பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-02 - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Thursday, July 13, 2017

பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-02




('உண்மை உதயம் 1996- ஜூன-மார்ச் இதழின் கட்டுரைக்கு மறுப்பு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல்-இஸ்லாம் எனும் சஞ்சிகையில் 1998 மார்ச்-எப்ரல் பதிப்பில் வெளியிடப்பட்டது)

இயக்கப்பெயரில் செயல்படலாமா? என்று தலைப்பிட்டு, அது கூடும் என்பதற்கு கட்டுரையாளர் ஆதாரங்கள் எனக்கண்ட அல்குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்தெழுதியுள்ளார் அது சரியானதா? தவறானதா? ஏன்பதை தெளிவுபடுத்துவதற்கு முன்னர் உண்மையை உணர விரும்புவோர் அக்கட்டுரையாளருக்கு ஏற்பட்டுள்ள குழப்பதை அறிந்துகொள்வது அவசியம்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயக்கப்பெயர்கள் கூடுமா? என்பது ஒரு பிரச்சினை. பிரிவினை இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டனவா? என்பது மற்றொரு பிரச்சினை. இவ்விரண்டையும் பிரித்தரிவதில் தான் கட்டுரையாளருக்கு அடிப்பமைட குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாம் சரியெனக்கண்ட ஆதாரங்களைக்கொண்டு இயக்கப்பெயர்கள் கூடும் எனக் கூறும் அவர் அதே ஆதாரங்களைக்கொண்டு பிரிவுகளுக்கும் ஆதாரம் தேடியிருக்கிறார் ஆனால் உண்மை என்னவெனில் இவ்விரண்டு பிரச்சினைக்குமிடையில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் முதலில் இவ்விரு பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்குவோம்.

இயக்கப்பெயர்கள் கூடுமா? ஏன்ற சர்ச்சையை எடுத்துக்கொண்டால் இப்பிரச்சினை தீன் சம்பந்தப்பட்டதாக நோக்கப்பட வேண்டுமெயன்றி, நடைமுறையில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கு மத்தியில் காரணகாரியங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பெயர்களைப் போன்று நோக்கப்படக் கூடாது. ஏனெனில் சர்ச்சை என்னவென்றால், இஸ்லாமிய மார்க்கம், மனிதர்களால் உருவாக்கப்படும் மார்க்க ரீதியிலான பெயர்களை அங்கீகரிக்கின்றதா? என்பதேயாகும். இஸ்லாத்தை பெருத்தவரையில் அந்த தீனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அல்லாஹ்வால் நிலையாதொரு பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டிருக்கின்றது. அது முஸ்லிம் என்பதேயாகும் (22:78). அதற்கு நிகராக மற்nhரு பெயரை உருவாக்கும் உரிமையோ, அவசியமோ எவருக்கும் கிடையாது. ஏனெனில் 'தீன்' என்பது அல்லாஹ்வின் புறமிருந்து கற்றுத்தரப்படக்கூடிய ஒன்று என்பதை குர்ஆன், ஹதீஸூடன் சாதாரண தொடர்புள்ள ஒருவர் கூட அறிந்தேயிருப்பார்.

இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தனிமனிதனுக்கு 'முஸ்லிம்' எனும் பெயர் இருப்பது போன்று, அக்கொள்கை வாதிகள் மூன்று பேருக்கு மேற்பட்டு ஜமாஅத்தாக அந்த ஜமாஅத்தின்கெனவும் வஹிமூலம் சூட்டப்பட்ட பெயர் காணப்படுகிறது.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
'ஒரு விசுவாசியின் உள்ளம் (ஒருபோதும்) மூன்று விடயங்களில் மோசடி செய்யாது,
1. செயல்களணைத்தும் அல்லாஹ்வுக்கு என்ற தூய எண்ணத்துடன் செய்தல்
2. அமீருக்குக் கட்டுப்படுதல்
3. ஜமாஅதுல் முஸ்லிமீனோடு சேர்ந்திருத்தல்'
(ஹாகிம்- முஸ்ததரகல் பா.1-ஸனதுஹூ ஸஹீஹ்)

குர்ஆன் ஹதீஸ் தான் எனது வழிகாட்டி எனக்கூறும் ஒருவருக்கு வஹி மூலம் சூட்டப்பட்ட அழகிய பெயர் இருக்க மற்றொரு பெயர் எதற்கு? அதேநேரத்தில் பிரிவினைவாதிகள் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் பெயர்களைக்கூட ஆதமாரங்களின் அடிப்படையில் நிரூபிக்க முடியாது.

