரு மணல் மலையளவு இருந்தால்கூட அவை மன்னிக்கப்பட்டுவிடும் என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியுள்ளாhர்கள்.

எனவே ஒரு முஸ்லிம் அதிகம் அதிகமாக இந்தத் தொழுகையைத் தொழ முயற்சிசெய்ய வேண்டும். முடியுமானால் ஒவ்வொரு நாளும் தொழுதுகொள்ளும்படி ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களே வழிகாட்டியுள்ளார்கள். குறைந்த பட்சம் வாழ்க்கையில் ஒரு முறையாவது தொழுது கொள்ள வேண்டும். நப்லான தொழுகைஎன்றாலே விரும்பியவர்கள் மேலதிகமாக நிறைவேற்றும் தொழுகை என்பதுதான் பொருளாகும். இருந்தாலும் இத்தகைய நப்ல் தொழுகைகள் மூலமே அடியான் அழ்ழாஹ்வை நெருங்குகின்றான் என அழ்ழாஹ் ஹதீஸுல் குத்ஸியிலே கூறியுள்ளான்.

ஒரு சிலர் "ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமாகக் கூறிய நம்பத் தகுந்த அறிவிப்புக்கள் இல்லை" என ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அதில் உண்மை இருக்கின்றதா என்பதை நாம் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் நம்பகமான ஹதீஸ்கள் இல்லாமல் எந்தவொரு அமலையும் நாம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது ஏற்கப்பட மாட்டாது என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களே கூறிவிட்டார்கள். எனவே தஸ்பீஹ் தொழுகை பற்றி பல அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து இறுதியில் தஸ்பீஹ் தொழுகை பற்றி ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கற்றுத்தந்துள்ள நபி மொழி நம்பகமானவர்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றது என்பதை அந்த அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே சிறு பாவங்கள் அனைத்தையும் அழித்துவிடக்கூடிய தஸ்பீஹ் தொழுகையை நாம் அதிகமதிகம் செய்யலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இப்போது கிடையாது.

தஸ்பீஹ் தொழுகையை நாம் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பது பற்றி இந்த நூலின் 53 ஆம் பக்கத்தில் தெளிவாக எழுதியுள்ளோம். அதேபோல் இந்தத் தொழுகையைத் தனித்தோ அல்லது ஜமாஅத்தாகவோ நிறைவேற்றலாம். ஜமாஅத்தாக நிறைவேற்றும் அரிதான சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்காமல் அதிகமதிகம் நன்மையை நாடும் முஸ்லிம்கள் தம்மால் முடிந்த அளவு தனியாகவும் இந்தத் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அழ்ழாஹ் எங்கள் அனைவருக்கும் சத்தியத்தை ஏற்று அதனைப்பின்பற்றுவதன் மூலம் அவனின் அருளால் சுவனம் நுழைந்திடக்கூடிய பெரும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!



 
 குறிப்பு:- இந்த ஆக்கம் சம்பந்தமான உங்கள் விமர்சனங்களை aljamaat73@gmail.com என்ற எமது மின்னஞ்ல் முகரியினூடாக எமக்கு அறியத் தரவும்.

No comments:

Post a Comment