பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி- 03 - Jamaathul Muslimeen (Al-Jamath)

Jamaathul Muslimeen (Al-Jamath)

"ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும் அதன் தலைவருடனும் இணைந்திருப்பீராக" (புஹாரி,முஸ்லிம்)

Breaking

Thursday, July 13, 2017

பிரிவுகள் இஸ்லாமல்ல!! பகுதி- 03



(உண்மை உதயம் 1996-ஜூலை-செப் இதழின் கட்டுரைக்கு மறுப்பு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல்-இஸ்லாம் எனும் சஞ்சிகையில் 1998 மே- ஜூன் பதிப்பில் வெளியிடப்பட்டது))

யூதர்கள் எழுபத்தியொரு பிரிவுகளாக பிரிந்தனர்.அதிலே ஒரு பிரிவு சுவனத்திற்கு செல்லும். (ஏனைய) எழுபது பிரிவுகளும் நரகத்திற்குச்செல்லும். கிறிஸ்தவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். அதிலே எழுபத்தியொரு பிரிவுகள் நரகத்திற்குச் செல்லும் ஒன்று (மாத்திரம்) சுவனத்திற்குச் செல்லும். எவனுடைய கையிலே முஹம்மதுடைய ஆதமா இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக எனது உம்மத் நிச்சயமாக எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும் அதிலே ஒரு பிரிவு சுவனத்திற்குச் செல்லும். எழுபத்தியிரண்டு பிரிவுகள் நரகத்திற்குச் செல்லும் (இப்னுமாஜா ஸஹ்ஹஹூ அல்பானி ஜா.ஸ.1082)

சுவனம் செல்லும் பாதையை அதனைத் தோடுவோருக்கு வரையறையிட்டுக் கூறுகின்ற ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். பல பிரிவுகளுக்கு மத்தியில் சுவனம் செல்லக்கூடிய கூட்டம் ஒரே கூட்டம் என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகின்றது. இந்த ஹதீஸிற்கு மேலதிக விளக்கமாக மேலும் இரு ஹதீஸ்கள் காணப்படுகின்றன. ஒரு கூட்டம் சுவனம் செல்லும் என இங்கு மூடலாக கூறப்பட்டிருக்கும் விடயம் அது ஒரு கூட்டமைப்பு என முதலாவது ஹதீஸூம் அக்கூட்டமைப்பு ஜமாஅதுல் முஸ்லிமீன் என அமைக்கப்படும் என்பதை இரண்டாவது ஹதீஸூம் எடுத்துக் கூறுகின்றன.

உண்மை உதயம் எனும் பத்திரிகையில் இயக்கப்பெயர்களில் செயல்படலாமா? எனும் தலைப்பிலான கட்டுரைக்கு சென்ற இதழில் வஹியிலிருந்து ஆதாரங்களைக்கொண்டு அக்கட்டுரையிலே இஸ்லாம் எனும் பெயரில் பல பிரிவுகள் காணப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவே எனவும் அப்பிரிவுகள் தத்தமது விருப்பிற்கேற்ப தமக்கோர் மார்க்கப்பெயரை சூட்டிக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்த இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. அதே கட்டுரையாளர் அச்சஞ்சிகை ஜூலை-செப்டம்பரிற்கான இதழில் பிரிவினை குப்ர் ஆகுமா? ஏனத் தலைப்பிட்டு ஏற்கனவே எழுதிய பல பிரிவுகள் இஸ்லாத்தில் அங்கிகரிக்கப்பட்டதே! எனும் கருத்தை வேறு சில ஆதாரங்களைக் கொண்டு நிறுவ முயன்றது மட்டுமல்லாமல், தூய இஸ்லாத்தின் அழைப்பை தவறானது எனச் சித்திரிக்கவும் முயன்றுள்ளார்.

இக்கட்டுரையிலே பிரிவினை குப்ர் ஆகுமா? எனும் மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரையிலே முன்வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் எந்த அளவு சரியானவை? ஏன்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

