மாறாக சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்தின்மீது எறிகின்றோம். அது (அசத்தியமாகிய) அதன் தலையைப் பிளந்துவிடுகின்றது. எனவே அது அழிந்தும் விடுகின்றது.........
( 21 : 18 )
இன்ஷா அல்லாஹ் இந்தப்பகுதியில் தூய இஸ்லாத்திற்கு முரணாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆதாரங்களுடன் அலசப்பட்டு, வஹியின் ஒளியில் நேர்வழி தெளிவுபடுத்தப்படும். வாசகர்களும் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய இஸ்லாம் பற்றிய ஆக்கங்களை எந்தப் பிரிவினர் வெளியிட்டாலும் அவற்றை எமக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அது பற்றிய தெளிவான இஸ்லாமிய கண்னோட்டத்தை விளங்கிக்கொள்ள முடியும். அதேபோல் ஜமாஅதுல் முஸ்லிமீன் முன்வைக்கக்கூடிய முடிவுகளைத் தவறாகக் காணக்கூடிய அறிஞர்களும் அதுபற்றிய தங்கள் கருத்துக்களை ஆதாரங்களுடன் எமக்கு எழுதினால் அவையும் இங்கு அலசப்படும்.
விசுவாசம் கொண்டவர்களே! அழ்ழாஹ்வை அஞ்சுவதுடன் நேரான வார்த்தைகளையே கூறுங்கள். (அவ்வாறு நடந்தால்) உங்க ளது செயல்களை உங்களுக்கு சீர்படுத்தித் தருவதுடன், உங்களது பாவங்களையும் உங்களுக்கு மன்னித்தருள்வான். யார் அழ்ழாஹ்வுக் கும் அவன் தூதருக்கும் வழிப்படுகின்றாரோ நிச்சயமாக (அவர்) மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டான். ( 33 : 70,71 )
மகத்தான வெற்றிக்கு மேற்கண்ட வசனம் சாதாரணமான ஒரு செயலையே நிபந்தனையாக்குகின்றது என ஒருவர் நினைத்தால் ஒரு வகையில் அந்த எண்ணம் சரியானதே. ஆனால் அழ்ழாஹ்வின் அருள் இல்லாதவர்கள் அவ்வளவு இலகுவான நிபந்தனையைக்கூட நிறைவேற்ற மாட்டார்கள் என்பதனையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அழ்ழாஹ்வின் வேதத்தை மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களது செயலால் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, அதற்குப் பகரமாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் இயக்கங்களையும் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். இதனைவிட்டும் மக்களைத் தடுத்து, மக்களுக்குப் பின்பற்றும்படி ஏவப்பட்டுள்ள அழ்ழாஹ்வின் வேதத்தின்பால் அழைப் பதற்காக ஒரு பிரிவு தோன்றியது. பொதுவாக அவர்கள் தௌஹீத் ஜமாஅத் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அந்தப் பிரிவிற்குள் ஒன்று மற்றதுடன் முரண்படக்கூடிய பல்வேறு உப பிரிவுகள் பல்வேறு பெயர்களில் காணப்படுகின்றன. இவர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு முரணான விடயங்களை எடுத்துக் கூறியபோது ஏனைய பிரிவுகளில் உள்ளவர்கள் அந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக குர்ஆன் ஹதீஸ்களின் பொருளை மாற்றி, தாம் செய்யும் தவறுகளுக்கு ஏற்றவாறு பிழையான கருத்துக் கொடுப்பதன் மூலம் நியாயம் கற்பித்தனர். இவ்வாறு மக்கள் செயல்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கௌரவச் சிக்கலாகும். இதுதான் பெரும்பாலும் ஒரு மனிதனை உண்மையை ஏற்றுக்கொள்வதை விட்டும் தடுத்து விடுகின்றது.
இதே செயலைத்தான் தௌஹீத் ஜமாஅத் எனும் பிரிவினரும் இப்போது செய்கின்றனர். அதாவது பிற மக்களின் தவறுகளை சுட்டிக் காட்டும்போது குர்ஆன் ஹதீஸ் என்று துள்ளிக் குதித்த தௌஹீத் ஜமாஅத் எனும் பிரிவு தங்களது தவறு என வருகின்றபோது ஏனைய மக்கள் இவர்கள் சுட்டிக் காட்டிய ஆதாரங்களை எவ்வாறு மாற்றுக் கருத்துக்கள் கூறிப் புறக்கணித்தனரோ அதேபோன்று இவர்களும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றுக் கருத்துக்கள் கூறிப் புறக்கணிக்கின்றனர். இதற்கான தெளிவான ஒரு உதாரணத்தை முதலில் முன்வைத்துவிட்டு ஸூரா காப் சம்பந்தமான ஆய்விற்கு வருகின்றேன். இந்த உதாரணம் நான் மேலே எழுதிய விடயம் உண்மை என்பதையும் உங்களுக்கு உறுதிப்படுத்தும்.
நான்கு மத்ஹபுகளில் ஒரு மத்ஹபாகிய ஷhபி மத்ஹபின் மிக முக்கியமான இமாம்தான் இமாம் நவவியவர்கள். இவர்கள் ஷhபி மத்ஹபின் தவறுகளையே சுட்டிக் காட்டக்கூடியவர்கள். இவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் எனும் ஹதீஸ் நூலின் விளக்கவுரையில் கூறுவதாவது:-
உமாமா (ரழியல்லாஹூ அன்ஹூ) ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது தோளில் இருக்கும் நிலையில் அவர்கள் மக்களுக்கு தொழுகை நடாத்திக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்
(ஸ . முஸ்லிம்)
சிறுவன் அல்லது சிறுமி அல்லது சுத்தமான மிருகங்கள் போன்றவற்றைக் கடமையான தொழுகையிலும் நப்லான தொழுகை யிலும் சுமந்தவண்ணம் தொழலாம், இவ்வாறு செய்வது இமாம், மஃமூம், தனித்துத் தொழுபவர் ஆகிய அனைவருக்கும் கூடுமானது எனும் ஷhபி மத்ஹபிற்கு இந்தக் கூற்று ஆதாரமாக உள்ளது. மாலிகி மத் ஹபைச் சார்ந்தோர் இது நப்லான தொழுகைகளுக்குத்தான் பொருந் தும் எனக்கூறி கடமையான தொழுகைகளில் ஆகுமானதல்ல எனத் தடுத்துவிட்டனர். இந்த விளக்கம் தவறானது. ஏனெனில் மக்களுக்குத் தொழுகை நடாத்துவார்கள் எனும் கூற்று கடமையானதில்தான் என நேரடியாகக் கூறக்கூடியது அல்லது நேரடியாகக் கூறுவதைப் போன்ற தாகும். மாலிகி மத்ஹபைச் சேர்ந்த ஒரு சிலர் இந்தச் சட்டம் மாற்றப் பட்டது எனக்கூறுகிறார்கள். அவர்களில் இன்னும் சிலர் நபிக்கு மட்டும் உரிய சட்டம் எனக் கூறியுள்ளனர். இன்னும் சிலர் அவசியம் கருதி செய்யப்பட்டது எனக் கூறுகின்றனர். இந்த அனைத்துக் கூற்றுக்களும் பாதிலானவை, மறுக்கப்பட்டவை. ஏனெனில் இவற்றில் எதற்குமே ஆதாரம் கிடையாது. அவ்வாறு கூறவேண்டிய அவசியமும் கிடையாது. மாறாக அது கூடும் என்பதற்கு ஹதீஸ் தெளிவாகவும் ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றது......................... (ஷரஹ் முஸ்லிம் கி. மஸாஜித்)
இமாம்களின் பெயரால் இமாம்களுக்லெ;லாம் இமாமாக அழ்ழாஹ்வால் நியமிக்கப்பபட்ட ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது ஸுன்னாவை மறுப்பதற்கு மத்ஹப்வாதிகள் எப்படியெல்லாம் சந்தர்ப் பவாதம் பேசியுள்ளார்கள் என்பதை இமாம் நவவியவர்கள் எவ்வளவு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள். அதேபோல் ஆதாரம் இல்லாமல் ஒரு சட்டம் மாற்றப்பட்டது என்றோ அல்லது நபிக்கு மட்டும் உரியதுஎன்றோ அல்லது இதுபோன்ற காரணங்களைக்கூறி ஆதாரபூர்வமான ஹதீஸைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் இமாமவர்கள் அந்தக் காரணங்களைப் புறக்கணித்துவிட்டதன் மூலம் உணர்த்தியுள்ளார்கள். இவை இஸ்லாமிய சட்டக்கலை விதிகள் என்பதை வாசகர்கள் அறிந்து கொள்வதுடன், அவற்றை மறந்துவிடாமல் மனதில் பதித்துவைத்துக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில் சமூகத்தில் பாமர மக்கள் முதல், பிரிவுகளின் உலமாக்கள்வரை இ;ன்றைய நிலையில் இவற்றிற்கு முரணாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செயல்ப டுவதனை நேர்வழி எனவும் நினைக்கின்றனர்.