பிரிவுப்பெயர்கள் கூடும் என்பதற்கு கட்டுரையாளர் கூறும் ஒரு காரணம் நிர்பந்தம் என்பதாகும். அதாவது 'முஸ்லிம்கள்' எனும் பெயரில் தவறான கொள்கையை கொண்டவர்கள் தோன்றும் போது இயக்கப்பெயர்கள் அவசியம் என அவர் கூறுகின்றார். சத்தியம் இருக்கும் போது, சத்தியப் போர்வையில் அசத்தியங்கள் காணப்படுவதென்பது குறிப்பிட்டதொரு காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினையல்ல. ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய காலத்தில் கூட முஸ்லிம்கள் எனும் பெயரில் அசத்தியவாதிகள் காணப்படவே செய்தனர்.

ஒருமுறை தம்மிடம் வந்த கிறிஸ்தவர்களை நோக்கி 'முஸ்லிம்களாகி விடுங்கள்' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய போதுஈ உமக்கு முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டோம் என அசத்தியவாதிகளான அக்கிறிஸ்தவர்கள் பதிலளித்தார்கள்.

இஸ்லாம் எனும் பெயரில் அசத்தியவாதிகள் காணப்பட்டதால் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெரை மாற்றிக்கொள்ளவில்லை. முஸ்லிம்கள் எனும் போர்வையில் அசத்தியவாதிகள் தோன்றும்போதெல்லாம் அவைகளைவிட்டும் வேறுபடுத்திக்காட்டுவதற்காக புதுப்புது பெயர்களை ஏற்படுத்துவது நடைமுறைச்சாத்தியமும் இல்லை. அத்தகையதொரு அவசியமுமில்லை. அனைத்திற்கும் மேலாக கட்டுலையாளர் கூறுகின்ற நிர்பந்தம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டும்கூட அவர்கள் அதனைச் செய்யவில்லை.

கட்டுரையாளரின் பார்வையில் அவர் வாழக்கூடிய நாடாகிய இலங்கையில் காணப்படும் வழிகேடுகளை குறிக்கக் கூடியதாக அவரது இயக்கப்பெயர் அமையவில்லை என்பதைக்கூட அவர் சிந்திக்கவில்லையா?

குhரணப்பெயர்கள் எனவும், குலப்பெயர்கள் எனவும் 'முஹாஜிர், அன்ஸார், அவ்ஸ், ஹஸ்ரஜ்' போன்ற சில பெயர்களை சுட்டிக்காட்டி இயக்கப்பெயர்கள் கூடும் என்பதற்கு அதனை மற்றொரு ஆதாரமாக கட்டுரையாளர் முன்வைக்கின்றார். மார்க்க ரீதியிலான பெயரில் தான் சர்ச்சையேயன்றி காரணப்பெயரிலோ, குலப்பெயரிலோ சர்ச்சை இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். ஆகவே பிரச்சாரப் பணியில் ஈடுபடும் ஒருவரை முபல்லிஃ எனவோ, குறிப்பிடமோரு குலத்தைச்சார்ந்தவரை இன்ன குலத்தவர் எனக்கூறுவதிலோ கட்டுரையாளர் சுட்டிக்காட்டியது போன்று தவறேதுமில்லை. ஆனால் ஒரே தலைமைத்துவத்தின் கீழ், ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் சுவனம் செல்லக் கூடிய ஒரே கூட்டத்தில் காணப்பட்ட முஸ்லிம்களின் குலப்பெயரையும், காரணப்பெயரையும் ஆதாரம் காட்டி பல தலைமைத்துவங்களைக் கொண்டு பல பிரிவுகளாக செயல்படுத்துவதற்கு ஆதாரம் கொள்வது தவறு என்பதை சொல்லித்தான் புரிய வேண்டுமா? இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் பிறகும் முஸ்லிம்களின் கோத்திரங்களில் ஒன்றாகிய அவ்ஸ் கோத்திரனத்திருக்கும் அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் தலைவராகிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாத தனியொரு தலைவர் காணப்பட்டிருப்பாரேயானால் கட்டுரையாளரது ஆதாரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்நிலை இஸ்லாத்தின் பார்வையில் எத்தனை தூரம் பயங்கரமானது என்பதை பின்னால் தெளிவுபடுத்துவோம். கட்டுரையாளர் முஸ்லிம்கள் எனும் பெயரில் வழிகேடர்கள் தோன்றும் போது அவ்வழிகேடர்களை இணங்காட்டுவதற்காக சத்தியவாதிகள் சூட்டுவார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுதான் அசத்தியவாதிகளை இணங்காட்டுவதற்கு சரியானதும், நடைமுறைச் சாத்தியமான வழியேயன்றி சத்தியவாதிகள் தங்களுக்கு புதுப்புது பெயர்களை உருவாக்கிக் கொள்வது நபி வழியுமல்ல.

