அல்குர்ஆன் இறக்கப்பட்டது ஏன்..........? - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Friday, July 14, 2017

அல்குர்ஆன் இறக்கப்பட்டது ஏன்..........?



- அபூ முஹம்மத் அல் முஹம்மதீ -


ரமழான் மாதம்: எத்தகைய (மகத்துவமான)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக்கூடியதாகவும் உள்ள அல்குர்ஆன் (முதன் முதலாக) இறக்கப்பட்டது. ஆகவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைகின்றாரோ (அவர்) அதில் நோன்பு நோற்கட்டும். மேலும் (உங்களில் அக்காலத்தில்) யார் நோயாளியாக அல்லது பிரயாணத்தில் இருக்கின்றாரோ ஏனைய நாட்களில் (அந்த நாட்களைக்) கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளுங்கள். அழ்ழாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகின்றானேயன்றி உங்களுக்கு சிரமத்தை (க்கொடுக்க) நாடவில்லை. (கடமையாக்கப்பட்ட) எண்ணிக்கையைப் பூரணமாக்குவதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அழ்ழாஹ்வை பெருமைப்படுத்துவதற்காகவும் (விடுபட்டவற்றை மீட்டும்படி ஏவியுள்ளான். அத்துடன் நீங்கள்) நன்றி செலுத்தும் பொருட்டு (சட்டத்தில் சலுகை தந்து இலகுவாக்கியுள்ளான்.)
( 0 2 : 1 8 5 )

ஒவ்வொரு வருடமும் ஒரு ரமழான் வந்து செல்கின்றது. அந்த வகையில் மீண்டும் ஒரு ரமழான் எங்களை மிக நெருங்கி விட்டது. ரமழான் சிறந்ததொரு மாதம் என்பதை நாம் அறிந்துவைத் துள்ளோம். ஆனால் அதற்கான காரணம் என்ன என சிந்திப்போர் எம்மில் மிகக்குறைவாகவே இருக்கின்றனர். இதன் விளைவு ரமழானின் மூலம் அழ்ழாஹ் எம்மிடம் எதிர்பார்க்கும் மாற்றம் எதுவுமே ஏற்படாத நிலையில் அது எம்மை விட்டும் பிரிந்து சென்றுவிடுகின்றது. அல்குர்ஆன் முதன் முதலில் இறக்கப்பட்டதைக் கூறி அழ்ழாஹ் இந்த அல்குர்ஆனிய வசனத்தில் ரமழானின் சிறப்பை மனிதர்களுக்கு உணர்த்துகின்றான். அல்குர்ஆன் இறக்கப்பட்டதனால் சாதாரண ஒரு மாதம் சிறப்பைப் பெறுகின்றதென்றால் அந்த மாதத்திற்கு விNஷட சிறப்பைப் பெற்றுக்கொடுத்த அல்குர்ஆன் எவ்வளவு மதிப்பு டையதாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

உயர் அந்தஸ்த்துப் பெற்ற அல்குர்ஆனை இறக்கிய நோக்கத்தையும் அழ்ழாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். மக்களுக்கு நேர்வழியைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்குர் ஆனை இறக்கியுள்ளான், அந்த நேர்ழிபற்றிய தெளிவான விளக்கத்தைத் தருவதற்காக அல்குர்ஆனை இறக்கியுள்ளான். நேர்வழியையும் வழிகேடுகளையும் தெளிவாக மக்கள் பிரித்தறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை இறக்கியுள்ளான். இந்த மூன்று நோக்கங்களை மனிதர்கள் அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழ்ழாஹ் அல்குர்ஆனை இறக்கியுள்ளான் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் ஒரு மனிதன் அதற்கான வழிமுறைகளை அதுபற்றித் தெரிந்த ஒருவரிடம் கேட்கின்றான். அவரும் அந்த வழிமுறைகளைத் தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்கின்றார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த வழிகாட்டுதல்களை ஆங்கிலம் வாசிப்பதற்கு மாத்திரம் அறிந்து வைத்துள்ள இவன் சிலகாலம் தொடர்ந்து வாசிக்கின்றான். எழுதப்பட்டுள்ள வாசகங்களின் பொருளை அறியாவிட்டாலும் தொடர்ந்து அதனை வாசிப்பதன் மூலம் சில காலங்களில் அந்த வழிகாட்டுதல்கள் இவனுக்கு பார்க்காமல் வாசிக்கும் அளவிற்கு ஞாபகத்தில் வந்துவிடுகின்றன. திடீரென ஒருநாள் இவன் ஒரு அமெரிக்கரைப்போன்று ஆடை அணிந்துகொண்டு தெரிந்தவர்களிடம் ஷஷநான் அமெரிக்கா செல்கின்றேன்.|| எனக்கூறி விடைபெற்றுக்கொண்டு நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்றால் இவனைப் பற்றி நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்....................? சுவனம் செல்வதற்குத் தரப்பட்ட வழிகாட்டுதலே அல்குர் ஆனாகும். அல்குர்ஆன் தானாகவே கிடைத்துவிடவில்லை. மாறாக இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து நானூற்றி நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சமூகத்தில் காணப்பட்ட அறிவீனமான, அநீதமான, பண்பாடற்ற செயல்களினால் அதிருப்தியுற்று, சிறந்ததொரு வழிகாட்டலைத் தேடி, மனித சஞ்சாரமற்ற ஒரு ஒதுக்குப் பறத்தில் தனிமையில் பல காலங்கள் தியானம் செய்து கேட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்டதே அல்குர்ஆனாகும். எனவே நேர்வழி எது என்பதை அறியாதிருந்த ஒரு மனிதர் பல சிரமங்களை சகித்துக்கொண்டு நேர்வழியைத் தேடிச் சென்றபோது கொடுக்கப்பட்டதுதான் அல்குர்ஆன் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதனையே அழ்ழாஹ் மக்களுக்கு நேர்வழிகாட்டியாக அல்குர்ஆன் இறக்கப் பட்டுள்ளது எனக் கூறுகின்றான்.