இந்த நிலையை எதிர்த்து, அதனை மாற்றியமைத்திடத் தோன்றிய இந்த தௌஹீத் ஜமாஅத் எனும் பிரிவு முன்னையவர்களை விடச் சிறந்தவர்களா? எனப் பார்த்தால் இவர்களது நிலையும் இதனை விட எந்த விதத்திலும் சிறந்ததல்ல எனும் முடிவுதான் கிடைக்கின்றது. இந்த இரு சாராரும் ஆதாரம் இல்லாத காரணங்களைக்கூறி மறுக்கும் விடயம் மாறுபட்டாலும், மறுக்கும் அளவு மாறுபட்டாலும் இரு சாராருமே நேர்வழியை மறுக்கின்றனர்.
அழ்ழாஹ்வின் அருளால் ஜமாஅதுல் முஸ்லிமீன் எப்போதும் அழ்ழாஹ்வின் வேதத்திற்கு தலைசாய்க்கக் கூடிய ஒரே கூட்டமாகும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது இமாம் மிம்பரில் அமர்ந்ததும் ஒரு அதான் சொல்வதுவே ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலாகும். இமாம் மிம்பரில் அமர்வதற்கு முன்னால் ஜும்ஆவிற் காக எந்த அதானும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் காலத்தில் நடை முறையில் கிடையாது. ஜும்ஆவிற்காக ஸுன்னாவைப் பின்பற்றி ஒரு அதான் சொல்வதை இலங்கையில் நடைமுறையில் கொண்டுவந்தது ஜமாஅதுல் முஸ்லிமீனேயாகும். அது தெரியவந்ததன் பின்னரும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதாகப் போலி நாடகமாடும் தௌஹீத் ஜமாஅத் எனும் பிரிவைச் சார்ந்த எந்தவொரு பிரிவும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது இந்த வழிமுறையைச் செயல்படுத்தவும் இல்லை. அது சரியென ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மாறாக இதனை மறுத்ததுடன், எதிர்த்துக் கொண்டிருந்தனர். இறுதியில் அவர்கள் முன்னோடியாகக் கருதும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜே. சொல்லியும் ஏற்காது, பின்னர் பீ. ஜே. இலங்கை வந்து நடைமுறையில் கொண்டுவந்ததன் பின்பே வேறு வழியில்லாமல் இப்போது அந்த நபிவழியை செயல்படுத்துகின்றார்கள். இந்த விடயத்தில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஆலிம் ஒருவரை நோக்கி பீ.ஜே. 'நீங்கள் மத்ஹபிலேயே இருந்திருக்கலாம்' எனக் கூறும் அளவிற்குத்தான் அவர்களது நிலை உள்ளது.
காப் எனும் அத்தியாயம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஹுத்பாவின்போதும் ஓதுப்பட வேண்டுமா? எனும் கேள்விக் கான விடையைத் தேடினால் வஹியைப் பின்பற்றுகின்ற ஒருவருக்கு அதற்குரிய பதில் மிகத் தெளிவானதாகவே காணப்படுகின்றது. அப்படியானால் உலமாக்கள் இதனை ஏன் மறுக்கிறார்கள் எனும் கேள்வி வாசகர்களுக்கு ஏற்படலாம். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் உமாமா (ரழியல்லாஹூ அன்ஹூ)வைத் தூக்கி வைத்துக்கொண்டு தொழுகை நடாத்தினார்கள் என்பதைத் தெரிந்தும் ஒரு சில அறிஞர்கள் அதற்கு மாற்றமாக ஆதாரம் இல்லாத எத்தனையோ கூற்றுக்களைக் கூறவில்லையா.........? குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொள்ளும் தௌஹீத் எனும்
பிரிவினர் ஜும்ஆவிற்காக இரண்டு அதான்கள் கூறிக்கொண்டிருக்க வில்லையா? இவையனைத்திற்கும் காரணம் பெரும்பாலும் கௌரவச் சிக்கல்தான். எனவேதான் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுங்கள் என பிறருக்கு உபதேசம் செய்வோர், அவர்களில் அத்தகைய சீர்திருத்தம் தேவை எனும்போது அவர்களது பிழையை சுட்டிக்காட்டும் ஹதீஸ் களுக்கு மாற்றுக் கருத்துக் கொடுக்கின்றனர். இந்த அடிப்படையில் தான் அண்மையில் தௌஹீத் எனும் பிரிவினர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை ஜும்ஆ ஹுத்பாவின்போதும் ஸூரா காப் ஓதுவது சம்பந்தமான ஹதீஸை மாற்றுக் கருத்துக்கூறி மறுத்திருந்தனர். இவ்வாறான கட்டுரை குர்ஆன் ஹதீஸைப் பின்பற்ற வேண்டும் எனக்கூறுவோரால் எழுதப் படுவதை வைத்து, தெளிவில்லாத பொது மக்கள் ஏமாந்து வழிகேட்டில் சென்றுவிடுகின்றார்கள்.