பிரிவுப் பெயர்களை உருவாக்குவதற்கு ஹதீஸின் மூலம் ஆதாரம் தேட முனைந்த கட்டுரையாளர் இவ்வாறு கூறுகின்றார்:
'எனவே இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ அதில் இருப்பவர்களே நேர்வழிபெற்றவர்கள்' என்ற நபிமொழியை மையாக வைத்து அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத் (ஸூன்னாவையும், ஸஹாபாக்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட கூட்டத்தினர்) என்ற பெயரில் தம்மை அறிமுகப்படுத்தினர் (உண்மை உதயம் பக். 22)

கட்டுரையாளரின் கருத்தின் அடிப்படையில் ஏற்கனவே சுட்டிக்காட்டிய படி அவரது பிரிவின் பெயர் இன்றைய காலத்தில் அவரது பார்வையில் தவறான கொள்கைகளைக் கொண்ட பிரிவினர்களை சுட்டிக்காட்டக் கூடியதாக அமைந்திருக்க வேண்டும். அவரது இயக்கப் பெயர் அப்படி அமையவில்லை. அத்துடன் எமக்கு முன்னர் சத்தியத்திலிருந்தவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் பெயரை ஒதுக்கி விட்டு பல பிரிவுகளாக பிரிந்து தமக்கென சுன்னத் வல் ஜமாஅத் போன்ற பெயர்களை பெயர்களை சூடிக்கொண்டவர்கள் என்பது எமது முன்னோர்கள் மீது ஆதாரமின்றி சுமத்தப்படும் அபாண்டங்களேயாகும். ஆப_பக்கர்(ரலி) அவர்களுடைய காலத்திலே முஸ்லிம்கள் எனும் பெயரில் இருந்து கொண்டு ஸகாத்தை மறுக்கக் கூடியதோர் கூட்டம் தோன்றியது. அதற்காக அன்றைய சத்தியவாதிகள் தமதுபெயரை 'ஸகாத் செலுத்தக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீன்' என மாற்றிக்கொள்ளவில்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போன்று அலி(ரலி) உடைய காலத்தில் முஸ்லிம்கள் எனும் பெயரில் ஒரே கூட்டத்தை விட்டும் ஒரு சிலர் பிரிந்து சென்ற போது அவர்களைத்தான் 'ஹவாரிஜ்'(இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்) எனக் கூறினார்களேயன்றி தங்களது பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.

இயக்கப்பெயர்கள் சூடுவதற்கு கட்டுரையாளர் பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் குறிப்பிடுகிறார்.

1.எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும் (அல்லாஹ்வின்) இத்தூதரைவிட்டும் பிரிந்து முஃமீன்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (4:115)

2. முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவது முந்திக் (கொண்டு விசுவாசங்) கொண்டார்களே, அவர்களையும் நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். (9:100)

மேற்கண்ட இரு குர்ஆனிய வசனங்களையும் குறிப்பிட்ட கட்டுரையாளர் முஃமீன்களின் பாதைக்கும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்கள்' என்பதற்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பும் அக்கட்டுரையாளரினதே. நற்கருமங்கள் என்பது வஹி மூலம் கற்பிக்கப்பட்டதேயன்றி மற்றேதுமில்லை. 'நற்கருமங்கள் அனைத்தும் தத்தமது சமூகங்களுக்கு கற்றுக்கொடுப்பது நபிமார்கள் ஒவ்வொருவர் மீதுமிள்ள கடமையாகும்.' என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது கூற்றாகும். (ஸஹீஹ் முஸ்லிம – கி. இமாரா)

ஆகவே விசுவாசிகளின் பாதை என்பதும், அவர்களுடைய நற்செயல்கள் என்பதும் வஹியையன்றி மற்றேதுமில்லை என்பதை புரிந்து கொண்டதன் பின்னால், அதனைப் பின்பற்ற வேண்டுமெனில் கட்டுரையாளருடன் எமக்கு முரண்பாடு கிடையாது. எனவே முஃமீன்களின் பாதையும், நபித்தோழர்களின் நற்செயல்களில் ஒன்றுமாகிய ஒரே தலைமைத்துவத்தின் கீழ் வஹி மூலம் சூடப்பட்ட பெயராகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஒன்றுபடுவோம் என கட்டுரையாளர் உட்பட இஸ்லாத்தை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள' ஒவ்வொருவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அடுத்து கட்டுரையாளர் நபித்தோழர்களின் சிறப்புப் பற்றிக் கூறக்கூடிய ஹதீஸ்களைப் பிரிவுப்பெயர்களுக்கு ஆதமாரமாக காட்டியுள்ளார். ஆவற்றில் ஒன்றை சென்ற இதழில் பிரசுரித்துள்ளோம். ஏனையவை பின்வருமாறு :

