இஸ்லாத்தின் மூலாதாரம் வஹியா? வரலாறா?
- முன்னுரை
- இஸ்லாத்தின் சிறப்பம்சம்
- இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வரலாறு
- கலந்துரையாடல் பற்றிய விபரம்
- கலந்துரையாடலின் சுருக்கம் ('ஜமாஅதுல் முஸ்லிமீன்' முன்வைத்த சத்தியம்)
- கேள்விகளும் பதில்களும்
- ஜாஹிலிய்யக் கூற்றுக்கள்
முன்னுரை
நபிமார்கள் அல்லாஹ்வின் தீனை எத்திவைத்த காலம் ஏறக்குறைய பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே முற்றுப்பெற்று விட்டது. அந்த நபிமார்களே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் செய்த இந்தப் பொறுப்பு இறுதித் தூதராகிய ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பின்னர் சுவனம் செல்லக்கூடிய ஒரே கூட்டமாகிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் மீதே சுமத்தப்பட்டிருக்கின்றது.
நபிமார்கள் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட சத்தியத்தை முன்வைத்தபோதே பெரும்பாலோர் சத்தியம் என விளங்கியும் அதனை பின்பற்றாது பல விதண்டாவாதங்களை புரிந்து கொண்டிருந்தனர். உதாரணத்திற்காக இறுதித்தூதராகிய ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் சத்தியத்தை முன்வைத்த போது அவர்களை அவர்களது சமூகம் எவ்வாறு நடாத்தியது என்பதனை அல்லாஹ் மிகத்தெளிவாக அல்-குர்ஆனிலே பின்வருமாறு கூறுகிறான் :-
(நபியே) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவரையா அல்லாஹ் (தனது) தூதராக அனுப்பி வைத்தான்? (எனக் கேட்கின்றனர். மேலும்) நாம் உறுதியாக இல்லாதிருந்திருக்கில் எங்களது இலாஹ்களைவிட்டும் திருப்பி, எங்களை வழிகெடுத்திருப்பார் (என்றும் கூறுகின்றனர்.) அவர்கள் வேதனையைக் கண்ணால் காணும் நேரத்தில் வழிகெட்டவர்கள் யார் என்பதனை நன்கறிந்து கொள்வார்கள். (நபியே) தனது மனோயிச்சையைத் (தான் பின்பற்றும்) தனது இலாஹாக எவன் எடுத்துக்கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா....? நீர் அவனுக்குப் பாதுகாப்பாளராக இருப்பீரா....? அவர்களில் பெரும்பாலோர் செவிமடுக்கின்றார்கள் என்றோ அல்லது அதனைச் சிந்திக்கின்றார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா.......? அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களேயன்றி வேறில்லை. மாறாக (மிருகங்களைவிடவும்) மிகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
(25:41-44)
சத்தியத்தை விளங்கியும் அதனை ஏற்றுக்கொள்ளாது மறுப்பதற்கு மிக முக்கிய காரணம் மனோயிச்சை வேறு ஒன்றை நாடுவதேயாகும். ஏப்போதுமே உண்மை என்னவெனில் மனோயிச்சைக்கு அடிபடக்கூடியவன் என்றுமே சத்தியத்தை பின்பற்றப்போவதில்லை. அதேநேரம் அனேகமாக அவன் தனது பலயீனத்தை ஏற்று தவறு தன்னுடையதே என்று ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.எனவே அவர்கள் ஏதோ நேர்வழியில் இருப்பது போன்று காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். இது எல்லாக் காலங்களிலும் உள்ளதேயாகும். அல்லாஹ்வால் இறக்கப்பட்டுள்ள சத்தியத்தை இன்றும் அதன் தூய வடிவில் அப்படியே எடுத்துக்கூறிடும் போது தங்களது மனோயிச்சையை பின்பற்றக்கூடியவர்கள் அந்த சத்தியத்தில் விதண்டாவாதம் புரிகின்றனர். சத்தியம் கூறப்படும் போது அல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல் அவர்கள் செவிமடுப்பதுமில்லை. அது பற்றி சிந்திப்பதுமில்லை.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது உம்மத் பிரிந்துவிட்ட இன்றைய நிலையில் சுவனம் செல்லக்கூடிய ஒரே கூட்டமாகிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் தன்மீதுள்ள கடமையை தன்னால் முடிந்த வரை செய்துகொண்டிருக்கின்றது. அத்தகைய ஒரு முயற்சியின் போது நடந்த நிகழ்வே இங்கு உங்களுக்கு கட்டுரை வடிவில் தரப்படுகின்றது. அல்லாஹ் இறக்கிவைத்துள்ள சத்தியத்தை பின்பற்றி வாழும் சந்தர்ப்பம் கிடைப்பதென்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளாகும். அந்த அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இவ்வாறு செய்வதன் நோக்கமாகும்.
நேர்வழியைத் தேடக்கூடியோர் முதலில் மனோயிச்சையை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்வின் வேதத்திற்கு காதுகொடுத்துக் கேட்பதுடன் அதுபற்றி நிதானமாக சிந்திக்காத வரையில் நேர்வழி கிடைக்கப்பெறுவதென்பது பகற்கனவேயாகும். எனவே அத்தகையவர்கள் ஒவ்வொருவரும் மனோயிச்சைக்கு அடிபணிவதை விட்டுவிட்டு அல்லாஹ்வின் தீனை ஏற்று வாழ்வதனைத் தான் தேர்வுசெய்யவேண்டி இருக்கின்றது.