நாம் மேலே சுட்டிக்காட்டியவாறு தௌஹீத் எனும் பிரிவினர் சத்தியக்குரல் என்ற பெயரில் தமது பிரிவை வளர்ப்பதற்காக ஒரு பத்திரிகை நடாத்துகின்றனர். அதன் 2008 ஆம் ஆண்டிற்கான ஒக்டோபர் இதழில் குத்பா உரைக்கு முன்பு 'காப் சூரா'ஓதவேண்டுமா? எனும் தலைப்பில் ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தார்கள். அந்தக் கட்டுரையில் 'ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஹுத்பாவின்போதும் ஸூரா காப் ஓதுவது தவறான செயல்' என எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஹதீஸிற்கு மாற்றுக்கருத்தைக் கொடுத்து, அந்த நபிவழியை நிராகரித்திருந்தனர். அதுபற்றிய சரியான முடிவை எம்மிடம் ஒருசிலர் கேட்டனர். எந்தப் பிரிவுக்கு எதிராக கட்டுரையாளர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தாலும் அவரது முடிவு இஸ்லாத்திற்கு முரணானது எனும் அடிப்படையில் அந்தக் கட்டுரையை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இங்கு அலசுகின்றோம். முதலில் கட்டுரையாளர் இவ்வாறு தனது கட்டுரையைத் துவங்குகின்றார்:-
நான் வெள்ளிக்கிழமை அன்று காப் வல் குர்ஆனில் மஜீத் எனும் (50வது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள் என அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரழி) அவர்களின் சகோதரி அறிவிக்கிறார்.
(நூல்: முஸ்லிம், அபூதாவூத்)
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சாரார் வெள்ளிக்கிழமையில் 45 வசனங்களைக் கொண்ட காப் அத்தியாயத்தைக் கண்டிப்பாக ஓதிவிட்டுத்தான் குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என புதிதாகக் கருத்துக்கூறி வருகிறார்கள்.
எந்தவித விளக்கமும் அவசியம் இல்லாத வண்ணம் மிகத் தெளிவாக ஜும்ஆ ஹுத்பாவை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) நடாத்திய விதங் களில் ஒன்றை விளக்கக்கூடிய ஹதீஸைக் கட்டுரையாளர் முதலிலே குறிப்பிட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! அதில் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)
ஒவ்வொரு கிழமையும் "காப்" எனும் அத்தியாயத்தை ஓதுவார்கள் என்பது மிகத்தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. எனவே ஜும்ஆ நடாத் தும் ஒரு முஸ்லிம் ஒவ்வொரு கிழமையும் ஹுத்பாவிலே காப் எனும் அத்தியாயத்தை ஓதவேண்டும் என்பது தெட்டத் தெளிவானதே! ஹதீ ஸைக் குறிப்பிட்ட கட்டுரையாளர் நபியின் வழிகாட்டலைப் பின்பற்று வோர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு "புதிய கருத்து" என்பதாகும்.
இஸ்லாத்திலே ஒரு விடயம் புதிதாக இபாதத்தில் புகுத்தப் பட்டால் அது பித்அத் ஆகும். பித்அத் செய்பவனுக்கு ரஸூலுழ்ழாஹி அவர்களது நீர்த்தடாகத்தில் மறுமையில் நீர் கிடைக்க மாட்டாது. ஸுன்னாவிலே நிரூபனமான விடயத்தை மேற்படி கட்டுரையாளர் பித்அத் எனக்கூற முற்படுவது வியப்பாக இல்லையா.......?
மேலும் இஸ்லாத்தில் ஒரு விடயம் புதியதா அல்லது பழையதா என்பதை எமது அறிவுக்கு எட்டவில்லை என்பதைக் கொண்டு முடிவு செய்துவிட முடியாது. அதாவது எமக்குத் தெரியாதது அல்லது எமது நடைமுறையில் இல்லாதது புதியது, ஏற்றுக்கொள்ள முடியாதது என எவரேனும் முடிவு செய்தால் அது அவரது தெளிவின்மையின் வெளிப் பாடாகும். இறுதித் தூதரின் காலத்தில் இருந்த விடயம் ஒருபோதும் இஸ்லாத்தில் புதிதானதே அல்ல. அதேபோன்று குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவோர் எனக் கூறுகின்ற தௌஹீத் எனும் பிரிவினர் ஹதீஸில் வந்த விடயத்தைப் புதியது எனக்கூறிப் புறக்கணிக்கின்றனர். ஆனால் ஷhபி மத்ஹபின் இமாம் என பிரபல்யமான இமாம்கூட இது நபிவழி, இதனைப் பின்பற்றலாம் என ஏற்றிருக்கின்றார்கள். இந்தவகையில் பார்க்கும்போது குர்ஆன் ஹதீஸை மறுக்கின்றனர் என மத்ஹபுகளைக் குறை கூறுவதற்கு தௌஹீத் எனும் பிரிவினருக்கு என்ன அருகதை இருக்கின்றது என பொதுவான வாசகர்கள் மட்டுமல்ல, தௌஹீத் எனும் பிரிவில் அது நேர்வழி என நினைத்துச் சிக்கியிருப்பவர்களும் சிந்திக்க வேண்டும். கட்டுரையாளர் இங்கு சுட்டிக்காட்டிய ஹதீஸிற்கு விளக்கம் எழுதும்போது இமாம் நவவியவர்கள் "ஒவ்வொரு ஹுத்பா விலும் ஸூரா காபையோ அல்லது அதன் சில பகுதியையோ ஓது வது சிறந்தது என்பதற்கு இதில் ஆதாரம் இருக்கின்றது" என எழுதி யுள்ளார்கள். அந்த மத்ஹபுகள் தவறு எனக்கூறும் தௌஹீத் எனும் பிரிவினர் ஹதீஸைத் தெரிந்துகொண்டே "ஸூரா காப் ஓதுவது நபி வழியே அல்ல" என மறுக்கின்றார்கள். இதன் மூலம் மத்ஹபுகளை சீர்திருத்த வந்த தௌஹீத் எனும் பிரிவு, மத்ஹபுகளைவிட மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளலாம்.
ஒரு முஸ்லிமுக்கு ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது வழிமுறை இருக்கும்போது வேறு எதுவும் அவசியமில்லை. அந்த வழிகாட்டலில் ஒவ்வொரு ஜும்ஆ ஹுத்பாவின் போதும் முழுமையாக ஸூரா காபை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஓதியுள்ளார்கள். ஓதாமல் விட்டதற்கும் ஆதாரம் இல்லை. அதன் ஒரு பகுதியை ஓதியதற்கும் ஆதாரம் இல்லை.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் ஒவ்வொரு ஜும்ஆ ஹுத்பாவின்போது முழுமையாக ஸூரா காபை ஓதுவதாகக் கூறுவதன் மூலம் கட்டுரையாளர் ஒரு சிலர் மாத்திரம் அந்த ஹதீஸைப் பின்பற்றுவதைக் குறை காண்கின்றார் என்றால் அந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இஸ்லாத்தைப் பொருத்தவரையில் சரிபிழை காண் பதற்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தனி மனிதராகத்தான் அன்று ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்தார்கள். அப்போதைய நிலையில் சத்தியத்தை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டிருந்தால் நிச்சயம் நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கொண்டு வந்த சத்தியம் பிழையானது எனும் முடிவிற்கே வரவேண்டியிருக்கும். இதிலிருந்தே சத்தியத்தை எண்ணிக்கையைக் கொண்டு அளப்பது எவ்வளவு தவறானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தனது தவறான கருத்தை நிரூபிப்பதற்காக கட்டுரையாளர்
அடுத்த முயற்சியாகப் பின்வருமாறு எழுதுகின்றார்:-
நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒவ்வொரு குத்பாவிலும் காப் அத்தியாயத்தை முழுமையாக ஒதிமுடிந்த பிறகு குத்பா உரை நிகழ்த்தினார்கள் என்பதற்கு தெளிவான நேரடியான ஆதாரமில்லை.மாறாக இந்த காப் அத்தியாயத்தை ஓதி அதனது விளக்கங்களை தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தினார்கள் என்றுதான் ஹதீஸில் வந்துள்ளது.
ரஸுலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஹுத்பாவின் போதும் ஸூரா காபை ஓதுவார்கள் எனத்தெளிவாக வந்ததன் பிறகு அதனைப் பின்பற்ற விரும்பாத தௌஹீத் பிரிவைச் சார்ந்த கட்டுரையாளர் ஹதீஸை நேரடியாக மறுத்தால் அவர்களின் நிராகரிப்பு அம்பலமாகி விடும் என்பதற்காக முகல்லிதுகள் செய்வதைப்போன்று ஹதீஸில் தெளிவான ஆதாரம் இல்லை எனக்கூறி மறுக்க முயல்கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஓதினார்கள் என்றால் இதற்கு வாழ்நாளில் சில காலம் ஓதினார்கள் எனப்பொருள் கொள்வது எவ்வளவு பெரிய முரண்பாடு. சில கிழமைகளில் ஸூரா காப் ஓதவில்லை என்பதற்குஆதாரம் இருக்குமானால் கட்டுரையாளரின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியும். அப்படியான எந்த ஆதாரமும் கிடையாது.
ஹதீஸின் சரியான கருத்தை மறுப்பதற்கு ஹதீஸிலே ஒரு இடைச்செருகளையும் கட்டுரையாளர் செய்துள்ளார். அதாவது "காப் அத்தியாயத்தை ஓதி அதனது விளக்கங்களை தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தினார்கள் என்றுதான் ஹதீஸில் வந்துள்ளது." எனக்கூறியுள்ளார். ஆனால் அவர் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸில் அப்படி
'அதனது விளக்கம்' என ஒரு வாசகம் இல்லை. இது தவறான தனது கருத்தை நிரூபிப்பதற்காக வலிந்து புகுத்தப்பட்டதேயன்றி ஹதீஸில் உள்ளதல்ல.
ஹதீஸிலே "யஹ்துபு பிஹா குல்ல ஜும்அதின்" எனும் வாசகம்தான் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ஸூரா காபை ஒவ்வொரு ஹுத்பாவின்போதும் ஓதுவார்கள் என்பதேயன்றி கட்டுரையாளர் கூறுவதுபோன்று ஸூரா காபை விளக்குவார்கள் என்பது பொருளல்ல. நாம் கூறும் உண்மையை வலியுறுத்தக்கூடியதாக, இமாம் முஸ்லிம் இதற்கு அடுத்ததாகப் பதிவு செய்துள்ள ஹதீஸும் காணப்படுகின்றது. அந்த ஹதீஸ் பின்வருமாறு காணப்படுகின்றது:-
உம்மு ஹிஷhம் (ரழியல்லாஹூ அன்ஹா) கூறுகின்றார்கள்:-
எங்களது அடுப்பும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது அடுப்பும் இரண்டு வருடங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் ஒன்றாகவே இருந்தது. காப் வல்குர்ஆனில் மஜீத் (எனும் அத்தியாயத்தை) ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது வாயிலிருந்தேயன்றி நான் பாடமாக்க வில்லை. அதனை (ரஸூலுழ்ழாஹி(ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ) அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆவிலும் மக்களுக்கு பிரசங்கம் செய்தால் மிம்பர் மீதிருந்து ஓதுவார்கள்.
( ஸ.முஸ்லிம் - கி. ஜும்ஆ )
மக்களுக்குப் பிரசங்கம் செய்தால் ஸூரா காபை ஓதுவார்கள் என்றிருக்கின்றதே தவிர ஸூரா காபைப் பற்றி விளக்குவார்கள் என்று இந்த ஹதீஸில் இல்லை என்பதைத் தெளிவாக நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். மேலும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது பிரசங்கம் எதனைப் பற்றியது என்பதல்ல இங்கு சர்ச்சை. மாறாக ரஸூலுழ்ழாஹி
(ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஸூரா காபை ஜும்ஆ ஹுத்பாவிலே முழுமையாக ஓதினார்களா இல்லiயா என்பதுதான் சர்ச்சை. அதனை எவ்வளவு அழகாக உம்மு ஹிஷhம் (ரழியல்லாஹூ அன்ஹா) அவர்கள் இந்த ஹதீஸில் கூறியுள்ளார்கள். ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) வாயிலிருந்தேயன்றி நான் பாடமாக்கவில்லை என்பது ஒவ்வொரு ஜும்ஆ ஹுத்பாவின்போதும் ஸூரா காப் ஓதப்பட்டிருக்கின்றது என்பதற்குத் தெளிவான சான்றல்லவா................?
கௌரவக் சிக்கலினால் தௌஹீத் எனும் பிரிவார் இந்த நபி வழியை மறுப்பதற்குக் கையாளும் வழிமுறை இவர்களது அடிப்படையையே தகர்ந்து விடும் என்பதை சிந்திக்காமல்தான் அசத் தியக்குரலாக இந்தக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ ஹுத்பாவிலும் ஸூரா காப் ஓதப் பட்டது என வருகின்ற ஹதீஸ் ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஸூரா காப் ஓதுவதற்கு ஆதாரம் அல்ல எனக் கூறுவது சரியாக இருந்தால் எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என்ற தௌஹீத் பிரிவாரின் அடிப்படைப் பிரச்சாரத்தை இன்றுடன் அவர்கள் கைவிட்டுவிட வேண்டும். ஏனெனில் அவர்களது அறிவீனமான வாதப்படி எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என்பது தவறானது.
ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஸூரா காப் ஓதினார்கள் என வந்தி ருப்பது போன்று அதே ஒவ்வொரு என்ற வார்த்தiயைப் பயன்படுத்தித் தான் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு எனும் ஹதீஸ் வந்துள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என ஹதீஸிலே வந்திருப்பதை மறுப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை உங்கள் முன் தருகின் றோம். அப்போது இந்த விடயத்தில் தௌஹீத் எனும் பிரிவாரின் இரட்டை வேஷம் உங்களுக்குத் தெளிவாகும்.