1.'என் தோழர்களை நீங்கள் திட்டாதீர்கள். உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை தர்மம் செ;யதாலும் எனது தோழர்களின் ஒரு கைபிடி தர்மத்திற்கோ, அதன் அறைப்பாகத்திற்கோ ஈடாகாது.' (ஸஹீஹ் முஸ்லிம்)

2.'என் தோழர்களை நோவினை செய்வோர் என்னை நோவினை செய்வேராவார். ஏன்னை நோவினை செய்வோர் அல்லாஹ்வை நோவினை செய்வோராவார். அல்லாஹ்வை நோவினை செய்தோரை அவன் பிடித்துக்கொள்வான்.' (திர்மிதி, இப்னுஹிப்பான், ஸஹீஹ் முஸ்லிம்)

3. நான் என் தோழர்களுக்கு பாதுகாப்பு ஆவேன் நான் சென்றுவிட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். என் தோழர்கள் என் உம்மத்திற்கு பாதுகாப்பாவார்கள் அவர்கள் சென்று விட்டால் என் உம்மத்திற்கு வாக்களிக்கப்பட்டது வந்துவிடும். (ஸஹீஹ் முஸ்லிம் பா.16 பக்கம் 83)

மேற்குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களையும், நபித்தோழர்களின் சிறப்புக்கூறக் கூடிய ஹதீஸ்களையும் குறிப்பிட்டு விட்டு இவற்றை ஆதாரமாகக் கொண்டே காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் பிரிவுப்பெயர்களை உண்டுபண்ணினார்கள் எனவும், அவர்களுக்கு ஏற்பட்ட கட்டாயம் தமக்கும் ஏற்பட்டுள்ளதால் பிரிவுப் பெயர்களை ஏற்படுத்தி செயல்படுவதாக கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். (உண்மை உதயம் பக்கம்: 24)

நபித்தோழர்களின் சிறப்பைக் கூறி அவர்களை நற்கருமங்களில் பின்பற்ற வேண்டும் என்hதற்கு அழுத்தம் கொடுக்கும் கட்டுரையாளர் மீது பிரிவுப் பெயர்களையும், அதன் அடிப்படையில் அமைந்த பிரிவுகள் இஸ்லாம் என்பதையும் நிரூபிப்பதற்கு இன்னும் இரண்டு பொறுப்புக்கள் இருக்கின்றன. ஓன்று பல பிரிவுகளாக இருப்பது நற்கருமங்களில் நின்றும் உள்ளது என்பதை நிரூபிப்பதாகும். இரண்டாவது அதனை நபித்தோழர்கள் செய்துள்ளார்கள் என்பதை நிரூபிப்பதாகும். நபித்தோழர்களின் சிறப்புப் பற்றியோ, நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றுவது பற்றியோ எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. நுபித்தோழர்களுடைய நற்செயல்கள்; எது என்பது பற்றி முன்னால் நாம் இக்கட்டுரையில் கொடுத்திருக்கும் தெளிவை வாசகர்கள் மனதில் நன்கு பதித்துக்கொள்ளுங்கள். எனவே நாம் கூறுவது என்னவென்றால் கட்டுரையாளர் தமது கடமையை மறந்து சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தான் கூறியுள்ளாரேயன்றி தாம் எடுத்துக்கொண்ட வாதத்தினை நிரூபிக்கக்கூடிய வகையில் அவர் மீதுள்ள பொறுப்பை நிறைவேற்றவில்லை. அப்பொறுப்பனை நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பிரிவுப் பெயர்களை உருவாக்குவதற்கும், பல பிரிவுகள் இஸ்லாம் என்பதனை நிரூபிப்பதற்கும் கட்டுரையாளர் முன்வைத்த இவ்வாதாரங்கள் குறைந்த பட்சம் பிரிவுப்பெயர்கள் கூடும் என்பதனையே நிரூபிக்கவில்லை. எனவேதானோ என்னவோ இவ்வாதரங்களைத் தொடர்ந்து கட்டுரையாளர் பெயர் முக்கியமல்ல என ஒரு சிறு தலைப்பையே இட்டிருக்கின்றார். அதற்காக அவர் முன்வைத்துள்ள ஆதாரங்களையும் குறிப்பிடுகின்றோம்.

1. விசுவாசிகளாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், சாபியீன்களாயினும் (இவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஸபூரை நம்பும் பிரிவினர் –புஹாரி) எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே விசுவாசித்து நற்கருமத்தை செய்தார்களோ அசவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் நிச்சயமாக உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:62, 5:69)

மேற்கண்ட அல்-குர்ஆனிய வசனத்தின் மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்ட கட்டுரையாளர் 'இஸ்லாம் ஈமானிற்கும், செய்யப்படும் அமலுக்குமே முக்கியத்துவமளிக்கின்றது' எனக்கூறி 'காலத்தின் கட்டாயத்தால் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள சில பெயர்களைச் சூடி அதன்பின் செய்யும் நல்லமல்கள் hயனளிக்காது என்று எப்படிக்கூற முடியும்?' எனக் கேட்டுள்ளார். (உண்மை உதயம் பக்கம்: 25)

குட்டுரையாளர் இஸ்லாத்தின் அடிப்படைகளைப்பற்றி ஏற்பட்ட தவறான விளக்கத்தினால் தான் இத்தகையொரு கேள்வியை எழுப்பியுள்ளார். பேயரைப் பொருத்தவரையிலும் அல்லாஹ்வால் சூட்டப்பட்டதொரு பெயர் காணபடும்போது மற்றொரு பெயரைத் தேர்வு செய்யும் அவசியமோ, உரிமையோ முஸ்லிம்களுக்கு இல்லை என்பது ஒன்றாகும். தாமாகவே உருவாக்கிக் கொண்ட பெயர்களின் அடிப்படையில் பல பிரிவுகள் பிரிந்ததன் காரணமாக அப்பிரிவுகள் அனைத்தும் நரகம் புகக்கூடியவை என்பது இஸ்லாத்தின் மற்றொரு விதியாகும். இவ்விரண்டையும் உரிய விதத்தில் தனித்தனியாக புரிந்து கொள்ளாதன் விளைவே மேற்கண்ட கேள்வியாகும். கட்டுரையாளர் உட்பட அனைவருக்கும் தெளிவு ஏற்படுதற்காக பின்வரக்கூடிய கேள்வியை முன்வைக்கிறோம். ஆல்லாஹ்மீது விசுவாசங் கொள்வததென்பது அவனால் அனுப்பப்பட்ட வேதத்தை நம்புவதனையும் குறிக்கும் என்பதை மறுக்கமாட்டீர்கள். அவ்தேவதத்தின் வசனங்களில் ஒன்றாகிய 22ஆவது அத்தியாயத்தின் 78வது வசனத்தை நம்புகின்ற ஒருவன் தனது பெயராக முஸ்லிம் அல்லாத ஒன்றை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்.? குட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று பெயர் முக்கியமல்ல என்றிருந்தால் அல்லாஹ் குறிப்பிட்டதொரு பெயரை ஒவ்வொரு வேதத்திலும்; இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டோருக்கு சூட்டியிருக்கக் கூடீய காரணம் என்ன? ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அல்லாஹ்வால் சூட்டப்பட்ட மார்க்க ரீதியான பெயர் முஸ்லிம் என்பதை கட்டுரையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிவுப்பெயர்களுக்கு தமது பார்வையில் சரியெனக்கண்ட ஆதாரங்களைக் காட்டுவதன் மூலம் பிரிவுகளை இஸ்லாம் என நிறுவமுயன்ற கட்டுரையாளர் குறிப்பிடுகின்ற இறுதியான ஹதீஸாகிய ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடைபெற்ற சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

'பனூஜதீமா' எனும் கோத்திரத்தாரிடம் ஹாலித் இப்னு வலீத்(ரலி)வை ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர் அம்மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார். அம்மக்கள் 'அஸ்லம்னா (நாங்கள் முஸ்லிம்களானோம்)' என்று கூறமுடியாமல் 'ஸபஃனா' (நாங்கள் மதம் மாறினோம்)' என்றனர். ஹாலித் இப்னு வலீத்(ரலி) அவர்கள் அவர்களில் சிலரை கொலைசெய்யவும், அவர்களில் சிலரை சிறைப்பிடிக்கவும் தீர்மானித்துவிட்டார். அவரோடு சென்றிருந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கைதிகளை கொடுத்து 'உங்கள் எதிரிகளைக் கொல்லுங்கள்' எனக் கூறினார். (அப்போது அவர்களில் ஒருவர்) 'நான் எனது கைதிகளைக்கொல்லவும் மாட்டேன் என்னைச் சார்ந்தவர்களும் கொல்லவும் மாட்டார்கள்' என்று மறுத்தார். ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் படை திரும்பிவந்ததும் இதுபற்றி முறையிடப்பட்டது. ஆப்போது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது இரு கரங்களையும் உயர்த்தி 'அல்லாஹ்வே! ஹாலித்(ரலி) செய்ததிலிருந்து நான் நீங்கிவிட்டேன். (எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை) என இரு தடவை கூறினார்கள் (ஆதாரம்:: புஹாரி எண்- 4339)

