ஸஹாபாக்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களா? மார்க்கத்தை உருவாக்கியவர்களா? - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Friday, July 14, 2017

ஸஹாபாக்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களா? மார்க்கத்தை உருவாக்கியவர்களா?



அல்குர்ஆன் விளக்கம்!

ஸஹாபாக்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களா? மார்க்கத்தை உருவாக்கியவர்களா?
- அபூ முஹம்மத் அல் முஹம்மதி -

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (நற்கருமங்களில்) முதலாவதாக முந்திக்கொண்டு சென்றவர்களையும், அவர்களை அழகிய முறையில் (நற்கருமங்களில்) பின்தொடர்ந்து சென்றவர் களையும் கொண்டு அழ்ழாஹ் நிச்சயமாகப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைக் கொண்டு பொருந்திக்கொண்டனர். அன்றி கீழால் ஆறுகள் ஓடும் சுவனபதிகளை அவர்களுக்கு அவன் ஏற் பாடு செய்திருக்கிறான். அவற்றிலே அவர்கள் என்றும் நிலையாக இருப்பார்கள். அது மிகப் பெரிய வெற்றியாகும்.
( 09 : 100 )

முதலில் அழ்ழாஹ்வின் திருப்தியுடன்கூடிய சுவனம் ஆதம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு எவ்வித முயற்சியுமின்றியே கொடுக்கப்பட்டது. iஷத்தானைப் பற்றி எச்சரிக்கப்பட்டிருந்தும், அவனது பொய்யை நம்பி தவறு செய்ததன் காரணமாக அந்த சுவனத்தை விட்டும் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், அவர்களது துணையான ஹவ்வா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் வெளியேற்றப்பட்டார்கள். அதன் பின்னர் அழ்ழாஹ் அதே சுவனம் கிடைப்பதற்கு தேர்வுப் பரீட்சையை ஏற்படுத்திவிட் டான். அந்தப் பரீட்சையையும் அடிபணிவதை மையமாக வைத்தே அழ்ழாஹ் அமைத்திருக்கின்றான். அழ்ழாஹ்வுக்கு மாறு செய்து iஷத்தானுக்கு வழிப்பட்டதன் காரணமாக சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட மனிதன், மீண்டும் அந்த சுவனத்தில் நுழைவ தானால் iஷத்தானுக்கு மாறு செய்து அழ்ழாஹ்வுக்கு வழிப்பட்டுநடக்க வேண்டும் என்பதே அழ்ழாஹ்வின் நிபந்தனையாகும். இவ் வாறு ஒரு மனிதனுக்கு அழ்ழாஹ்வின் திருப்தியுடன், சுவர்க்கம் கிடைப்பதானது மிகப் பெரிய வெற்றி என்பதாக அழ்ழாஹ்வே கூறிவிட்டான்.

அழ்ழாஹ் மிகவும் நீதமானவன் என்பதனையும் இந்த வசனத்தின் மூலம் அவன் நிரூபித்துள்ளான். இஸ்லாம் பலராலும் அதிசயமாகப் பார்க்கப்பட்டு புறக்கணிக்கப்படும் கால கட்டத்தில் அந்த சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றுவோருக்கு விNஷட கூலிகளைக் கொடுத்தாலும் ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்குரிய கூலியைக் கொடுப்பதில் அழ்ழாஹ் ஒருபோதும் தவறுவதில்லை. எனவேதான் அழ்ழாஹ் இங்கு ஸஹாபாக்களில் ஆரம்ப காலகட் டத்தில் ஹிஜ்ரத், நுஸ்ரத் உட்பட ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது வழிகாட்டலை அப்படியே பின்பற்றிய உத்தம ஸஹாபாக்களைக் கொண்டு பொருந்திக்கொண்டது போன்று, அதே நற்கருமங்களைச் செய்த பின்னால் வந்த ஸஹாபாக்களையும் பொருந்திக் கொண் டதாகக் கூறுகின்றான்.