இஸ்லாத்தின் சிறப்பம்சம்
அல்லாஹ் வழங்கியுள்ள ஒரே தீனாகிய இஸ்லாத்திற்குப் பல சிறப்பம்சம்ங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான சிறப்பம்சம் தான் இந்த தீன் இந்தப் பூமியில் உருவாக்கப்பட்டதல்ல என்பதாகும். ஏனைய எல்லா மார்க்கங்களும் ஒன்றோ இந்தப் பூமியில் உருவாக்கப்பட்டவை, அல்லது வானத்திலிருந்து இறக்கப்பட்ட தூய்மையான வழிகாட்டலுடன் இந்தப் பூமியில் உள்ளவர்களது சுய கருத்துக்களும் இரண்டறக் கலக்கப்பட்டவைகளாகும்.
அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதமாகிய அல்-குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும் முன்னதாக எத்தனையோ வேதங்கள் இறக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எந்தவொன்றும் இடைச்செருகல்களை விட்டும் பாதுகாக்கப்படவில்லை. ஏனெனில் அல்லாஹ் அவற்றைப் பாதுகாக்க நாடவில்லை. எனவே அவற்றை அல்லாஹ் பாதுகாப்பதாக வாக்குறுதி அளிக்கவுமில்லை. மேலும் தொடர்ந்து நபிமார்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்ததனால் அத்தகைய ஒரு தேவையும் இருக்கவில்லை. ஆனால் இறுதி நபியாக வந்த ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வேதம் முன்னைய வேதங்களைப் போலன்றி மறுமைநாள் நெருங்கும் வரை பாதுகாக்கப்படும் என அல்லாஹ்வால் வாக்குறுதி அளிக்கப்பட்டு, அது இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது. ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு பின்னர் நபிமார்கள் தோன்றமாட்டார்கள் என்பதால் அவ்வாறு பாதுகாக்கப்படுவது அவசியமானதும் கூட என்பதை நேர்வழியை நாடும் எவரும் மறுக்கமாட்டார்கள்.
இவ்வாறு மக்கள் நேர்வழி பெரும் பொருட்டு அல்லாஹ் தனது வேதத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் இந்த நிலையில் எப்படியாவது மக்களை வழிகெடுத்தேயாக வேண்டும் என செயல்படும் சிலர் எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்டிருக்கும் இந்த வேதத்தின் கருத்தையாவது மாற்றிவிடுவதற்காக, அந்த நேர்வழியை பின்பற்றுவதிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடுவதற்காக ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வின் வேதத்துடன் வேறு சிலவற்றைச் சேர்த்துவிட முயற்சி செய்கின்றனர். அவர்களது இந்த முயற்சி நிறைவேறிவிட்டால் எழுத்து வடிவில் அல்லாஹ்வின் வேதம் பாதுகாக்கப்படுவதில் எவ்வித பிரேயோசனமும் இருக்காது. இத்தகைய சதிகாரர்களின் தீங்கு பயங்கரமானது என்பதால் தனது வேதமாகிய குர்ஆனையும், ஹதீஸையும் எவ்வித மாறுதல்களும் இல்லாமல் பாதுகாப்பதாக கூறியுள்ள அல்லாஹ் செயல் ரீதியாக நேர்வழி செல்வோர் அந்த வேதத்தை விட்டும் ஒரு சிறிதளவேனும் விலகிச்சென்று விடாதிருக்கத் தனது தூதரையே எச்சரிக்கை செய்கின்றான். அல்லாஹ்வின் இத்தகைய எச்சரிக்கைகளைக் கேளுங்கள்.
அல்லாஹ் கூறுவதாவது :-
(நபியே) அல்லாஹ் இறக்கியருளியதைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! நீர் அவர்களது மனோயிச்சைகளைப் பின்பற்றாதீர். அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எந்தவொன்றை விட்டும் உம்மை அவர்கள் திசை திருப்பி விடாத படியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக! (உமது தீர்ப்பை) அவர்கள் புரக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்து கொள்ளும். அவர்களின் சில பாவங்கள் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு கஷ்டத்தை தர விரும்புகின்றான். நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் கெட்டவர்களாகவே இருக்கின்றனர். (5:49)
அல்லாஹ் கூறுவதாவது :-
அவர்கள் இந்த அல்-குர்ஆனை ஆராய்து பார்க்க வேண்டாமா? அல்லது (அவர்களது) உள்ளங்கள் மீது தாளிடப்பட்டுவிட்டதா? நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் அவர்கள் (அதனை பின்பற்றாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ அவர்களது தப்பான எண்ணங்களை ஷைத்தான் விரிவாக்கி, அவர்களுக்கு (அவற்றை) அழகாக்கியும் காட்டிவிட்டான். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை வெறுப்பவர்களை நோக்கி நாங்கள் சில விடயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம் என (இரகசியமாக) கூறுகின்றனர். அவர்களது இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் (இறக்கும் போது) உயிர்களை கைப்பற்றும் மலக்குகள் அவர்களது முகங்களிலும், அவர்களது முதுகுகளிலும் அடிக்கும் போழுது நிலமை எவ்வாறு இருக்கும்.......? ஏனெனில் அல்லாஹ்வுக்கு கோபமுட்டக் கூடியவற்றையே அவர்கள் பின்பற்றி, அவனுக்கு திருப்தி தரக்கூடியவற்றை வெறுத்து வந்தனர். ஆதலால் (அவர்கள் செய்து வந்த) அவர்களது (ஒரு சில நன்மையான) செயல்களை(யும் கூட அல்லாஹ்) அழித்து விட்டான். (47:24-28)
இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைகளும் எச்சரிக்கைளும் இருக்க அல்லாஹ்வின் வேதத்தை பின்பற்றவும் விருப்பமில்லாது, தங்களது வேஷம் கலந்துவிடும் என்பதற்காக மக்கள் அந்த சத்தியத்தை பின்பற்றிட அனுமதிக்கவும் விருப்பமற்ற ஒரு சிலரது முயற்சி என்னவெனில் அல்லாஹ்வின் வேதத்தை நேரடியாக மாற்ற முடியாத அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கு எவற்றில் முரண்படுகிறார்களே அவற்றில் அவர்கள் விரும்பும் கேடயத்தை முன்வைத்து அல்லாஹ்வின் வேத்திலுள்ள உண்மைகளை மாற்ற முயற்சி செய்கின்றனர்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து தோன்றிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றக்கூடியோர் அந்த மத்ஹபுகளை இஸ்லாத்தில் உள்ளதாக கூறி அவற்றின் மூலம் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து மக்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். அந்நிய மதங்களிலிருந்து இரவலாகப் பெற்ற சூபித்துவத்தை கொண்டு தரிக்காக்கள் எனும் பெயரில் மற்றொரு பெயரில் மக்களை அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் திசை திருப்பி வழிகெடுக்கின்றனர். இஸ்லாத்தை வளர்ப்பதாகக் கூறி பல பிரிவுகளை இயக்கங்கள் எனும் பெயரில் தோற்றுவித்து மற்றொரு பிரிவினர் மக்களை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து திசை திருப்புகின்றனர். இவர்களுள் இயக்கங்கள் மூலம் மக்களை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து திசைதிருப்பிட முயற்சி செய்வோர் அல்லாஹ்வின் வேதத்துடன் கலந்து விட முயற்சி செய்பவற்றுள் வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
அல்லாஹ்வின் வேதமாகிய குர்-ஆனையும், ஹதீஸையும் மாத்திரம் பின்பற்ற வேண்டும் எனக் குரல் கொடுத்துக்கொண்டிருந்த சில பிரிவினைவாதிகள், சுவனம் செல்லும் கூட்டமாகிய ஜமாஅத்துல் முஸ்லிமீனின் வருகையுடன் குர்ஆன் ஹதீஸ் மட்டுமல்ல குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் முரணான வரலாறுகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறுவதுடன், அவ்வாறே செயல்படவும் ஆரம்பித்து விட்டனர். அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணானவற்றை மன்ஹப்வாதிகள் எப்படித் தங்களது மத்ஹப்களைக் காரணம் காட்டிப் பின்பற்றுகின்றனரோ அதேபோன்று இவர்கள் குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் முரணான வரலாற்று சம்பவங்களை காரணம் காட்டி அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்று விளக்கம் கூறுவதுடன், அந்த விளக்கங்களை பின்பற்றுவதன் மூலம் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க முயற்சி செய்கின்றனர்.
மேற்கண்டவாறு செயல்படக்கூடியோரில் இலங்கை அக்கறைபற்றைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் ரஈஸூத்தீனும் ஒருவராவார். சத்தியத்தை விளங்கிக் கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் எனக்கூறி சுவனம் செல்லும் கூட்டமாகிய ஜமாஅத்துல் முஸ்லிமீனுடன் ஓர் கலந்துரையாடலை நடாத்தினார். அவர் அந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் 'குர்ஆனும் ஹதீஸூம் மாத்திரமே ஆதாரங்களாக முன்வைக்கப்பட வேண்டும்' எனும் நிபந்தனைக்கு உடன்பட்டிருந்தாலும், அல்லாஹ்வின் வேதம் பாதுகாக்கப்படுவதற்கு வரலாறு அவசியம் என ஆரம்பித்து, இறுதியில் குர்ஆனையும் ஹதீஸையும் ஒருபுறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு, அவற்றுடன் நேரடியாக முரண்படக்கூடிய போலிவரலாற்றுச் சம்பவங்களை முன்வைத்து குர்ஆன் ஹதீஸூக்கு மாற்று விளக்கம் கொடுத்த போது இஸ்லாத்தை புரிந்து கொள்ளாத, வழிதவறியவர்களில் அவரும் ஒருவர் எனும் உண்மை அம்பலமானது. அவர் வழிகேட்டில் எந்த அளவு தூரம் சென்றுவிட்டாரெனில் வரலாற்றை மறுப்பவன் 'காபிர்' என்று ஒரு அறவீனமான பத்வாவையே வெளியிட்டுவிட்டார்.