மேற்கண்ட சம்பவத்தை கட்டுரையாளர் குறிப்பிட்டுவிட்டு 'இஸ்லாம் எனும் வார்த்தையைக் கூடச் செல்லாதவர்களை அவர்களுடைய நிய்யத்தை கருத்திற்கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அம்மக்களை முஸ்லிம்களாக ஏற்றிருக்க எம்மில் சிலர் காலத்தின் கட்டாயத்தால் வைத்த பெயரைக் காரணம் காட்டி ஏனையோரை அசத்தியவாதிகளாக்க முனைவது வேடிக்கையும் வேதனையும்' எனக் கூறியுள்ளார். (உண்மை உதயம் பக்: 26)

ஆச்சரியம் என்னவென்றால் தான் எடுத்துக்கொண்ட வாதம் ஒருபுறமிருக்க அதனோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆதாரங்களை முன்வைத்து கட்டுரையாளர் தனது வாதத்திற்கு ஆதாரம் தேடுவதேயாகும். இயக்கப்பெயர்களும், அதனடிப்படையில் அமைந்த பிரிவுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது எனும் வாதத்திற்கும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட சம்பவத்திற்கும் என்ன தொடர்பிருக்கின்றது?

மேற்கண்ட சம்பவத்தை தெளிவாக புரிந்துகொள்வதற்கு நம் வாழக்கூடிய இக்காலகட்டத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நபித்தோழர்களில் ஒருவராகிய ஹுதைபா (ரலி) கூறுகின்றார்கள்:- மனிதர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் தீமையைப் பற்றி: அது என்னை அடைந்துவிடும் எனும் அச்சத்தினால் கேட்டுக் கொண்டிருந்தேன். (ஒருமுறை நான்) 'அல்லாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக (நாம்) ஜாஹிலிய்யத்திலும், தீமையிலும் இருந்தோம். அல்லாஹ் இந்த நலவைக் கொண்டு வந்தான். இந்த நலவிற்குப் பின்னால் தீமை ஏற்படுமா?|| எனக் கேட்டேன். (அதற்கு) 'ஆம்!|| எனக் கூறினார்கள். 'அந்தத் தீமைக்குப் பின்னர் நலவு ஏற்படுமா?|| என (நான் மீண்டும்) கேட்டேன். (அப்போது) 'ஆம்! அதிலே களங்கம் காணப்படும்|| எனக் கூறினார்கள். 'அதனது களங்கம் என்ன?|| எனக் கேட்டேன். ஷஷஒரு கூட்டம் எனதல்லாத வழிமுறையைப் பின் பற்றுவார்கள். எனது வழிகாட்டலல்லாததைக் கொண்டு வழிகாட்டு வார்கள். அவர்களிலே நலவையும் காண்பீர். தீமையையும் காண்பீர்.|| எனக் கூறினார்கள். 'அந்த நலவிற்குப் பின்னர் தீமை ஏற்படுமா?|| எனக் கேட்டேன். 'ஆம்! நரகின் வாயில்களிலிருந்துகொண்டு (பல) அழைப்பாளர்கள் (அழைத்துக் கொண்டிருப்பார்கள்.) யார் அவர்களது அழைப்பை ஏற்கின்றார்களோ அவர்களை அதிலே எரிந்துவிடுவார்கள்.|| எனக் கூறினார்கள். (அப்போது நான்) 'அவர்கள்பற்றி எங்களுக்கு விபரித்துக் கூறுங்களேன்?|| எனக் கேட்டேன். (அதற்கு) 'ஆம்! (அவர்கள்) எங்களது தலைமுறையில் தோன்றக்கூடிய ஒரு கூட்டத்தினர். எங்களது வார்த்தைகளைக் கொண்டே கதைப்பார்கள்.|| எனக் கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரவர்களே! என்னை அது வந்தடைந்தால் (நான் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றித்) தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?|| எனக் கேட்டேன். 'ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!|| எனக் கூறினார்கள். 'அவர்களுக்கு என ஒரு இமாமும், ஒரு ஜமாஅத்தும் இல்லை என்றால்........................?|| எனக் கேட்டேன். ஆதற்கவர்கள் (அப்போது காணப்படும்);; அனைத்தைப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கியிருப்பீராக! (ஏனெனில் அவை அனைத்தும் நரகம் புகககூகுடியவைகளாகும் ஒதுங்குவதன் காரணமாக) உமக்கு மரணம் வரும்வரையில் ஏதேனும் ஒரு மரத்தின் வேரைக் கடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலை உமக்கு ஏற்படினும் சரியே (பிரிவுகளுடன் இணைந்துவிடாதே)| எனக் கூறினார்கள்.(ஸ.புஹாரி கி. பிதன்;, ஸ.முஸ்லிம் கி. இமாரா - 13)