நன்மையான காரியங்களில் பிறரை முந்திக் கொண்டு செயல்படுவோருக்கு அழ்ழாஹ்விடம் விNஷட அந்தஸ்த்துக் காணப்படுகின்றது. அது பற்றி அழ்ழாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:-

வஹீ மூலம் உமக்கு நாம் இறக்கிய வேதம் இருக்கின்றதே! அதுதான் சத்தியமாகும். (அது)அதற்கு முன்னால் உள்ளவற்றை (வேதங்களை) உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. பின்னர் எமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அந்த வேதத்தைக் கொடுத்தோம். அவர்களில் சிலர் (அதற்கு மாறுசெய்து) தங்களுக்கே அநியாயம் செய்துகொள்ளக்கூடியோரும் உள்ளனர், மேலும் சிலர் நடுநிலையானோராக உள்ளனர், அவர்களில் (மற் றும்) சிலரோ அழ்ழாஹ்வின் கட்டளைப்படி நன்மையான காரியங் களில் முந்திக்கொள்ளக்கூடியோராக இருக்கின்றனர். அது மிகப் பெரிய பாக்கியமாகும். ( 35 : 32 ) இந்த வசனத்தில் அழ்ழாஹ் கட்டளையிட்ட நல்லமல்களை முந்திக்கொண்டு செயல்படுத்துவோர் பெரும் பாக்கியம் கொடுக்கப் பட்டவர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். இந்த விடயத்தைக் கூறுவதற்கு முன்னால் எதிர்காலம் பற்றி அறியக்கூடிய அழ்ழாஹ் வஹிமூலம் இறக்கப்பட்டதுதான் சத்தியம் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டான். எனவே குர்ஆன் ஹதீஸ் இரண்டுமே வஹி என்ப தால் அந்த இரண்டிலும் நன்மையானவை என கற்றுத் தரப்பட்ட வற்றை மாத்திரம் நன்மையானவைகளாக ஏற்று, அவற்றை நாம் எடுத்து நடப்பதில் மும்முரமாக இருந்தால் அது எம்மைப் பாக்கியம் பெற்றவர்களில் சேர்த்துவைக்கும்.

அழ்ழாஹ்வின் வேதமாகிய குர்ஆன் ஹதீஸை மாத்திரம் தூய்மையுடன் பின்பற்றி நடக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் சுவனம் செல்வார்கள் என்றாலும், சுவனம் செல்லக்கூடிய அவர்கள் மறுமையில் இரு சாராராகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள். வெற்றி பெற்ற இரு சாராரில் விNஷடமானவர்கள் நல்லமல்களில் பிறரை முந்திக் கொள்ளக்கூடியோரே. இந்த இரு சாராரையும் பற்றி அழ்ழாஹ் ஷஷவாகிஆஷஷ எனும் அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் விபரமாகக் கூறுகின்றான். அங்கும் அழ்ழாஹ் ஷஷஅஸ்ஸாபிகூன்ஷஷ (முன் சென்று விட்டவர்கள்) என்ற இந்த வார்த்தையையே பயன்படுத்தியுள்ளான். இவர்கள் அழ்ழாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்பதையும் அழ்ழாஹ் அங்கு கூறுகின்றான்.

எனவே அழ்ழாஹ் இந்த வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு உணர்த்தியுள்ள மற்றுமொரு உண்மை சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அழ்ழாஹ்வுக்கு அடிபணியும் விடயத்தில் குர்ஆன் ஹதீஸில் கற்றுத்தரப்பட்ட நல்லமல்களில் போட்டியுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதாகும். ஏனெனில் இஸ்லாத்தின்படி வாழ்ந்தவர்கள்கூட மறுமையில் அவர்களது செயல்களை அடிப்படையாகக் கொண்டு முன்சென்றவர்கள், வலப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுவர்.
இதுவரை நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக்கொண்ட தவ்பா எனும் அத்தியாத்தின் நூறாவது வசனம் உணர்த்தக்கூடிய ஐந்து விடயங்களை உங்களுக்கு நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். அவற்றை சுருக்கமாக நாம் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்:-

1 - அழ்ழாஹ்வின் திருப்தியுடன், சுவனமும் மனிதனுக்குக்
கிடைக்குமானால் அது மிகப்பெரிய வெற்றியாகும்.

2 - இஸ்லாத்திற்காகப் பிறந்த மண்னைத் துறத்தல், அவ்வாறு
துறந்து வரக்கூடியோருக்கு உதவி செய்தல் உட்பட நல்ல
செயல்கள் செய்யக்கூடியோருக்கே சுவனமும், அழ்ழாஹ்
வின் திருப்தியும் கிடைக்கும்.