"குல்லு பித்அதின் ழலாலா எனும் கூற்று பொதுவானதாக இருந்தாலும் அது மட்டுப்படுத்தப்பட்டதாகும். இதன் பொருள் அதிகமான பித்அத்துக்கள் வழிகேடு என்பதாகும்.............. பித்அத் என்பது ஐந்து வகைப்படும். கடமையானது, விருப்பத்திற்குரியது, தடைசெய்யப்பட்டது, வெறுப்பிற்குரியது, ஆகுமானது என்பவையாகும்."
பித்அத்தை சரிகாணக்கூடிய சாராரின் மேற்படி விளக்கத்தை தௌஹீத் எனும் பிரிவார் இப்போது சரிகான வேண்டும். ஏனெனில் அங்கும் ஒவ்வொரு பித்அத் என்ற வார்த்தைதான் பித்அத்தை முற்றா கத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை என்பது எல்லா வெள்ளிக்கிழமையையும் குறிக்காது என நீங்கள் உண்மை என நினைத்துத்தான் கூறுவதாக இருந்தால் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்பது எல்லா பித்அத்தையும் குறிக்காது என்ற பித்அத் வாதிகளின் ஆதாரமற்ற மாற்றுக் கருத்தையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
எனவே உண்மை என்னவெனில் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்பதற்கு பித்அத்வாதிகள் எப்படி மாற்றுக்கருத்துக் கொடுத்து பித் அத்துக்களை சரிகண்டார்களோ அதேபோன்றுதான் தௌஹீத் எனும் நரகின்பால் அழைக்கும் பிரிவாரும் வெள்ளிக்கிழமையில் ஸூரா காப் ஓதும் விடயத்தில் மாற்றுக் கருத்துக் கொடுத்து ஸூரா காப் ஓதாமல் இருப்பதை சரிகாணுகின்றார்கள். அதற்குரிய எந்தவித ஆதாரமும் அவர்களிடம் கிடையாது. எனவேதான் ஹதீஸ்களில்கூட திரிபுகளைச் செய்கின்றனர்.
"ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் ஸூரா காபை ஓதி அதுபற்றியே விளக்குவார்கள்" எனக் கட்டுரையாளர் தானாகப் புகுத்திய கருத்தை வலியுறுத்தித் தொடர்ந்து எழுதும்போது நாம் இறுதியாக சுட்டிக்காட் டிய ஹதீஸுடன் அதேபோன்ற மற்றொரு ஹதீஸையும் எழுதிவிட்டுக் கூறுவதாவது:-
இவ்விரு ஹதீஸ்களிலும் கஃப் எனும் அத்தியாயத்தை நபியவர்கள் மக்ளுக்கு ஓதிக்காட்டி அதன் விளக்கத்தை எடுத்துக்கூறி உரையாற்றுவார்கள் என்று தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. எனவே காப் அத்தியாயத்தை மட்டும் வெறுமனே ஓதிவிட்டு இறங்குவதல்ல இதன் அர்த்தம் என்பது புலனாகின்றது. ஆனால் இவர்கள் காப் அத்தியாயத்தை மட்டும் ஆரம்பத்தில் ஓதிவிட்டு - இப்Nhது ஒருசில வசனங்களை மட்டும் ஓதிவிட்டு-பிறகு வேறொரு தலைப்பில் உரையாற்றுவது - இவர்களது வாதப்படி - தவறானதும் நபிவழிக்கு முரணானதுமாகும். இந்தஹதீஸில் காப் அத்தியாயத்தை மட்டுமே ஓத வேண்டுமென்று இவர்கள் விளங்கியிருந்தால் இந்த அத்த்pயாயத்தை மட்டுமே குத்பாவில் ஓதிவிட்டு அல்லது அதற்கு மட்டும் விளக்கம் சொல்லி விட்டு இறங்கிவிடவேண்டும். வேறெதுவும் பேசக்கூடாது. ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. காப் அத்தியாயத்தை ஓதி அதன்பிறகு வேறு தலைப்புகளில் விளக்கங்களையும் செய்தி களையும் கூறுகிறார்கள் புரிந்துகொண்டதை சரிவரப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாகப் பார்த்து தவறாக செயற்படு கிறார்கள்.
காப் எனும் அத்தியாயத்தை நபியவர்கள் மக்களுக்கு ஓதிக் காட்டி அதன் விளக்கத்தை எடுத்துக் கூறுவார்கள் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டு ஹதீஸ்களிலும் அவ்வாறான வாசகம் இ;ல்லவே இல்லை. முடியுமானால் அசத்தியக் குரலைச் சார்ந்தோர் யாராக இருந்தாலும் அதனை எடுத்து முன்வைக்கட்டும்.
ஒரு வாதத்திற்காக கட்டுரையாளர் இடைச் செருகல் செய்த வாசகம் ஹதீஸில் இருக்கின்றது என வைத்துக்கொண்டால்கூட அது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தங்களது ஹுத்பா பிரசங்கத்தின்போது ஸூரா காபை ஓதினார்கள் என்பதை ஒருபோதும் பொய்யாக்கிவிடாது. ஸூரா காபை ஓதுவதுடன் அது பற்றிய விளக் கத்தையும் சொல்ல வேண்டும் என்றுதான் வருமேயொழிய தௌஹீத் எனும் பிரிவார் செய்வதுபோல் ஸூரா காபை ஓதாமல் இருப்பதற்கு ஒருபோதும் ஆதாரமாக மாற மாட்டாது.
ஸூரா காபின் ஒரு பகுதியை ஓதுவதாகவும் கட்டுரையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். யார் மீது அக்குற்றத்தை சுமத்தினார் என்பது தெரியாது. ஆனால் இந்த விடயத்தை சரியாக செயல்படுத்தக் கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீன் ஜும்ஆ ஹுத்பாவின்போது முழுமையாகவே ஸூரா காபை ஓதுகின்றது. அதுபற்றி மட்டுமே உரையாற்ற வேண்டும் எனும் நிபந்தனை கட்டுரையாளரின் இடைச் செருகளாகும். ஹதீஸிலே அப்படி நிபந்தனை கிடையாது. ஸூரா காபிற்கு விளக்கம் அளித்தார்கள் என்பதுகூட கட்டுரையாளர் முன்வைத்த ஹதீஸில் கிடையாது.
அழ்ழாஹ்வின் அருளால் இதுவரை நாம் எழுதிய சிரிய பகுதியை வைத்தே சரியான விளக்கம் இல்லாமல் தடுமாறுவதாகப் பிறர்மீது குற்றம் சுமத்தும் தௌஹீத் எனும் பிரிவாரே தடுமாற்றத்தில் உள்ளனர் என்பது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும். இந்த ஒரு விடயத் தில் மாத்திரமல்ல. அகீதா முதற் கொண்டு பல்வேறு விடயங்களில் தௌஹீத் எனும் பிரிவார் குழப்பத்தில் இருக்கின்றனர். அண்மையில் அவற்றில் ஒன்றான தஸ்பீஹ் தொழுகை பற்றி இவர்களுக்கு உள்ள தடுமாற்றத்தைத் தக்க ஆதாரங்களுடன் விபரித்து தனியொரு நூல் வெளியிட்டுள்ளோம்.