சுத்தியத்தை எவ்வளவு தெளிவாக ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்கள் இணங்காட்டிச் சென்றுள்ளார்கள் என்பது மேற்கண்ட ஹதீஸின் மூலம் உங்களுக்கு புரிந்துவிடும.; இஸ்லாத்தின் பெயரால் நரகின் பால் அழைக்கின்ற தீமையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இக்காலத்திலே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் மேலதிக எவ்விதவிளக்கமும் அவசியமில்லாத விதத்தில் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வின் அருளினால் ஜமாஅதுல் முஸ்லிமீன் காணப்படுகின்ற இக்காலத்தில் இஸ்லாத்தின் பெயரால அழைக்கக்கூடிய பிரிவுகளிலே சேர்வது ஒரு புறமிருக்க, ஜமாஅதுல் முஸ்லமீனும் அதற்கான ஒரே தலைமைத்துவமும் இல்லாவிட்டால் கூட இன்றுள்ள எந்தவொரு இயக்கத்துடனோ, பிரிவுடனோ சேரக்கூடாது என்பது ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களது நேரடியான தடையுத்தரவாகும்.

இது இப்படியிருக்க கட்டுரையாளர் பிரிவுப்பெயரை மட்டுமல்ல, அதனடிப்படையில் ஒருவான பிரிவுகளையே ஆதாரங்களின்றி சரியென நிரூபிக்க முனைகின்றார். ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களது காலத்திலே நாமும் இஸ்லாத்தில் இருக்கின்றோம் எனக் கூறிய கிறிஸ்தவர்களுடன் இணைவதை கட்டுரையாளர் எப்படி தவறு எனக் கருதுவாரோ, அதேபோன்றதொரு தவறுதான் பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் அ;ப்பிரிவுகளிலே சேர்வதென்பது ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்கள் கூறியிருப்பதை கட்டுரையாளர் ஏற்கனவே அறிந்திருக்காவிடில் இனிமேல் இந்நபிமொழியை படித்ததன் பின்னர் தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஜமாஅதுல் மஸ்லினோடு இணைந்து கொள்வாராக! பிரிவுகள் இஸ்லாம் தான் என நிரூபிப்பதற்கு கட்டுரையாளர் இறுதியாக முன்வைத்த சம்பவத்தையும் தெளிவுபடுத்துகின்றோம். ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களால் தீமைகளின் காலம் எனக்கூறப்பட்ட பிரிவுகளின் காலத்தில் சத்தியத்தில் காணப்படக்கூடியோராகிய ஜமாஅதுல் முஸ்லிமீனில் சத்தியத்தை ஏற்பதற்குரிய வார்த்தைகளைக் கூற முடியாமல் வேறு எதனையும் கூறிவிட்டால் அவருடைய எண்ணத்தை கருத்திற்கொண்டு அவரை முஸ்லிமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்பதைத் தான் அச்சம்பவம் குறிக்கின்றதேயன்றி, பிரிவுகள் இஸ்லாம் என்பதற்கு அதிலே எவ்வித ஆதாரமும் இல்லை.

கட்டுரையாளர் பிரிவுகளை சரிகாண்பதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களை 'நிராகரிப்பாளர்கள், சாபியீன்கள்' எனப் பெயர் சூட்டிதையும் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களைப் பற்றி கூறக்கூடிய வார்த்தையை இஸ்லாத்திலே ஆதமாரமாக கொள்ள முயல்வது எந்தளவு பொருத்தம் என்பதை முடிவுசெய்யும் பொறுப்பை வாசகர்களுக்கு விடுகின்றோம்.