3 - சுவனம் செல்லும் முஸ்லிம்கள் மறுமையில் இரு கூட்டமாகப்
பிரிக்கப்படுவார்கள். ஒரு சாரார் நற்செயல்களில் பிறரை முந்
திக்கொண்டு செயல்படக்கூடியவர்கள். இவர்கள் முன்சென்று
விட்டவர்கள் எனக் கூறப்படுவார்கள். அவர்களது அந்தஸ்
த்தை அடையாத இரண்டாவது சாரார் வலப் பக்கத்தைச்
சார்ந்தவர்கள் என அழைக்கப்படுவர்.

4 - ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஸஹாபாக்களில் முன் சென்றுவிட்டவர்களையும், அவர்களைப் போன்று நல்லமல்கள் செய்தவர்களையும் அழ்ழாஹ்
பொருந்திக்கொண்டதாக அறிவித்துள்ளான்,

5 - அழ்ழாஹ் பொருந்திக் கொண்ட ஸஹாபாக்களுக்கு நாமும்
சிறந்த மதிப்பளிப்பதுடன் அவர்கள் செய்த நல்லமல்களைப்
போன்று நாமும் நல்லமல்களைச் செய்து அழ்ழாஹ்வின்
பொருத்தத்தையும், சுவனத்தையும் பெற்றுக் கொள்ள
முயற்சிக்க வேண்டும். இஸ்லாத்திலே ஸஹாபாக்களுக்கு ஏனைய அனைத்து சமூகங்களையும்விட உயர் அந்தஸ்த்துக் காணப்படுகின்றது. அவர்களை அழ்ழாஹ் பொருந்திக்கொண்டுவிட்டான் என்பதை இங்கு நாம் விளக்கத்திற்கு எடுத்துக்கொண்ட வசனமே நிரூபிக்கின்றது. இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இதனைப் பின்வருமாறு அழ்ழாஹ்வின் தூதர் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:-
தலைமுறைகளில் மிகச்சிறந்தது எனது தலைமுறையாகும். அடுத்து அவர்களைத் தொடர்ந்து வரக்கூடிவர்கள். (அதனை) அடுத்து அவர்களைத் தொடர்ந்து வரக்கூடிவர்கள். அதன் பின்னர் ஒரு கூட்டம் தோன்றும் : அவர்களில் உள்ளவரது சாட்சியத்தை விட அவரது சத்தியம் முந்திவிடும், அவரது சத்தியத்தைவிட அவரது சாட்சியம் முந்திவிடும்.
( ஸ. புஹாரி - கி. பழாயிலு அ. நபி )

எனவே அழ்ழாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்ட, அவன் தூதரால் சிறந்தவர்கள் என சான்று வழங்கப்பட்ட அந்த உத்தம ஸஹாபாக்களை மதிப்பது ஒரு முஸ்லிமின் அடிப்படைக் கடமை. ரஸூலுழ்ழாஹி  அவர்களிடமிருந்து ஹதீஸ்களை எங்களுக்கு எத்தி வைக்கும் அனைத்து அறிவிப்பாளர்களையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசும் அதேவேளை, அந்த அறிவிப்பாளர்களில் ஸஹாபாக்கள் வந்துவிட்டால் எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் அவர்கள் அனைவருமே நீதமானவர்கள் என நம்புவதன் மூலம் இஸ்லாமிய சமூகம் அவர்களுக்கு வழங்க வேண்டிய மதிப்பை வழங்கியுள்ளது. மனிதர்கள் எனும் ரீதியில் நடந்த அவர்களது தவறுகளை மன்னித்து அழ்ழாஹ் பொருந்திக்கொண்டதன் பிறகு அதுபற்றி விமர்சிக்கும் உரிமை சாதாரண மனிதர்களாகிய எமக் குக் கிடையாது என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். இவ்வளவு இருந்தும் அந்த ஸஹாபாக்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின் பற்றுவதற்கு இஸ்லாத்திலே ஆதாரம் இருக்கின்றதா....? இஸ்லாத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அந்தஸ்த்து காணப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் எந்தெந்த அந்தஸ்த்தைக் கொடுக்கும்படி அழ்ழாஹ்வும், அவன் தூதரும் கூறியுள்ளனரோ அதிலே நாங்கள் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.