அல்லாஹ்வின் வேதத்தையே ஒதுக்கித் தள்ளும் அளவிற்கு டா.ரஈஸூத்தீன் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த வரலாற்றிற்கும் இஸ்லாத்திற்குமுள்ள தொடர்பை இங்கு தெளிவுபடுத்துவது அவசியாகின்றது. அதன்பின்னால் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கும், டா.ரஈஸீத்தீனுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடல் பற்றிய விபரத்தை தருகின்றோம்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வரலாறு
அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனும், ஹதீஸூம் இன்றும் எங்களுக்கு நேர்வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நேர்வழி பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வினால் தனது இறுதித் தூதராகிய ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதாகும். இதனை அல்லாஹ் எங்கள் கரம் வரைக்கும் கிடைக்கச் செய்வதற்கு சில மனிதர்களை இதற்கான ஊடகமாக அல்லாஹ் பயன்படுத்தியிருப்பது போன்று அச்சுத்துறை, எழுத்துத்துறை ஊடகங்கள் மூலமாக மாத்திரம் ஒரு போதும் அல்லாஹ்வினது வேதம் பாதுகாக்கப்பட்ட முடியாது. இந்த ஊடகங்களை ஏற்படுத்திய அல்லாஹ் :-
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். மேலும் (அதில் எத்தகைய மாறுதலும், அழிவும் ஏற்படாமல்) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போருமாவோம். (15:9)
எனக்கூறியதன் மூலம் வழங்கிய பாதுகாப்புத்தான் இதுவரை அல்லாஹ்வின் இறுதி வேதம் ஒரு எழுத்துக்கூட மாற்றமில்லாமல் பாதுகாக்கப்படுத்துவதற்கான காரணம். இல்லையெனில் இதற்கு முன்னர் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட பல்வேறு வேதங்கள் உருத்தெரியாது மாற்றப்பட்டுவிட்டன. ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அறுநூறு ஆண்டுகள் முன்னர் தோன்றிய ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது காலம்வரைகூட பாதுகாக்ப்பட்டதாக இருக்கவில்லை.
ஒரு குறிப்பிட்ட காலம்வரை தனது இறுதி வேதத்தை மனிதர்கள் மூலமும் எழுத்துத்துறை மூலமும் பாதுகாத்த அல்லாஹ் பின்னர் அதனைப் புத்தக வடிவில் இன்று வரை பாதுகாத்து வருகின்றான். இன்றைய காலத்தில் அது மிக நவீன சாதனமாகக் கருதப்படுகின்ற கணனியிலே பதிந்து வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு அல்லாஹ் தனது வேதத்தைப் பாதுகாத்திடும் பெறுப்பைத் தன்னிடமே வைத்துள்ளதால் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படும் என்பதை அல்லாஹ்வை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
இறுதித் தூதராகிய ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட வேதத்தை கொண்டு ஒரு ஜமாஅதுல் முஸ்லிமீனை (முஸ்லிம்களின் கூட்டமைப்பு)க் கட்டியெழுப்பினார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது மறைவிற்குப் பின்னர் அந்த ஜமாஅதுல் முஸ்லிமீனில் காணப்பட்ட கண்ணியமிக்க நபித்தோழர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாகத் தங்களுக்கு மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்காக சண்டையிட்டதாக சில வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன. அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனிற்கும் ஹதீஸிற்கும் முரணான வரலாறுகளைப் பின்பற்றுகின்றவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, அல்லாஹ்வால் பெருந்திக் கொள்ளப்பட்ட நரித்தோழர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை சரிபிழை பற்றிய எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல் நம்புவதுடன் அவற்றை ஆதாரங்களாகவும் முன்வைக்கின்றனர்.
பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரணான ஒரு ஹதீஸ் வந்துவிட்டால் அந்த ஹதீஸை புறக்கணிக்கும் இவர்கள், ஹதீஸூடைய அந்தஸ்த்திற்கு நெருங்கவும் முடியாத வரலாற்றுச் சம்பவங்களை அவை அல்லாஹ்வின் வேதத்துடன் முரண்பட்டாலும் அவற்றை அப்படியே நம்புவதுடன் பின்பற்றவும் முற்படுகின்றனர். இந்த செயலானது எழுத்துவடிவில் பாதுகாக்கப்பட்டுள்ள அல்லாஹ்வின் இறுதிவேதத்தின் மிகச்சிறந்த வாழிகாட்டலிலிருந்து மக்களை திசை திருப்பும் மிகப்பயங்கரமான ஒரு சதி முயற்சியே தவிர வேறில்லை.
நபித்தோழர்கள் மனிதன் எனும் ரீதியில் சில தவறுகளைச் செய்திருந்தால் கூட அவர்களை அல்லாஹ் பெருந்திக்கொண்டு விட்டான் என மிகத் தெளிவாக கூறியுள்ளதால் அவர்களது தவறுகளைப் பற்றி கதைக்கும் உரிமையோ, தகுதியோ எமக்கில்லை என்பதுதான் நேர்வழி சென்ற முஸ்லிம்களின் முடிவாகும்.