வெள்ளிக்கிழமை ஹுத்பா பிரசங்கத்தில் ஸூரா காப் ஓதுவது அவசியமில்லை என்பதை நிரூபிக்க முயலும் கட்டுரையாளர் தனது அடுத்த ஆதாரமாக ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டிப் பின்வருமாறு எழுதுகின்றார் : -
நபி (ஸல்) மிம்பர் மீதிருந்த நிலையில் உரையாற்றும் போது (குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யா மாலிக் என்று அழைப்பார்கள் எனும் ஸூரத்துஸ் ஸுஹ்ர் 43 ஆவது அத்தியாயத்தின் 77வது வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று யஃலா பின் உமையா (ரழி) அறவிக்கிறார்கள்.
(நூல்: புகாரி-32303266, முஸ்லிம்-1579)
இந்த ஹதீஸில் ஸூரத்துல் காப் 50வது வசனம் பற்றிக் கூறப்படவில்லை. இங்கே 43வது அத்தியாயமானது ஸூரத் துஸ் ஸுஹ்ரபின் 77வது வசனம் குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த வசனத்தில் நரகவாதிகள் தங்களுக்குஏற்பட்ட துன்பத்தை குறித்து மாலிக் (அலை) அவர்களிடம் முறையிடும் போது மாலிக்கே! உமது இறைவன் எங்கள் கதையை முடிக் கட்டும் எனக் கூறுவார்கள். அப்போது அவர் நிச்சயமாக நீங்கள் இங்கே இருங்கள் என்று கூறுவார் என்றவசனத்தை ஓதிக்காட்டி நபியவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார்கள். இதன் மூலம் காப் அத்தியாயம் மட்டும் ஓதப்பட வேண்டும் அல்லது அதைக்கொண்டு மட்டும் உரை நிகழ்த்தப்பட வேண்டும் என் பது தவறானது என்பது தெளிவாகின்றது.
வெள்ளிக் கிழமை ஹுத்பா பற்றிய முழுமையான சட்டத்தை அறியாமல்தான் கட்டுரையாளர் தனது கட்டுரையை எழுதியுள்ளார் என்பது அவர் எழுதியுள்ள விடயங்களைப் படிக்கும்போது தெளிவாகிறது. வெள்ளிக்கிழமை ஹுத்பாப் பிரசங்கத்தில் ஸூரா காப் மட்டும் ஓதப்பட வேண்டும் என இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது ஜும்ஆப் பிரசங்கம் எவ்வாறு காணப்பட்டதோ அதேபோல் அமையவேண்டும் என்பதுவே இஸ்லாமிய போதனையாகும்.
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் ஜும்ஆ தினப் பிரசங்கத்தில் ஒவ்வொரு கிழமையும் ஸூரா காப் அடங்கியிருக்கும் என்பது பற்றி ஹதீஸில் வந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள் என்பதும் ஹதீஸிலே காணப்படுகின்றது. அவ்வாறு செய்யக்கூடிய உபதேசம் ஸூரா காப் பற்றியதாக இருக்கவேண்டும் என மற்றவர்கள் கூறுவதாக நினைத்தே கட்டுரையாளர் தனது கட்டுரையில் மறுப்புத்தெரிவித்துள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஒவ்வொரு கிழமையும் தங்களது ஜும்ஆப் பிரசங்கத்தில் ஸூரா காபை ஓதியிருக்கின்றார்கள். அத்துடன் தாங்கள் விரும்பும் விடயத்தை முன்வைத்து மக்களுக்கு உபதேசமும் செய்திருக்கின்றார்கள். அதுபற்றிய ஒரு ஹதீஸை முன் வைத்துத்தான் கட்டுரையாளர் அது ஸூரா காப் ஓதப்பட வேண்டும் எனக் கூறும் ஹதீஸுக்கு முரணானதுபோல் காட்ட முயற்சித்துள்ளார்.
ஸுஹ்ருப் எனும் அத்தியாயத்தின் 77 வது வசனத்தை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) ஓதினார்கள் என வரக்கூடிய ஹதீஸ் எந்த வகையி லும் காப் ஓதப்பட வேண்டும் எனக்கூறும் ஹதீஸிற்கு முரணானதல்ல. ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தங்களது வழமைப் பிரகாரம் ஸூரா காபையும் ஓதியுள்ளார்கள். அதன்பிறகு மக்களுக்கு உபதேசம் செய்வதற்காக அன்றைய பிரசங்கத்தில் ஸுஹ்ருப் எனும் அத்தியாயத்தின் 77 வது வசனத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதில் என்ன சிக்கல் உள்ளது. இந்த ஹதீஸில் ஸூரா காப் பற்றிக் கூறப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி அன்றைய ஜும்ஆப் பிரசங்கத்தில் ஸூரா காப் ஓதப்படவே இல்லை எனக் கட்டுரையாளர் நிரூபிக்க முயலுகிறார். அவரது இந்தக் கருத்து அவரின் அறிவின் குறைபாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. ஏனெனில் "ஒன்று பற்றிச் சொல்லப்படாமல் இருப்பது அது இல்லைஎன்பதற்கு ஆதாரம் அல்ல" என்பது விதியாகும். இந்த விதியின் அடிப்படையில் கட்டுரையாளரின் வாதம் ஏற்கக்கூடியதல்ல. இதனை இதேபொன்ற மற்றுமொரு ஹதீஸை வைத்து உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றோம்.
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) பள்ளியினுள் நுழையும்போது மற்றொரு மனிதரும் பள்ளியினுல் வந்து தொழுகிறார். பின்னர் ரஸூலுழ்ழாஹி
(ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்து ஸலாம் சொல்லுகின்றார். பதில் சொன்ன ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) "திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை" எனக் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்ததன் பின்னர் "உண்மையைக் கொடுத்து உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக இதனை விடச் சிறப்பாக எனக்குத் தொழத் தெரியாது. எனக்கு (நீங்கள்) கற்றுத் தாருங்கள்" எனக் கேட்டார்கள். அப்போது "தொழுகைக்காக எழுந்து நின்றால் தக்பீர் சொல்வீராக. பின்னர் அல் குர்ஆனிலிருந்து உமக்கு இலகுவானதை ஓதுவீராக...................... என ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கற்றுக் கொடுத்தார்கள்.
( ஸ. முஸ்லிம் - கி. ஸலாத் )
ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த ஹதீஸின் மூலம் தொழுகையில் ஒருவர் அல்குர்ஆனின் எந்தவொரு அத்தியாயத்தையும் ஓதிக் கொள்ளும்படி ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பது வெளிப்படையானதே. குறிப்பிட்டதொரு அத்தியாத்தைக் கட்டாயம் ஓதவேண்டும் என நபியவர்கள் கூறவும் இல்லை, ஓதுவது சிறந்தது என்றுகூடச் சுட்டிக் காட்டவில்லை. இந்த நிலையில் தொழுகையில் அல்குர்ஆன் ஓதுவது பற்றி இந்த ஹதீஸ் மட்டும்தான் இருக்குமானால் "ஒரு மனிதன் தொழுகையில் அல்குர்ஆனில் நின்றும் தான் விரும்பியதை ஓதலாம்" எனக் கூறுவதில் தப்பில்லை. ஆனால் இதே ஸஹீஹ் முஸ்லிமில் இது சம்பந்தமாக மற்றுமொரு ஹதீஸ் பதிவாகியுள்ளது:-
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள் : -
யார் (ஸூரா பாதிஹவாகிய) உம்முல் குர்ஆனை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகையே கிடையாது.