சுவனம் செல்வதற்கு இதுதான் வழி என்பதைத் தெளிவாக அறபு மொழியில் எழுதி எமக்குத் தரப்பட்டுள்ளது. அவ்வாறு தரப்பட்ட அல்குர்ஆனை அது நாம் விளங்காத மொழியில் இருப்பதனால் அதனை ஓதுவதற்கு மாத்திரம் கற்றுக்கொண்டு மரணிக்கும் நாள் வரைக்கும் அதனை ஓதிக்கொண்டே இருப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் நேர்வழியை அடைந்துகொள்ள முடியுமா? அல்லது அதனை விளங்கி, அதன்படி நடப்பதன் மூலம் நேர்வழியை அடைந்துகொள்ள முடியுமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அல்குர்ஆன் கூறும் நேர்வழியில் நடப்பவர்கள் அல்குர்ஆன் ஓதுவதை வழமையாக்கிக்கொள்வது அவசியமாகும்.

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:-
அல்குர்ஆனை ஓதுபவருக்கு உதாரணம் (அவர் முஸ்லிமாக இருந்தால்) தோடம்பழத்தைப் போன்றவராவார். அதன் சுவையும் சிறந்ததாகும், அதன் வாடையும் சிறந்ததாகும். அல்குர்ஆனை ஓதாதவருக்கு உதாரணம் (அவர் முஸ்லிமாக இருந்தால்) ஈத்தம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை சிறந்ததாகும். (ஆனால்) அதற்கென எவ்வித நறுமணமும் கிடையாது. அல்குர்ஆனை ஓதும் கெட்டவருக்கு உதாரணம் மல்லிகையைப் போன்றவராவார். அதன் வாடை சிறந்தது. அதன் சுவையோ கசப்பானதாகும். அல்குர்ஆனை ஓதாத கெட்டவருக்கு உதாரணம் ஷஷஹன்ழலா|| எனும் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவையும் கசப்பானது, அதற்கென எவ்வித நறுமணமும் கிடையாது.
(ஸஹீஹுல் புஹாரி கி. ப. குர்ஆன் 17)

அல்குர்ஆனை ஒதுவது ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளைப் பெற்றுத்தரும் நற்செயலாகும். அல்குர்ஆனின்படி வாழுகின்ற முஸ்லிம் அல்குர்ஆனை ஓதும்போது அவன் மிகச்சிறந்த நிலையை அடைகின்றான். ஏதாவதொரு காரணத்தினால் அந்த முஸ்லிமுக்கு அல்குர்ஆனை ஓதும் பாக்கியம் கிடைக்காவிட்டால் நறுமணம் இல்லாத ஈத்தம்பழத்தைப் போன்று அவன் ஆகிவிடுவான். அதாவது அவனது மேலதிக சிறப்பு அற்றுப்போய் விடும். இருந்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திற்குள் இருப்பான்.