வரலாற்றுக் குறிப்புக்களில் நபித்தோழர்கள் பற்றிய பல அபாண்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. சாதாரண மனிதர்களாகிய எம்மைப்போன்ற முஸ்லிம்கள் கூட செய்ய முடியாத தவறுகளை அந்த உத்தம நபித்தோழர்கள் செய்ததாக பொய்யர்களும் தஜ்ஜால்களும் அறிவிக்கும் கதைகளை, குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுபவர்களாகக் கூறிக்கொள்பவர்கள் ஆதாரங்களாக முன்வைப்பது ஒன்றே அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும், தடுமாற்றத்திலும் இருக்கின்றார்கள் என்பதற்கு போதிய சான்றாகும். இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட மிக மேலாக இத்தகைய அபாண்ட வரலாறுகளை மதிக்கின்றனர். அதாவது அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணான போலி வரலாறு காணப்பட்டால் அந்தப் போலி வரலாற்றை நம்புவதுடன் அதனைப் பின்பற்றுவதே நேர்வழி என மக்களை நம்பச் செய்யவும் முயச்சிக்கின்றார்கள். இது எந்த அளவு தெளிவான வழிகேடு..........?
முஸ்லிம் என மார்தட்டிக் கொள்ளும் பெரும் பெரும் படித்தவர்களில் கூட அனேகமானோர் அறிந்திராத ஒரு மகத்தான உண்மை இவ்விடத்தில் மிக அழுத்தமாகக் கூறப்பட வேண்டும். அதாவது எமது முன்னோர்களான நபித்தோழர்கள் பற்றியோ அல்லது ஏனைய முஸ்லிம்களைப் பற்றியோ வரலாற்றுச் சம்பவம் எனும் பெயரில் ஏதேனும் கூறப்பட்டால் ஹதீஸ்களை நாம் எப்படி சரிபிழையை ஆராயந்து ஏற்கின்றோமோ அதேபோன்று ஆராய்நது சரிகண்ட பின்பே அந்த வரலாறு என்ன கூறுகிறது எனப் பார்க்க வேண்டும் என்பதே உண்மையாகும். இச்செய்தி உங்களுக்கு சிலவேளை ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அனேகமானோர் வழிகேடுவதற்கு இதனை அறியாததே காரணமாகும். அல்லாஹ்வின் மீதும், ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும் பொய்செல்லக்கூடியோர் நபித்தோழர்கள் மீது பொய் சொல்லமாட்டார்களா............? ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது காலத்திலேயே ஒரு நபித்தோழர் மீது:- அவர் ஸகாத்தைத் தர மறுத்ததாகவும், அதனை கேட்கச் சென்ற தன்னை அவர் கொலை செய்ய முற்பட்டதாகவும் அபாண்டம் சுமத்தப்பட்ட போது தான் பின்வரும் அல்-குர்ஆனிய வசனம் இறங்கியது.
அல்லாஹ் கூறுகிறான்:-
விசுவாசிகளே! தீயவன் எவனும் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் (அதனை) தீர விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லவிட்டால்) ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படவேண்டி ஏற்பட்டுவிடும். (49:6)
எனவே முதலில் வரலாற்றுச் சம்பவங்கள் என வருகின்ற போது அது நம்பவமானவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதா? என ஆராய வேண்டும். இரண்டாவது அந்த வரலாற்று குறிப்பு நபித்தோழர்களைப் பற்றியதாக இருந்தால் அது அல்லாஹ்வும் அவனது தூதரும் கண்ணியமிக்க நபித்தோழர்களைப்பற்றிக் கூறியவற்றுடன் முரண்படாமல் இருக்கின்றதா? என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் வரலாற்றுச் சம்பவங்களை அறிவிக்கக் கூடியவர்கள் எவ்வளவுதான் நம்பகமானவர்களாக இருந்தாலும் அலர்களது செய்தி அல்லாஹ்வின் செய்தியைப்போன்றோ, அல்லது அவனது தூதரின் செய்தியைப்போன்றோ ஒருநாளும் இருக்கமுடியாது. அவற்றைப் பாதுகாப்பதாக அல்லாஹ் உத்தரவாதமளிக்கவும் இல்லை.
நபித்தோழர்களின் அந்தஸ்தினை நீங்கள் சிறிதளவாவது புரிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் வழங்கியுள்ள நற்சான்றுகளில் ஒரு சிலவற்றை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான்:-
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலில் முந்திக்கொண்டு (ஹிஜ்ரத் செய்தல், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவி செய்தல் போன்ற) நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்க(ளான ஏனைய நபித்தோழர்க)ளையும் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்துவிட்டான்¢ அவர்களும் அல்லாஹ்வைப்பற்றி திருப்தி அடைந்து விட்டனர்¢ மேலும் (அல்லாஹ்) சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை அவர்களுக்கு என சித்தப்படுத்தியும் வைத்திருக்கின்றான். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (9:100)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:-
அந்த மரத்தடியில் உம்மிடம் (கைகொடுத்து) வைஅத்துச் செய்த விசுவாசிக(ளாகிய நபித்தோழர்க)ளைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்து விட்டான். மேலும் அவர்களது உள்ளங்களில் இருந்த (தூய எண்ணத்)தை நன்கறிந்து, ஆறுதலையும் அவர்கள்மீது சொரிந்தான். மேலும் விரைவான ஒரு வெற்றியையும் அவர்களுக்கு (வெகுமதியாக)க் கொடுத்தான். (48:18)