இஸ்லாம் என்பது அழ்ழாஹ்வால் தரப்பட்ட தீனாகும். அந்த தீனிலே முதல் இடம் அழ்ழாஹ்வுக்கு உரியதாகும். அழ்ழாஹ்வின் அந்தஸ்த்தை ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்கள்கூட அடைய முடியாது. அழ்ழாஹ்வுக்குரிய அந்தஸ்த்தை அடையவில்லை என்பதற்காக ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) மதிப்பற்றவர்கள் என்பது பொருளாகிவிடுமா? ஒருபோதும் இல்லை. அதேபோன்று ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்களது அந்தஸ்த்தை ஸஹாபாக்கள் அடைய முடியாது. ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது அந்தஸ்த்தை அடையவில்லை என்பதன் காரணமாக ஸஹாபாக்கள் மதிப்பற்றவர்கள் என்பது பொருளாகி விடுமா? ஒரு போதும் இல்லை.

எனவே ஸஹாபாக்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்றுதான் இஸ்லாம் கூறுகின்றதே தவிர நபியைப் பின்பற்றுவதுபோல் அவர் களைப் பின்பற்றும்படி அழ்ழாஹ்வோ, அவன் தூதரோ ஒருபோதும் எமக்குக் கட்டளையிடவில்லை. இதனை மீறி ஸஹாபாக்களையோ அல்லது ஏனைய இமாம்களையோ நபியின் அந்தஸ்திற்கு நாம் உயர்த்துவோமானால் அது வரம்பு மீறலாகும். யூத, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களை அழ்ழாஹ்வினது அந்தஸ்திற்கு உயர்த்தியதன் மூலம் அழ்ழாஹ்வுக்கு இணையாக ஆக்கினார்கள். அதேபோன்று நாம் ஸஹாபாக்களையோ அல்லது ஏனைய இமாம்களையோ அவர்களது அந்தஸ்த்தைவிட உயர்த்தி அவர்களைப் பின்பற்ற முனைவது எந்த அளவு சரியானது என்பதனை ஆராய்வது மிகமிக அவசியமானதாகும்.

ஸஹாபாக்களை மார்க்க விடயத்தில் பின்பற்ற வேண்டும் எனும் தவறான கொள்கையைப் பரப்பக்கூடியோர் தங்களது தவறானகொள்கைக்கு அத்தவ்பாவின் நூறாவது வசனத்தைத்தான் ஆதாரமாக முன் வைக்கின்றனர். அவர்கள் அந்த வசனத்தைத் தங்களது கொள்கைக்கு ஆதாரமாக முன்வைப்பது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அழ்ழாஹ் இந்த வசனத்தில் ஸஹாபாக்களில் ஒரு சாரார் ஏனைய ஸஹாபாக்களை முந்திக்கொண்டு ஹிஜ்ரத், நுஸ்ரத் உட்பட நற்காரியங்களில் முந்திச் சென்றுவிட்டதனையும், அதன் பின்னர் முன் சென்றுவிட்டவர்கள் போன்றே நற்கருமங்களைப் பின்னர் வந்த ஸஹாபாக்களும் செய்யவே, அந்த இரு சாராரையும் அழ்ழாஹ் பொருந்திக் கொண்டான் என்பதை அறிவிக்கின்றானே அன்றி, மார்க்கத்தில் அந்த ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என ஒருபோதும் இங்கு அழ்ழாஹ் கூறவில்லை. அப்படியான ஒரு விளக்கம் மேற்படி தவறான கொள்கையுடையோரால் வலிந்து பெறப்பட்டிருக்கின்றதே அன்றி, இந்த விளக்கம் குர்ஆனுடைய விளக்கமே அல்ல.

ஏனெனில் முதலாவதாக இந்த விளக்கம் அழ்ழாஹ்வின் நேரடிக் கட்டளைக்கு முரணானது.