ஆனால் அல்குர்ஆன் காட்டும் நேர்வழியைப் புறக்கணித்து வாழ்பவன் அதனை ஓதுவதன் மூலம் மாத்திரம் நேர்வழியை அடைந்துவிட முடியாது. அதன் வழிகாட்டலை ஆழமாகப் படிக்காதவர் களை நோக்கி அல்குர்ஆன் பின்வருமாறு எச்சரிக்கின்றது : -

(அவர்கள் இந்த) அல்குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது (அவர்களது) உள்ளங்கள் மீது அவற்றின் பூட்டுக்கள் (போடப்பட்டிருக்கின்றனவா)?
( 4 7 : 2 4 )

அல்குர்ஆனை ஒதுவதன் மூலம் நாம் நன்மை பெற்றுக் கொள்ள முடியும் என இஸ்லாம் கூறுகின்ற அதே நேரம் அல்குர்ஆன் காட்டும் நேர்வழியை ஏற்று நடக்காத கெட்டவர்களும் அல்குர்ஆனைஓதுவார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்துகின்றது. அல்குர்ஆனை ஓதுவதனைவிட அது என்ன கூறுகின்றது என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பதை இறுதியாக நாம் முன்வைத்த அல்குர்ஆனிய வசனம் எமக்குக் கூறுகின்றது. இந்த உண்மையை ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள் : -

சுத்தம் ஈமானின் பாதியாகும், ஷஷஅல்ஹம்து லில்லாஹ்|| என்பது தராசை நிரப்பக்கூடியதாகும், ஷஷஸுப்ஹானழ்ழாஹி வல் ஹம்து லில்லாஹ்|| என்பது வானங்களுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதை நிரப்பக்கூடியனவாகும், தொழுகை ஒளியாகும், ஸதகா அத்தாட் சியாகும், பொறுமை ஒளியாகும், அல்குர்ஆன் உமக்குரிய அல்லது உமக்கு எதிரான ஆதாரமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் தினசரி தனது ஆத்மாவை வியாபாரத்திற்கு உட்படுத்துகின்றான். (அல்குர்ஆன் காட்டும் நேர்வழியில் நடப்பதன் மூலம்) தனது ஆத்மாவை (அவனுக்கு) விற்று அதனை விடுதலை பெறச் செய்வோரும் உள்ளனர். அல்லது (அல்குர்ஆன் காட்டும் நேர் வழியைப் புறக்கணிப்பதன் மூலம் அதனை iஷத்தானுக்கு விற்று) அதனை அழிவில் ஆழ்த்திக் கொள்வோரும் உள்ளனர்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி. தஹாரா 01 )

அசத்தியங்கள் அனைத்தை விட்டும் சத்தியத்தைத் தெளி வாகப் பிரித்தறிவித்து, சத்தியத்திற்குரிய தெளிவான சான்றுகளை வழங்கி நேர்வழி காட்டிக்கொண்டிருக்கும் அல்குர்ஆனை யாரெல் லாம் தங்களது வாழ்க்கை வழிகாட்டியாக ஆக்கிக்கொள்கின்றனரோ அவர்களுக்கு அல்குர்ஆன் நிச்சயமாக அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு மறுமை நாளில் சாட்சி சொல்லும். அதேநேரம் அல் குர்ஆனை ஏறெடுத்தும் பார்க்காமல், அதன் வழிகாட்டலைப் புறக்க ணித்து வாழ்பவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதற்கு இதே அல்குர்ஆன் மறுமையில் சாட்சியாக வந்து நிற்கும். எனவே அல்குர்ஆனை ஓதுவதால் மட்டும் இந்த நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நேர்வழி எது எனத் தெரியாத நிலையில் தன்னிடம் அந்த நேர்வழியைக் கேட்டுப் பிரார்த்திக்கப்பட்டதன் காரணமாக அழ்ழாஹ் அல்குர்ஆனை இறக்கிவைத்தான். இந்த உண்மையை அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயத்தைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம். அல்குர்ஆனின் முதலாவது அத்தியாயம் அழ்ழாஹ்விடம் வெறுமனே ஷஷஎங்களுக்கு நேர்வழியைக் காட்டு|| எனப் பிரார்த்தித்ததாகக் கூறவில்லை. மாறாக அதிலே மூன்று விடயங்கள் கேட்கப்படுகின்றன. நேர்வழியைக் காட்டும்படி முதலாவது கேட்கப்படுகின்றது. அந்த வழி உனது அருள் கிடைக்கப் பெற்றவர்களது வழியாக இருக்க வேண்டும் என இரண்டாவதாகக் கூறப்படுகின்றது. அந்த வழி: வழிதவறியவர்களினதோ அல்லது உனது கோபத்துக்கு உள்ளா னவர்களினதோ வழியாக இருக்கக்கூடாது என மூன்றாவதாகக் கூறப்படுகின்றது.