சுருக்கமாக கூறுவதெனில் சர்ச்சையாகிய 'பிரிவு பெயர்களில் செயல்படலாமா?' என்பதை எடுத்துக்கொண்டால் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வால் சூட்டப்பட்ட பெயர் இருக்க மற்றொரு பெயரைத் தெரிவு செய்யும் உரிமையோ, அத்தகையதொரு அவசியமோ இல்லை என்பது நரகின் பால் அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு மத்தியில் சுவனம் செல்லக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீனின் முடிவாகும். அத்துடன் அதுவல்லாத பெயர்களுக்கு வஹி மூலம் இறக்கப்பட்டதிலிருந்து எந்தவொரு ஆதாரத்தையுமட் முன்வைக்க முடியாது.

'பிரிவுகள் இஸ்லாமா?' எனும் சர்ச்சையை எடுத்துக்கொண்டால் இஸ்லாம் என்பது ஒரே தலைமைத்துவத்தின் கீழ் காணப்படும் தனியொரு கூட்டமேயன்றி, பல தலைமைத்துவத்தின் கீழ் காணப்படும் பிரிவுகளல்ல. எனவே தான் இஸ்லாம் எனும் பெயரில் பல பிரிவுகள் மனிதர்களது பார்வையில் நன்மைகளை செய்யக்கூடியவைகளாக இருந்தபோதிலும் கூட அவற்றில் இணைய வேண்டாம், அப்படி ஒருவர் பிரிவுகளுடன் இணைவாரேயானால் அவர் செல்லுமிடம் நரகம் என ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்கள் மேற்குறிப்பிட்ட ஹதீஸில் தீர்ப்பளிக்கின்றார்கள். புpரிவை இஸ்லாம் எந்தளவு கண்டிக்கின்றது என்பதற்கு பின்வரக்கூடிய ஒரே அல்-குர்ஆனிய வசனம் படிப்பினை பெறக்கூடியோருக்கு போதுமானது.

(நபியே) உமது ரப் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே ஜமாஅத்தாக ஆக்கியிருப்பான் (அவ்வாறு அவன் நடாததன் காரணமாக) உமது ரப் அருள் புரிந்தோரைத்தவிர (ஏனையவர்கள்) கருத்து வேறுபாடுபட்டுக் கொண்டேயிருப்பர். மேலும் (கருத்துவேறுபாடு கொண்டு பல கூட்டங்களாக ஆகுவதற்காகவே) அவர்களை (அவன்) படைத்தான். (பிரிவினையின் காரணமாக) மனிதர்கள், ஜின்கள் ஆகியோரைக்கொண்டு நிச்சயமாக நரகை நிரப்புவேன் எனும் உமது ரப்பின் வாக்கும் பூர்த்தியாகிவிட்டது. (11:118,119)

பிரிவுகள் நரகம் செல்லும் எனும் ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களுடைய தீர்ப்பிற்கான காரணமாக பிரிவுப்பெயர்களை முன்வைக்கப்படுவதாக கட்டுரையாளர் தவறான ஒரு விளக்கத்தை கொண்டுள்ளார். பிரிவுகள் நரகம் செல்வதற்கான காரணம் அவர்கள் ஜமாஅத்திலிருந்து பிரிந்து பல பிரிவுகளாக காணப்படுவதாகும் என்பதை மேற்கண்ட அல்-குர்ஆனிய வசனம் அடித்துரைக்கின்றது.

பிரிவினையின் பாரதூரத்தை உணர்ந்து கொள்ளாதவர்களுக்காக இஸ்லாத்தின் விதிகளை சுரக்கித் தருகின்றோம்.

1. ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களுடைய உம்மத் 73 ஆகப் பிரிந்து அதில் உன்று மாத்திரமே சுவனம் செல்லும் (அபூதாவூத் - ஸஹீஹ்)
2. தங்களுடைய மார்க்கத்தை துண்டுதுண்டாகப் பிரித்து பல கூட்டங்களாக ஆகிவிட்டவர்களுடன் ரஸூலுல்லாஹி (ஸல்); அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை (6:159)
3. நபிமார்களுக்கெல்லாம் ஏவப்பட்டது என்னவென்றால் தீனை நிலை நாட்டுங்கள், அதிலே பிரிந்து விடாதீர்கள் என்பதேயாகும் யார் இணைவைக்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வழைப்பு பாரமாகவே தோன்றும் (42:13)
4. ஒரு தலைமைத்துவம் இருக்கும் போது ஒற்றுமையை குழைத்து பிரிவை உண்டுபண்ண முயற்சிப்பவரை கொன்று விட வேண்டும் என்பது நபியின் கட்டளையாகும் (ஸஹீஹ் முஸ்லிம்)

பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி-03

No comments:

Post a Comment