அல்லாஹ் கூறுகின்றான்:-
தங்கள் வீடுகளைவிட்டும், தங்களது பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்ட ஏழை முஹாஜிரீன்களுக்கும் ('பை' எனும் கனிமத் பொருளில் பங்குண்டு.) அவர்கள் அல்லாஹ்வின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி (யாவற்றையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையாளர்கள். மேலும் யார் (தங்களது) ஊராக (மதீனாவை)க் கொண்டு, (முஹாஜிர்களாகிய) அவர்களுக்கு முன்னதாகவே விசுவாசமும் கொண்டிருந்தனரோ அவர்கள் தம்மிடம் ஹிஜ்ரத் செய்து வருவோரை நேசிப்பதுடன், அவர் (முஹாஜிரீன்)களுக்கு (மட்டும்) கொடுக்கப்படுவதைப்பற்றி தங்கள் உள்ளங்களில் குறையாகக் காண்பதுமில்லை. அன்றி தங்களுக்கு தேவையுள்ளபோதிலும் தங்களைவிட அவர்களுக்கு (கொடுக்கப்படுவதையே) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். மேலும் யார் போராசையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கின்றனரோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். (59:8,9)
ஒரு முறை ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் வானத்தை நோக்கிய நிலையில் கூறியதாவது:-
நட்சத்திரங்கள் வானத்திற்கு பாதுகாப்பாகும். நட்சத்திரங்கள் நீங்கிவிட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்படக்கூடியது (அழிவு) வந்துவிடும், நான் எனது தோழர்களுக்குப் பாதுகாப்பாவேன். நான் சென்று(மரணித்து) விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்படக்கூடியது வந்துவிடும். எனது தோழர்கள் சமுதாயத்திற்குப் பாதுகாப்பாவார்கள். எனது தோழர்கள் சௌ;றுவிட்டால் எனது சமுதாயத்திற்கு வாக்களிக்கப்படக்கூடியது வந்து விடும். (ஸ.முஸ்லிம் - 4596)
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
மனிதர்களுக்கு ஒரு காலம் வரும் (அக்காலத்தில்) மனிதர்களில் ஒரு கூட்டம் யுத்தம் புரிந்துகொண்டிருக்கும். (அந்த வேளையில்) உங்களில் ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களுடன் தோழமை கொண்டிருக்கும் எவரும் இருக்கின்றனரா? எனக் கேட்பார்கள். (வேறுசிலர்) ஆம் எனக் கூறுவார்கள். எனவே (அந்த நபித்தோழரின் சிறப்பால் வெற்றி கிட்டும். (ஸ.புஹாரி – 3376)
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
எனது தோழர்களைத் திட்டாதீர்கள்! எனது தோழர்களைத் திட்டாதீர்கள்!! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை செலவு செய்தாலும் (நபித்தோழர்களாகிய) அவர்களது இரு கையளவு (அல்லது) அதில் அரைவாசியைக்கூட அடைந்துகொள்ள மாட்டார். (ஸ.முஸ்லிம் - 4610)
முஹாஜிரீன்கள் (மக்காவிலிருந்து மதீனாவிற்கு) வந்தபோது ஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களையும் ஸஅத் பின் ரபீஃ (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களையும் சகோதரர்களாக்கி வைத்தார்கள். (ஸஅத் பின் ரபீஃ (ரழியல்லாஹுஅன்ஹு)) அப்துர்ரஹ்மான் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களை நோக்கி :-
மதீனாவாசிகளிலேயே அதிகசொத்துடையவானாக நான் இருக்கின்றேன். ஏனவெ தனது சொத்துக்களை இரண்டாக பிரித்து (உமக்கு அரைவாசியைத்) தருகின்றேன். எனக்கு இரு மனைவியர் இருக்கின்றனர். அவ்விருவரில் உமக்கு மிகவும் விருப்பமானவளைப்பார்த்து என்னிடம் அவளது பெயரைக் கூறுவீராக. நான் அவளைத் தலாக் சொல்லி விடுகின்றேன். பின்னர் அவளது இத்தாக் காலம் முடிந்ததும் நீர் அளைத் திருமணம் செய்து கொள்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள், 'அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது சொத்திலும் அபிவிருத்தியைத் தருவானாக! உங்களது சந்தை எங்கே இருக்கின்றது (என்பதை மாத்திரம் காட்டுங்கள்)' எனக் கூறினார்கள். (ஸ.புஹாரி – 2496)
இந்த அளவிற்கு அல்லாஹ்வினாலும், அவனது இறுதித் தூதரினாலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள நபித்தோழர்களின் அந்தஸ்த்தினைத் தாழ்த்தி வரலாறுகள் எதையெனும் கூறினால் அவற்றை ஒரு போதும் ஒரு முஸ்லிம் நம்பக்கூடாது. ஆதாரபுர்வமான பல ஹதீஸ்களுக்கு முரணான ஹதீஸ் என வரும் தனித்த ஒரு கூற்று எவ்வாறு ஒதுக்கப்படுகின்றதோ அதேபோன்று அந்த வரலாறுகளையும் ஒதுக்கிவிட வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் நற்சான்றுக்கு முரணாக இருப்பது ஒன்றே அந்த வரலாறு கூறும் விடயம் பொய் என்பதற்கு போதிய சான்றாகும்.