நாம் இங்கு தெளிவுபெறுவதற்காக எடுத்துக்கொண்ட வசனத்தில் அல்குர்ஆன் நேர்வழிகாட்டியாக இறக்கப்பட்டுள்ளது என முதலாவதாக அழ்ழாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியைக் கேட்ட நாம் அதனை உறுதி செய்யும் விதத்தில் உனது அருளைப் பெற்றுக்கொண்டவர்களது வழியாக இருக்க வேண்டும் என நாம் கேட்டதற்கேற்ப, அல்குர்ஆன் நேர்வழியைத்தான் காட்டுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான சான்றுகளையும் அது கொண்டுள்ளது என அழ்ழாஹ் இரண்டாவதாகக் கூறுகின்றான். வழிதவறியவர்களினதோ அல்லது உனது கோபத்திற்கு உள்ளா னவர்களினது வழியாக இருக்கக்கூடாது என நாம் கேட்டதற்கிணங்க சத்தியத்தையும் அசத்தியங்களையும் அல்குர்ஆன் மிகத் தெளிவாக பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கின்றது என அழ்ழாஹ் மூன்றாவதாக எமக்குக் கூறுகின்றான். அதாவது அல் குர்ஆனின் முதலாவது அத்தியாயத்தின் மூலம் அழ்ழாஹ்விடம் எதனை நாம் கேட்டோமோ அதனைத்தான் முழு அல்குர்ஆனும் எமக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றது என்பதை இந்த வசனத்தின் மூலம் அழ்ழாஹ் எங்களுக்குக் கூறுகின்றான்.

கண்ணியமிக்க அழ்ழாஹ் கூறுவதாவது:-
ஷஷதெளிவான (இந்த) வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் இதனை (நீங்கள்) விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அறபு மொழியிலான அல்குர்ஆனாக ஆக்கியுள்ளோம்.
( 4 3 : 0 2, 0 3 )

நேர்வழிகாட்டியாக, நேர்வழிதான் என்பதை உறுதிப் படுத்தும் அத்தாட்சியாக, அசத்தியங்களை விட்டும் சத்தியத்தைப் பிரித்தறிவிக்கக் கூடியதாக வந்த அல்குர்ஆனை நாம் தெளிவாக விளங்கி அது இறக்கப்பட்ட நோக்கத்தை நாம் அடைந்துகொள்ள வேண்டும் என்பதே அழ்ழாஹ்வின் எதிர்பார்ப்பாகும்!

புனித ரமழான் நேர்வழியின்றி சீர்கெட்டுப்போயிருந்த மனிதசமுதாயத்தின் நேர்வழிக்கான வாசல் திறக்கப்பட்ட மாதமாகும். அதன் காரணமாக ரமழான் மாதம் சிறப்படைகின்றது. எனவேதான் ரமழானின் சிறப்பைக் கூற முற்படும் அழ்ழாஹ் அதிலே அல்குர்ஆன் இறங்க ஆரம்பித்ததை நினைவுபடுத்துகின்றான். எனவே எம்மை வந்தடையும் ஒவ்வொரு ரமழானும் அழ்ழாஹ்வின் வேதம் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள ஒரு அருள் என்கின்ற உணர்வை எம்மிடம் உண்டாக்க வேண்டும். எம்மில் ஜாஹிலிய்ய வழிமுறையில் வாழ்ந்துகொண்டிருப்போரை அல்குர்ஆனின் நேர்வழியைப் பற்றி ஆராயத் தூண்டும் மாதமாக அமைய வேண்டும். அல்குர்ஆனிய வாழ்வை ஏற்றிருந்தும் அல்குர்ஆனியப் பண்புகளை அடையப் பெறாதவர்கள் அதனை அடைந்துகொள்வதற்கான ஒரு பயிற்சிக் காலமாக அது அமைய வேண்டும்.