அழ்ழாஹ் கூறுகின்றான்:-
(மனிதர்களே!) நீங்கள் உணராத விதத்தில் திடீரென உங்களுக்கு ( அழ்ழாஹ்வின் ) தண்டனை வருவதற்கு முன்னர் உங்களது ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிகச் சிறந்ததைப் பின்பற்றுங்கள்.
( 39 : 55 )
(மேலதிக விபரத்திற்குப் பார்க்கவும்: 2:170, 7:3, 31:21, )


மார்க்க விடயங்களில் நபியல்லாத மற்றவர்களைப் பின்பற்ற வேண்டும் என எவராவது விளங்கினால் அவரது விளக்கம் அழ்ழாஹ்வின் நேரடிக்கட்டளைக்கு முரணானது என்பது மேற்கண்ட அல்குர்ஆனிய வசனங்கள் மூலம் நிரூபணமாகின்றது. இரண்டாவதாக இவர்களது மேற்படி விளக்கம் ஹதீஸிற்கும் நேரடியாகவே முரண்படுகின்றது.

ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:-
ஏதேனும் ஒன்று உங்களது உலக விடயத்தில் உள்ளதாக இருந்தால் அதுபற்றி நீங்களே நன்கறிந்தவர்கள். ஏதேனும் ஒன்று உங்களது தீனில் உள்ளதாக இருந்தால் அது என்னிடமே (ஒப் படைக்கப்பட வேண்டும்.)
(ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹாபாக்களைப் பார்த்துத்தான் ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) மார்க்க விடயமாக இருந்தால் அதனைத் தன்னிடம் விட்டுவிடும் படி கூறுகின்றார்கள். எனவே ரஸூலுழ்ழழாஹி  மூலம் எமக்கு வழங்கப்பட்ட அல்குர்ஆனுக்கு, அவர்களது ஹதீஸிற்கு முரணா கவே பொருள் கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவதாக இவர்கள் கூறக்கூடிய விளக்கம் ஸஹாபாக் களது விளக்கத்திற்கும் முரணானது. அந்த ஸஹாபாக்கள் வஹியை மாத்திரமே பின்பற்ற வேண்டும் எனத் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்கள். இதற்குப் பல ஆதாரங்கள் காணப்பட்டாலும் ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கு தருகின்றோம்.

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரலியழ்ழாஹூ அன்ஹூ) கூறுகின்றார்கள்:-

துல்ஹஜ் மாதத்தில் உம்ரா செய்த பின்னர் இஹ்ராமைக் களைந்துவிட்டு, ஹஜ்ஜுக்கு வேறாக இஹ்ராம் அணிந்து கொள் வது பற்றி அப்துழ்ழாஹ் பின் உமர் (ரலியழ்ழாஹூ அன்ஹூ) அவர்களிடம் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் கேட்டார். அது ஆகுமானது என அப்துழ்ழாஹ் பின் உமர் (ரலியழ்ழாஹூ அன்ஹூ) கூறினார்கள். நிச்சயமாக உங்களது தந்தை அதனை விட்டும் தடுத்துள்ளார்களே! என சிரியாவாசி கூற, ஷஷரஸூலுழ்ழாஹி(ரலியழ்ழாஹூ அன்ஹூ)அதனைச் செய்திருக்க எனது தந்தை அதனைத் தடுத்துள்ளார்கள் என்றால் எனது தந்தையின் கட்டளை பின்பற்றப்படுமா? அல்லது ரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது கட்டளை பின்பற்றப்படுமா? ஷஷ என அப்துழ்ழாஹ் பின் உமர் (ரலியழ்ழாஹூ அன்ஹூ) கேட்டார்கள். உடனே அந்த மனிதர் ஷஷரஸூலுழ்ழழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது கட்டளைதான் (பின்பற்றப்படும்)ஷஷ எனக் கூறினார். அப்போது ஷஷநிச்சயமாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள் அதனைச் செய்துள்ளார்கள்ஷஷ எனக் கூறினார்கள்.
( திர்மிதி - ஸஹீஹ், கி. ஹஜ் )

எந்த ஸஹாபாக்களை மார்க்கத்தில் பின்பற்ற வேண்டும் என நேர்வழி கிடைக்கப்பெறாதவர்கள் கூறுகிறார்களோ, அவர்களது கூற்றை ஏற்றுக்கொண்டவர்களாக அந்த ஸஹாபாக்களே இருக்க வில்லை என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய உண்மை. அதற்கு ஒரு சான்றாகவே மேலுள்ள சம்பவத்தை முன்வைத்துள்ளோம்.