( ஸ. முஸ்லிம் - கி. ஸலாத் )
ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது முதலாவது ஹதீஸ் கூறாத, வேறு ஒரு செய்தியையே அவர்களது இரண்டாவதாக ஹதீஸ் கூறு கின்றது என்பதனை அது சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் படிக்கும் ஒரு முஸ்லிம் இலகுவாகப் புரிந்து கொள்வான். இதனைப் புரிந்து கொள்ளாத ஒருவர் "முதலில் சுட்டிக்காட்டப்பட்ட ஹதீஸில் எமக்கு முடியுமானதை ஓதும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். எனவே தொழுகையின் போது அல்குர்ஆனிலிருந்து எதனையும் ஓதலாம் எனக்கூறினால் சரியாகுமா....? அப்படியானால் அழ்ழாஹ்வின் தூதர்தான் முரண்பாடாகக் கூறிவிட்டார்களா...... ? (நஊது பில்லாஹி மின்ஹா.) பிறர் சொல்லி நாம் இஸ்லாமியச் சட்டங்களைத் தெரிந்து கொள்வதா எனும் கௌரவச் சிக்கலால் இத்தகையவர்கள் நபியின் போதனைகளை முரண்பாடாகக் காட்ட முற்படுகிறார்கள். தங்களது அறியாமையையும், தவறுகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இவர்கள் இல்லை.
உண்மை என்னவெனில் தொழுகையில் அல்குர்ஆன் ஓதுவதைப் பொறுத்தமட்டில் இரண்டாவது ஹதீஸில் வந்திருப்பது போன்று ஸூரா பாதிஹா கட்டாயம் ஓதியே ஆக வேண்டும். முதலாவது ஹதீஸில் நபியவர்கள் "உனக்கு இலகுவானதை ஓதிக்கொள்" எனக் கூறியது பாதிஹாவினைத் தொடர்ந்து ஓதக்கூடியது எந்த அத்தியாயமாகவும் இருக்கலாம் என்பதேயாகும். ஸூரத்துல் பாதிஹா கட்டாயம் ஓதப்பட வேண்டும் என முதலாவது ஹதீஸில் கூறப்படவில்லை என்பதனைக் காரணம் காட்டி, தொழுகையில் ஸூரா பாதிஹா ஓதுவது அவசியமே அல்ல என்று ஒருபோதும் கூற முடியாது.
மேற்கண்ட ஹதீஸ்களின் மூலம் வாசகர்களுக்கு நாம் விளக்க விரும்பும் உண்மை என்னவெனில் கட்டாயம் செய்யப்பட வேண்டியதொரு செயல் அது பற்றி வரக்கூடிய ஒரு ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கட்டாயமாக்கப்பட்ட செயலைக் "கட்டாயமானது அல்ல" எனக் கூறுவது அடிப்படையிலேயே தவறானது என்பதாகும். இவ்வாறு கூறுவது இஸ்லாமிய சட்டக்கலை விதிகளுக்கும் முரணானதாகும். எனவேதான் குர்ஆன் ஸூன்னாவைப் பின்பற்றுவோர் தொழுகையில் கட்டாயம் ஸூரா பாதிஹா ஓதப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.
எனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஹுத்பாப் பிரசங்கத்திலும் ஸூரா காப் ஓதுவது கட்டாயமல்ல என்பதை நிரூபிப்பதற்கு கட்டுரை யாளர் முன்வைத்த ஹதீஸ் எவ்விதத்திலும் ஆதாரமல்ல என்பதை வாசகர்கள் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். தொழகையில் இலகுவானதை ஓதிக்கொள் என்பதாக வரும் ஹதீஸில் ஸூரா பாதிஹா பற்றி கூறப்படாமல் வந்திருந்தும் மற்ற ஸதீஸைக் ஆதாரமாகக்கொண்டு
எப்படி ஒவ்வொரு தொழுகையிலும் ஸூரா பாதிஹா ஓதப்பட வேண்டும் என்பது நிரூபணமாகின்றதோ அதே போன்று கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய ஹதீஸில் ஸூரா காப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை என்பதால் அந்த ஹதீஸை வைத்து ஸூரா காபை வலியுறுத்துவதோ அல்லது மறுப்பதோ இரண்டும் சரியான நடைமுறையல்ல என்பதே உண்மையாகும். அதுதான் சட்டக்கலை விதியின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய முடிவுமாகும்.
எனவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஹுத்பாவின் போதும் மிம்பரில் நின்று ஸூரா காப் ஓதுவார்கள் என ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதீஸின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமையில் ஜும்ஆப் பிரசங்கம் செய்வதானால் கட்டாயம் ஸூரா காப் ஓத வேண்டும். அதனையடுத்து மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும். அந்த உபதேசத்தில் பிரசங்கம் செய்பவர் விரும்பும் அல்குர்ஆனிய வசனத்தை ஓதி மக்களுக்கு உபதேசம் செய்யலாம் என்பதை கட்டுரையாளர் முன்வைத்த ஹதீஸிலிருந்தும் அதுபோன்று வரக்கூடிய ஏனைய ஹதீஸ்களில் இருந்தும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.
எனவே ஸூரா காபை ஓதி அதுபற்றியே விளக்கவேண்டும் என்பது நாம் முன்னர் கூறியதுபோல் கட்டுரையாளரின் கற்பனையே தவிர அந்தக் கருத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.
ஆகவே குர்ஆனையும் ஹதீஸையும் மாத்திரம் உண்மையிலேயே பின்பற்றும் ஒரே கூட்டமாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி நடாத்தக்கூடிய ஜும்ஆவின் அமைப்பு முறை முற்றிலும் சரியானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
தான் எடுத்துவைத்த வாதத்தை நிரூபிப்பதற்கு சம்பந்தம் இல்லாத சில விடயங்களையும் கட்டுரையாளர் எழுதியுள்ளார்.அவற்றையும் ஆதாரம் எனும் அடிப்படையில் கட்டுரையாளர் முன்வைத்து எழுதியிருப்பதால் அதனையும் உங்கள் கவனத்திற்குத் தருகின்றோம். கட்டுரையாளர் எழுதுவதாவது : -
குத்பா உரை என்பது மக்களுக்கு போதனை செய்வது, அறிவூட்டுவது, மக்களது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவது என்பதாகும். இவர்;களது வாதப்பிரகாரம் குத்பா என்றால் கண்டிப்பாக காப் அத்தியாயத்தை ஓதியாக வேண்டும் என்ப தாகும். அதன்பிறகு வேண்டுமானால் ஏனைய விடயங்களை சொல்லலாம் என்கிறார்கள். இவர்களுடைய இந்த வாதமும் ஹதீஸை விளங்கிக்கொண்ட முறையும் தவறானது.