நேர்வழியாக அல்குர்ஆனை இறக்கிவைத்த அழ்ழாஹ் அந்த அல்குர்ஆனில் நேர்வழி கிடைக்கப்பெற்றவர்களுக்கான ஒரு பயிற்சித் திட்டத்தையும் வகுத்துத் தந்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒரு பயிற்சி நோன்பு நோற்பதாகும். பண்ணிரண்டு மாதங்களில் ரமழான் மாதம் முழுமையாக ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு வேண்டும் என்பது அழ்ழாஹ்வின் கட்டளையாகும். ஷஷஉங்களில் யார் அந்த மாதத்தை அடைகின்றாரோ (அவர்) அதில் நோன்பு நோற்கட்டும். மேலும் (உங்களில் அக்காலத்தில்) யார் நோயாளியாக அல்லது பிரயாணத்தில் இருக்கின்றாரோ ஏனைய நாட்களில் (அந்த நாட்களைக்) கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளுங்கள்.
( 0 2 : 1 8 5 )

தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்தப்பயிற்சியைப் பூரமாக்காதவர்கள் வேறு நாட்களில் விடுபட்ட நோன்புகளைப் பிடித்து அந்தப் பயிற்சியைப் பூரணமாக்கியே தீர வேண்டும் என்பது அழ்ழாஹ்வின் கட்டளையாகும். இந்தக் கட்டளையை நிறைவேற்றாது ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால்கூட அது நிறைவேற்றப்படாத ஒரு கடனாகவே இருக்கும். மரணித்தவர் சார்பாக அது நிறைவேற்றப்படாத பட்சத்தில் மரணித்தவரை அழ்ழாஹ் நாடினால் தண்டிக்கலாம்.

ஒரு மாதம் முழுமையாக நோன்பு நோற்க வேண்டும் என்பதை இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்துவதற்கான காரணம் அவன் எங்களை நேர்வழிப்படுத்தியதற்காக அவனை நாம் பெரிது படுத்த வேண்டும் என்பதாக அழ்ழாஹ் கூறுகின்றான். இதன்மூலம்; கட்டாயம் நோன்பு நோற்க வேண்டிய ரமழான் மாதத்திற்கும் நேர்வழிக்கும் உள்ள தொடர்பு இன்னும் அதிகரிப்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். ரமழானிலே நேர்வழியின் வாசல் திறந்தது என்பதனால் ரழமான் மாதம் சிறப்புப் பெறுகின்றது. அழ்ழாஹ் எம்மை நேர்வழிப் படுத்தியதற்காக ரமழானில் நோன்பு நோற்று அவனைப் பெரிதுபடுத்த வேண்டும் என நாம் ஏவப்பட்டிருப்பதனால் நேர்வழியின் பெறுமதி உயர்கின்றது.

மிகப்பெறுமதிவாய்ந்த நேர்வழியை நாம் அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அல்குர்ஆனை அழ்ழாஹ் இறக்கி வைத்துள்ளான். அந்த நேர்வழியை அடைந்தவர்கள் அதற்காக அவனைப் பெரிதுபடுத்தும் வணக்கங்களைக் கடமையாக்கியுள்ளான். நேர்வழிகாட்டியாக, நேர்வழி என்பதற்கான அத்தாட்சியாக, வழிகேடுகளை விட்டும் நேர்வழியைப் பிரித்துக் காட்டக்கூடியதாக அழ்ழாஹ்வினால் இறக்கியருளப்பட்டுள்ள அல் குர்ஆனை ஓதுவதுடன் நிறுத்திக் கொள்கின்றவர்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

ஷஷஇது நல்லுபதேசமும், (நேர்வழியையும், வழி கேட்டையும்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனுமேயன்றி வேறில்லை. உயிருடன் உள்ளவர்களை எச்சரிப்பதற் காகவும், நிராகரிப்பாளர்கள் மீது (எமது) கூற்று உறுதி யாகுவதற்காகவும் (இதனை இறக்கியருளினோம்.)||
( 3 6 : 6 9, 7 0 )

எனும் அல்குர்ஆனிய வசனத்தை மரணித்தவர்கள் வீட்டில் மக்கள் ஓதுகின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு எமது சமூகம் அல்குர்ஆனின் நேர்வழியிலிருந்து தூரமாகியுள்ளது என்பதை சாதாரண மனிதர்களும் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

செயலாற்றுவதற்கு நம் உபதேசம்!



அல்குர்ஆனை ஆராயுங்கள்! ( 4 7 : 2 4 )

அல்குர்ஆனை விளங்குங்கள்! ( 4 3 : 0 2, 0 3 )

அல்குர்ஆனைப் பின்பற்றுங்கள்! ( 0 7 : 0 3 )

அல்குர்ஆனைப் பிரச்சாரம் செய்யுங்கள்!
( 2 5 : 5 2 )

அல்குர்ஆனை ஓதுங்கள்! ( 2 7 : 9 1, 9 2 )

No comments:

Post a Comment