நான்காவதாக தவ்பாவின் நூறாவது வசனத்திற்கு இவர்கள் கூறக்கூடிய விளக்கத்திற்கு ஆதாரங்களுடன் கூடிய முபஸ்ஸிரீன் களினது கூற்றாவது இருக்கிறதா எனப் பார்த்தால் இவர்களது விளக்கம் தவறானது என்பதற்குத்தான் முபஸ்ஸிரீன்களது கூற்றில் ஆதாரம் காணப்படுகின்றது.

இமாம் குர்துபீ தங்களது தப்ஸீரில் தவ்பாவின் நூறாவது வசனத்திற்கு விளக்கம் எழுதும்போது ஸஹாபாக்களை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றித் தெளிவுபடுத்துகின்றார்கள்:-

ஷஷபிஇஹ்ஸான்ஷஷ (அழகிய முறையில்) எனும் தனது கூற்றைக் கொண்டு (முந்திக்கொண்டு சென்றவர்களான) அவர்களது செயல் களிலும், கூற்றுக்களிலும் எவற்றை பின்பற்றவேண்டும் என்பதை அழ்ழாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். ( ஸஹாபாக்கள் ) அழ்ழாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்ள வேண்டும் அவர்களிடம் ஏற்பட்ட தடம்புரள்தல்களிலும், சறுக்கல்களிலும் அவர்களைப் பின்பற்றுவதுஅல்ல. ஏனெனில் அவர்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வர்களாக (மஃஸூம்களாக) இருக்கவில்லை
( தப்ஸீர் குர்துபீ - பாகம் - 8 )

எனவே முபஸ்ஸிரீன்களது ஆதாரபூர்வமான விளக்கத்தை எடுத்துப் பார்த்தாலும் தவ்பாவின் நூறாவது வசனத்தை மார்க்க விடயத்தில் ஸஹபாக்களைப் பின்பற்றுவதற்கு ஆதாரமாகக்கொள்ள முடியாது என்பதனையே உறுதிப்படுத்துகின்றது. மாறாக இமாம் குர்துபீ அவர்கள் ஸஹாபாக்களின் கூற்றுக்களிலும், செயல்களிலும் அவர்கள் மஃஸூம்கள் (தவறுகளை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்) இல்லாத காரணத்தினால் தவறுகள் நடந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி அவற்றை நாம் பின்பற்றக்கூடாது எனும் உண்மையையும் எழுதியுள்ளார்கள். அதற்குரிய நியாயமான காரணமாக ஸஹாபாக்கள் மஃஸூம்கள் இல்லை என்பதை முன்வைத்துள்ளார்கள்.

ஐந்தாவதாக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது வழிகாட் டல்களைப் பின் பற்றுவது போன்று ஸஹாபாக்களது சொல், செயலைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்களது தவறான கொள்கையை அவர்கள் பின்பற்றுவதாகக் கூறும் இமாம்களாவது ஏற்றுள்ளார்களா என்பதை இப்போது நோக்குவோம்.

ஷhபிஈ மத்ஹபின் மிகமுக்கியமான இமாமாகிய இமாம் நவவி எழுதியுள்ளதாவது:-

ஸஹாபி ஒரு கூற்றைக் கூறினால் அல்லது ஒரு செயலைச் செய்தால் அது ஷஷமவ்கூப் ஷஷ எனப்படும் என்பதை முன்னால் எழுதி விட்டோம். அதனை ஆதாரமாகக் கொள்ளப்படுமா? என்றால் அதில் கருத்து முரண்பாடும், விரிவான விளக்கமும் இருக்கின்றது. அந்தக் கூற்று எல்லோரையும் சௌ;றடையா விட்டால் அது இஜ்மாஃ ஆகமாட்டாது என எங்களது மத்ஹபைச் சார்ந்தோர் கூறியுள்ளனர். அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படுமா? என்றால் இமாம் ஷhபிஈ


அவர்களுக்கு இதுபற்றி பிரபல்யமான இரண்டு கூற்றுக்கள் உள்ளன. அந்த இரண்டிலும் மிகவும் சரியானது புதிய கூற்றேயாகும். அதாவது அது ஆதாரம் அல்ல என்பதாகும். இரண்டாவது கூற்று பழைய கூற்றாகும். அதாவது அது ஆதாரம் என்பதாகும்.
( ஷரஹ் முஸ்லிம் - பாகம்:1 )