மேற்கண்ட உண்மைகளைப் புரிந்து கொள்ளாத, நபித்தோழர்களின் அந்தஸ்த்துகளை தெரிந்துகொள்ளாத ஒருவர் தனது அறியாமையின் காரணமாக அறிவிப்பாளர் வரிசையை மாத்திரம் நம்பி குர்ஆனினதும், ஸஹீஹான ஹதீஸ்களினதும் சட்டங்களை புறக்கணிப்பதற்கு வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரமாக கொள்ளுதல் மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் வரலாறுகளைப் பின்பற்றும்படி கட்டளையிடும் குர்ஆன் வசனமோ அல்லது ஹதீஸோ கிடையாது. எனவே குர்ஆன் வசனங்களுக்கு முன்னால் அல்லது ஸஹீஹான ஹதீஸிற்கு முன்னால் வரலாறு என்பது செல்லாக்காசாகும்.
ஆகவே சுருக்கம் என்னவெனில் இஸ்லாமிய பார்வையில் வரலாறுகள் நம்பகமான அறிவிப்பாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு அவை அல்லாஹ்வின் வேதத்துடன் முரண்படாத வரையில் அதனை ஒரு முஸ்லிம் நம்பலாம். அதனைப் பின்பற்றுவது மார்க்க ரீதியில் அவன்மீது எந்த வகையிலும் கடமையாகாது. அந்த வரலாறுகள் கண்ணியமிக்க நபித்தோழர்களைத் தரம் குறைத்துக்கூறுகின்ற வரலாறுகளைப் போன்று அல்லாஹ்வின் வேதத்துடன் முரண்படுகின்ற போது அதனை நம்பவேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அத்தகைய வரலாற்றைப் பின்பற்றுவோர் தங்களது மனோயிச்சைப்படியே அவ்வாறு செய்கின்றனர் என்பதைத்தவிர வேறு இல்லை.
கலந்துரையாடல் பற்றிய விபரம்
டா.ரஈஸூத்தீனுடன் நடந்த கலந்துரையாடலில் அவரது வாதம் குறிப்பாக நான்கு அம்சங்களைக் கொண்டிருந்தது. அவர் தனது வாதத்தின்போது இடையிடையே சில கேள்விகளை முன்வைத்தார். அதே போன்று அவர் மிகத் தெளிவானதொரு வழிகேட்டிலிருப்பதன் காரணமாக சில அறிவீனமான கருத்துக்களையும் முன்வைத்தார். அத்துடன் அறபுமொழியில் தனக்கு ஆழமான அறிவு இருப்பதாக நினைத்து, அறபு மொழியிலயே சில விடயங்களை இருப்பதாக வாதித்தார். இவ்வாறு தெளிவான வழிகேட்டில் இருந்து கொண்டு தனக்கு அறிவில்லாத விடயங்களிலெல்லாம் வாதித்ததன் காரணமாக அவரிடம் பல முரண்பாடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
எனவே கலந்துரையாடல் பற்றிய விபரத்தில் வழிகேட்டில் இருக்கும் டா.ரஈஸூத்தீனின் வாதத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து உங்கள் முன் சமர்ப்பிப்பது அவசியமாகும். ஆனால் ஒரே கட்டுரையில் விபரித்துவிட முடியாது. எனவே இந்த நான்கு பகுதிகளில் இரண்டை மாத்திரம் இந்த கட்டுரையில் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம். ஏனைய இரு பகுதிகளும் மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்கள் முன் தெளிவுபடுத்தப்படும். இதில் முதலாவது பகுதியில் அவரது கேள்விகளைத் தொகுத்து அவற்றிற்கான பதில்களை 'கேள்விகளும் பதில்களும்' எனும் தலைப்பில் வழங்குகிறோம். அதனையடுத்து அவரது அவரது அறிவீனமான கருத்துக்களையும் அவற்றிலுள்ள தவறுகளையும் 'ஜாஹிலிய்யக் கருத்துக்கள்' எனும் தலைப்பில் சுட்டிக்காட்டுகின்றோம். அல்லாஹ் யாருக்கு நலவை நாடியிருக்கின்றானோ அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி கிடைக்க வேண்டும் என்பதே நாம் அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனையாகும்.
கலந்துரையாடலின் சுருக்கம்
ஜமாஅதுல் முஸ்லிமீன் இலங்கைக் கிளைக்கும் டா.ரஈஸூத்தீனுக்கும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற கலந்துரையாடலின் சுருக்கம் என்னவெனில் ஜமாஅதுல் முஸ்லிமீன் தனது வழமைப் பிரகாரம் அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படும் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் அதுவே சத்தியம் எனவும் டா.ரஈஸூத்தீனை நேர்வழியின் பால் அழைத்தது. வஹியின் ஆதாரத்துடன் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைத்த சத்தியத்தின் சுருக்கம் பின்வருமாறு :-
'ஜமாஅதுல் முஸ்லிமீன்' முன்வைத்த சத்தியம்
யூதர்கள், கிறிஸ்தவர்கள், மக்க முஷ்ரிகீன்கள் போன்ற ஒவ்வொரு கூட்டமும் 'நாங்கள் சுவனம் செல்லக்கூடியோர், நாங்கள் நபிமார்களைப் பின்பற்றுகிறோம், நாங்கள் வேதங்களைப் பின்பற்றுகிறோம், நாங்கள் இஸ்லாத்தில் இருக்கின்றோம்' என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தோர் காலத்தில் நபியாக அனுப்பப்ட்ட ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நேர்வழியாகிய இஸ்லாத்தை முன்வைத்து அதன்பால் மக்களை அழைத்தார்கள் அவ்வழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டார்கள். அதனை ஏற்றுக்கொள்ளாதோர் தங்களை முஸ்லிம்கள் எனக் கூறியபோது கூட 'பொய் சொல்கிறீர்கள்' எனக்கூறி அவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களாக ஏற்க மறுத்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் முன்வைத்த கொள்கையை ஏற்றுவிட்டு, பின்னர் அதிலிருந்து வெளியேறிச் செல்லக்கூடியோரை 'முர்தத்' (மதம் மாறியவர்)களாக கணித்தார்கள். இது ஜமாஅதுல் முஸ்லிமீன்' என்றால் என்ன என்பதற்கு செயல்முறை விளக்கமாகும். சுவனம் செல்லக்கூடிய கூட்டத்தை உருவாக்கி, வழிநடாத்திச் சென்ற ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் தனக்குப் பின்னால் மறுமைநாள் வரைக்கும் தோன்றக்கூடிய ஒவ்வொரு மனிதனும், ஜின்னும் சுவனத்தை அடைந்து கொள்வதற்கான பாதையை மிகத்தெளிவாக் கோடிட்டுக் காட்டிச் சென்றுள்ளார்கள். அது பின்வருமாறு :-
1.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது 'உம்மத்' அவரது மரணத்திற்குப் பின்னால் பிரிந்து பிளவுபட்டு விடும்
அப்பிரிவுகளில் ஒன்று மாத்திரமே சுவனம் செல்லும்.