இங்கு கட்டுரையாளர் கூறுகின்ற ஹுத்பா என்றால் மக்களுக்குப் போதனை செய்வது என்பதில் எங்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது."அதன்பிறகு வேண்டுமானால் ஏனையவிடயங்களை சொல்லலாம் என்கிறார்கள்." என எழுதியுள்ளதன் மூலம் கட்டு ரையாளரே இதனை உண்மைப் படுத்தியுள்ளார். அதன் பின்னர் ஸூரா காப் ஓதுவதன் மூலம் உபதேசம் இல்லாதது போன்று காட்டுவதற்குக் கட்டுரையாளர் முயற்சிசெய்துள்ளார். அது அப்பட்டமானதொரு யூகமே தவிர அதில் உண்மையில்லை. ஹதீஸைத் தவறாக விளங்கியிருப்பது நாமா? அல்லது தௌஹீத் எனும் பிரிவினரா? என்பதைத் தெளிவாக விளங்கும் அளவிற்கு இங்கு அழ்ழாஹ்வின் உதவியால் போதிய விளக்கம் வாசகர்களுக்குத் தந்துள்ளோம். எனவே அந்த முடிவை வாசகர்களிடமே நாம் விட்டுவிடுகின்றோம்.
கட்டுரையாளர் தனது கட்டுரையை முடிக்கும்போதும் தனது வாதத்தை வலுப்படுத்துவதில் பிரயோஜனம் அளிக்காத விடயங்களை எழுதியுள்ளார். அது பின்வருமாறு :
நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்துவார்கள் அவ்விரு உரைகளுக்குமிடையே அமர்வார்கள். குர்ஆன் (வசனங்கள் ஓதுவார்கள். மக்களுக்கு உபதேசிப்பார்கள். எனஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம்-1564)
இந்த ஹதீ{ஸில் நபியவர்கள் குர்ஆன் வசனங்களை ஓதி உபதேசிப்பார்கள். அறிவுறுத்துவார்கள். எனக்கூறுப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல செய்திகளும் உள்ளன.
எனவே குத்பா உரை என்பது மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் அமைப்பில் இருக்க வேண்டும். அவர்க ளுக்கு அறிவுறுத்தக்கூடியதாதக உபதேசம் அமைய வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அதில் இந்த அத்தியாயத்தான் ஓத வேண்டும். இந்த வசனத்தைத்தான் விளக்கப்படுத்த வேண் டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. சந்தர்பப் சூழ்நிலைகளுக் கேற்ப குத்பா உரை அமைவதுதான் முக்கியமானது.
இங்கு கட்டுரையாளர் முதலில் ஒரு ஹதீஸை முன்வைத்துள்ளார். அழ்ழாஹ்வின் அருளால் ஸூரா காபை தங்களது ஒவ்வொரு ஜும்ஆ ஹுத்பாவிலும் ஓதுபவர்களது செயல் இந்த ஹதீஸ் உட்பட கட்டுரை யாளர் முன்வைத்த எந்தவொரு ஹதீஸிற்கும் முரணானதல்ல. இந்த ஹதீஸில் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் செய்துள்ளதாகப் பின்வரும் விடயங்கள் நிரூபணமாகின்றன : -
1 - இரண்டு பிரசங்கங்கள் செய்தல்.
2 - இரண்டு பிரசங்கங்களுக்கிடையில் அமர்தல்.
3 - அல்குர்ஆன் வசனங்களை ஓதுதல்.
4 - மக்களுக்கு உபதேசம் செய்தல்.
5 - நின்ற வண்ணம் பிரசங்கம் செய்தல்.
ஒவ்வொரு ஜும்ஆ ஹுத்பாவிலும் ஸூரா காப் கட்டாயம் ஓத வேண்டும் எனக் கூறுகின்ற முஸ்லிம்கள் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் ஐந்து விடயங்களையும் தங்களது ஜும்ஆவில் பின்பற்றுகின்றனர். எனவே இந்த ஹதீஸை முன்வைத்துக் கட்டுரையாளர் எம்மீது எந்தக் குற்றத் தையும் சுமத்த முடியாது. அல்ஹம்துலில்லாஹ்! தவிர கட்டுரையாளரது தவறான வாதத்திற்கு அந்த ஹதீஸில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பதையும் வாசகர்கள் இங்கு கவணிக்க வேண்டும்.
அதன்பின்னர் கட்டுரையாளர் தனது சில முடிவுகளை எழுதியுள்ளாh.; அவற்றில் அழ்ழாஹ்வின் வேதத்திற்கு முரணில்லாத விடயங்களில் நாம் முரண்படுவதற்கில்லை. அந்தவகையில் ஷஷசந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பிரசங்கம் அமைய வேண்டும் எனவும்இ அதிலே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவேண்டும் என்றெல்லாம் கட்டுரையாளர் எழுதியுள்ளார். ஆனால் இறுதியில் தனது முழுக் கட்டுரையிலும் நிரூ பிக்க முடியாமல்போன ஒரு விடயத்தை ஆதாரம் இல்லாமலே கூறித் தனது கட்டுரையை முடித்துள்ளார்.
'அதில் இந்த அத்தியாயத்தான் ஓதவேண்டும். என்ற கட்டாயம் எதுவுமில்லை.' என ஹதீஸிற்கு முரணான தனது மனோ இச்சையை மார்க்கம் என மக்களுக்குப் புகுத்த முயற்சித்துள்ளார். இதுதான் கட்டுரையாளர் செய்துள்ள மிகப்பெரிய தப்பாகும். இது மிகப் பாரதூரமானது என்பது தௌஹீத் எனும் பிரிவினருக்குத் தெரியாமல் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துள்ளார்கள். எனவேதான் முகல்லிதுகளும் தௌஹீத் எனும் பிரிவாரும் ஹதீஸை மறுக்கும் விடயத்தில் சமமானவர்கள் என நாம் ஆரம்பத்தில் எழுதியுள்ளோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கத்தின்போது ஸூரா காப் ஓதினார்கள் என்ற ஹதீஸைத் தெரிந்து கொண்டே மறுக்கின்றார்கள் எனும் குற்றச்சாட்டில் இருந்து உண்மையை ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் தப்பிக்கவே முடியாது. இந்த ஹதீஸிற்கு மாற்று விளக்கம் கொடுப்பதற்கு செய்த முயற்சி இவர்களுக்கு அதனைவிடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிழமையும் என்பதன் பொருள் 'எல்லாக் கிழமையும் அல்ல' என இவர்கள் கூறினால் பித்அத் சம்பந்தமாக வரும் ஹதீஸிலும் 'ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு' என வந்திருப்பதையும் எல்லா 'பித்அத்தும் வழிகேடு என்பது பொருளல்ல' என்ற பித்அத் வாதிகளின் மாற்று விக்கத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா......? ஏனெனில் இரண்டு இடங்களிலும் 'குல்லு' எனும் அறபி வாசகம்தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. மறுமையை முன்னிறுத்திஇ மனோஇச்சையைப் புறந்தள்ளிவிட்டு வஹியை மாத்திரம் பின்பற்றும் பாக்கியம் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
No comments:
Post a Comment