பழைய கூற்று என்பது தவறு என்பதை அறிந்ததும் இமாம்களால் கைவிடப்பட்ட கூற்று என்பதுதான் பொருள். இந்த விளக்கத்தையும் இமாம் நவவி அவர்களே வேறு ஒரு இடத்தில் எழுதியுள்ளார்கள். எனவே இமாம் ஷhபிஈ அவர்களது இறுதியா னதும், சரியானதுமான முடிவு ஸஹாபாக்களது கூற்றோ அல்லது செயலோ ஆதாரம் அல்ல என்பதேயாகும். இமாம் நவவி அவர் களினது முடிவும் இதுவே என்பதனை இமாம் ஷhபியின் கூற்றை சரியானது என உறுதிப்படுத்தியதில் இருந்து நாம் புரிந்துகொள் ளலாம். ஆகவே நபியைப்போன்று ஸஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்ற சுய கருத்தைக் கூறுவோர் அந்தக் கருத்திற்கு அவர்கள் பின்பற்றுவதாகக் கூறும் இமாம் ஷhபிஈகூட எதிராகவே இருக்கின்றார்கள் என்பதைக் கருத்தில் கொண்டாவது தங்களது அபாயகரமான கொள்கையை விட்டும் திருந்தக்கூடாதா? இவ்வாறு பிழை எனத் தெரிந்ததும் திருத்திக் கொள்வதில் எவ்வித கௌ ரவக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இமாம் ஷபிஈ அவர்கள் கூட இந்த விடயத்தில் தவறாகச் சொல்லிவிட்டுப் பின்னர் சரியா னதை ஏற்றுள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க ஏனையவற்றில் இமாம் ஷhபிஈ அவர்களைப் பின்பற்றுவதாகப் கூறுகின்றவர்கள் இந்த விடயத்தில் குறைந்தபட்சம் இமாம் ஷhபிஈ அவர்களையா வது பின்பற்றக் கூடாதா......?

இஸ்லாத்தின் மூலாதாரம் வஹியைத் தவிர வேறில்லை. அது அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய இரண்டைத் தவிரவேறு எந்த வடிவிலும் இல்லை.இந்த அடிப்படையை உடைத்துவிட்டால் மக்கள் இலகுவாக வழிகெடுக்கப்பட்டு விடுவார்கள். எனவேதான் நரகின்பால் அழைக்கும் ஒவ்வொரு பிரிவும் எப்படியாவது மக்களை இந்த அடிப்படையிலிருந்து அகற்றிவிட முயற்சிக்கின்றனர். அத்த கைய முயற்சிகளில் ஒன்றுதான் தவ்பாவின் நுறாவது வசனத்தை ஆதாரமாகக் காட்டி ஸஹாபாக்களைப் பின்பற்றும்படி அழ்ழாஹ் அல்குர்ஆனில் கூறியிருப்பதாக நம்பவைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

மேற்படி அல்குர்ஆனிய வசனம் அவ்வாறு கூறவில்லை என்பதை குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்களின் கூற்று, தப்ஸீர்,மத் ஹப் என எல்லாவற்றின் மூலமும் தெளிவாக நிரூபித்துள்ளோம். எனவே ஸஹபாக்கள் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட மார்க்கத்தை அச்சொட்டாகப் பின்பற்றியவர்களே. மாறாக மார்க்கத்தை அவர்கள் உருவாக்கவில்லை. அழ்ழாஹ் என்றென்றும் அவர்கள் மீது அருள்புரிந்தருள்வானாக! அவர்கள் பெயரால் மக்களை வழிகெடுக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தோல்வியுறச் செய்திடுவானாக!! அவர்கள் நேர்வழியைத் தெளிவோடு பின்பற்றி வெற்றிபெற்றதுபோன்று எம்மையும் வெற்pபெறச்செய்திடுவானாக!!!



செயலாற்றுவதற்கு நம் உபதேசம்! நற்காரியங்களில் ஸஹாபாக்களைப் போன்று வேகத்துடன் முன்னேறுங்கள்! ரஸூலுழ்ழாஹி ச அவர்களையே பின்பற்ற வேண்டும் என அவர்கள் உறுதியாக நம்பியிருந்தது போன்று நம்பிக்கை கொண்டு நடைமுறைப்படுத்தியும் வாருங்கள்!! மார்க்கம் சம்பந்தமான நேரடித் தொடர்புக்கு:- 0 718 308 208

No comments:

Post a Comment