சுவனம் செல்லும் அப்பிரிவு தலைமைத்துவத்தையும் கட்டுப்பாட்டையும் கொண்ட ஒலு கூட்டமைப்பாக (அல்ஜமாஅத்தாக)க் காணப்படும்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்கள் 72 ஆகப் பிரிந்தார்கள். நிச்சயமாக இந்த உம்மத் 73 ஆகப் பிரியும். 72 (பிரிவுகள்) நரத்திற்கு செல்லும் ஒன்று (மாத்திரம்) சுவனம் செல்லும். இது கூட்டமைப்பு (அல்ஜமாஅத்) ஆகும். (அஹ்மத், அபூதாவூத்- ஹஸ்ஸனஹூல் அல்பானி)
2.
• ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது 'உம்மத்' பிரிந்துவிட்டதெனில் 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' தவிர்ந்து எந்தவொரு பிரிவிலும் சேரக்கூடாது. ஏன்! 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' இல்லாவிட்டால்கூட பிரிவுகளில் சேரக்கூடாது. பிரிவுகளில் சேராதிருப்பது பல சோதனைகளுக்கு எம்மை ஆளாக்கினாலும் சரியே.
• சுவனம் செல்லும் கூட்டத்தின் பெயர் 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' என்பதாகும்.
• 'ஜமாஅதுல் முஸ்லிமீன்' சேர்ந்திருப்பது ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களது கட்டளைப்படி கடமையாகும்.
'பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் நான் வாழ நேரிட்டால் எனக்கு நீங்கள் கட்டளையிடக் கூடியதென்ன?' என ஹூதைபா (ரழியல்லாஹுஅன்ஹு) ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்களை நோக்கிக் கேட்டபோது, 'ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பற்றிப் பிடிப்பீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஹூதைபா (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் ' அவர்களுக்கு என ஒரு ஜமாஅத்தும், ஒரு இமாமும் இல்லை என்றால்....?' எனக் கோட்டபோது ' அவ்வனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கி விடுவீராக! உமக்கு மரணம் வரையில் ஏதேனும் ஒரு மரத்தின் வேரைத்தான் கடித்திருக்க வேண்டிய (தனித்த) நிலை ஏற்படினும் சரியே!' எனக் கூறினார்கள். (ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
3. 'ஜமாஅதுல் முஸ்லிமீனோடு' இணைந்திருத்தல் விசுவாசத்தின் அடையாளமாகும்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
'விசுவாசியினது உள்ளம் மூன்று விடயங்களில் மோசடி செய்யாது
• செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு எனும் தூய்மையோடு செய்தல்
• தலைவர்களுக்கு கட்டுப்படுதல்
• 'ஜமாஅதுல் முஸ்லிமீனோடு இணைந்திருத்தல். (ஹாகிம்-ஸஹீஹ்)
4. அமீருக்கு பைஅத் செய்வது கடடையாகும்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
யார் தனக்கென ஒர் இமாம் இல்லாத நிலையில் மரணிக்கின்றாரோ, நிச்சயமாக அவரது மரணம் ஜாஹிலிய்ய மரணமேயாகும்.' (முஸ்தத்ரக் ஹாகிம்- ஸஹீஹ்)
தனது கழுத்தில் (அமீருடனான) பைஅத் இல்லாத நிலையில் யார் மரணிக்கின்றாரோ, நிச்சயமாக (அவரது மரணம்) ஜாஹிலிய்ய மரணமேயாகும்.' (ஸஹீஹ் முஸ்லிம்)
5. 'ஜமாஅதுல் முஸ்லிமீனை' விட்டும் ஒரு சாண் அளவு பிரிந்து செல்வது கூட இஸ்லாத்தை விட்டும் பிரிந்து செல்வதாகும்.
ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் :-
'யார் ஒரு சாண் அளவேனும் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு மாறு செய்கின்றாரோ அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் வளையத்தை களைந்(து எறிந்)தவராவர்.
(முஸ்தத்ரக் ஹாகிம்-ஸஹீஹ்)
No comments:
Post a Comment