தூய இஸ்லாத்தின் தூது கட்டுரையாளரின் காதுகளுக்கு எட்டியதுமே அத்தூது பற்றி எவ்விதத் தெளிவும் பெறாமலேயே கட்டுரையாளர் சத்தியத்தை மறுக்க முனைந்திருக்கிறார் என்பதை அவருடைய கட்டுரையின் ஆரம்பம் அடித்துரைக்கின்றது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் ஹதீஸில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது உம்மத் எனக் கூறியவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டு பிரிந்தவர்கள் என்பதை சுவனம் செல்லக்கூடிய கூட்டம் மறுப்பதாக கற்பனை பண்ணிக்கொண்டு, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்ட உம்மத்துதான் எழுபத்திமூன்றாகப் பிரியும் என்பதை நிரூபிப்பதற்கு பல ஆதாரங்களை தனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே உம்மத் ஒரு விளக்கம் எனும் தலைப்பில் இடம்பெறச் செய்திருக்கின்றார். சுவனம் செல்லக்கூடிய கூட்டம் இதனை எவ்விதத்திலும் மறுப்பதில்லை என்பதைத் தெரிந்துகொள்வதற்குக் கூட தயாரில்லாத கட்டுரையாளர் தான் ஆராய்ச்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் உம்மத் எனக் கூறியது தங்களை ஏற்றுக்கொண்டவர்களையே என்பதை சத்தியக் கூட்டம் ஆணித்தரமாக கூறுகின்றது. நரகின் பால் அழைக்கக்கூடிய சில பிரிவினர் தான் தங்களை பாதுகாப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் அது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஆரம்பத்திலே நிராகரித்து விட்டவர்களில் ஏற்படக் கூடிய பிரிவுகள் எனக்கூறுகின்றனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ் வெறுமனே பிரியும் எனவும், பிரிவுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுவிட்டு, சுவனம் செல்வது பற்றியோ நரக ம் செல்வது பற்றியோ கூறாத அமைப்பிலும் ஹதீஸ் புத்தகங்களில் காணப்படுகின்றது. அத்தகையதோர் அறிவிப்பை கட்டுரையாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுவிட்டு பிரிவுகள் இஸ்லாம் என்பதற்கு இரண்டு ஆதாரங்கள் எனக்கூறி முதலாவதாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பிரிகின்ற அவர்கள் எனது உம்மத்தினர் என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறியதன் மூலம் அதே நிலையில் அவர்கள் முஸ்லிம்களாகவும் இருப்பார்கள் என்பது உறுதியாகின்றது. (பக். 28)
மற்றொரு ஆதாரம் எனத் தலைப்பிட்டு,
எனது இந்த உம்மத் என நபி(ஸல்) அவர்கள் கூறுவது காபிர்களையும் உள்ளடக்கும் என்றால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அது உள்ளடக்கவே செய்யமு;. அப்படியாயின் யூத, கிறிஸ்தவர்களில் மட்டும் 71 +72 = 143 பிரிவுகள் இருக்கும் எனும் போது எனது இந்த உம்மத் (யூத,கிறிஸ்தவர்கள், காபிர்கள் உட்பட) 73கூட்டங்களாகப் பிரிவர் எனக் கூறமுடியுமா? நிச்சயமாக கூறமுடியாது.

இதிலிருந்து மேற்படி ஹதீஸின் வாசக அமைப்பே பிரிவது முஸ்லிம் என்பதையும் பிரிந்த அதே நிலையில் அவர்கள் முஸ்லிம்களாகவும் இருப்பார்கள் என்பதையும் மிகத் தெளிவாக கூறிவிடுகின்றது என்பதை எவரும் உணரலாம்.

நபி(ஸல்) அவர்களே பிரிந்தவர்கள் பிரிந்த ஒரே காரணத்திற்காக காபிர்களாக மாட்டார்கள் எனக் கூறிப்பிட்டபின் ஒரு சிலர் பிரிவினை ஒன்றையே காரணமாக வைத்து காபிர் பத்வா விடுக்கின்றனர் என்றால் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர் என்பதை கூறித்தெரிய வேண்டும் என்பதில்லை எனக் கருதுகிறேன். (பக்கம்:29)

தூய இஸ்லாத்தை மக்களுக்கு முன்வைக்கக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீன் குர்ஆனையும், ஹதீஸையும் விட்டுவிட்டு சுயகருத்துக்களை ஒருபோதும் கூறுவதில்லை. கட்டுரையாளர் சுட்டிக்காட்டிய ஹதீஸினை மேலும் தெளிவுபடுத்தக்கூடிய ஹதீஸ் காணப்படுகின்றது என்பதை உணர்த்த எமது கட்டுரையின் ஆரம்பத்திலேயே அந்த ஹதீஸை எழுதியிருக்கின்றோம். எனவே கலிமாச் சொல்லி ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்ட உம்மத்திலிருந்து பிரியக் கூடியோரைப்பற்றி ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் கூட்டமைப்பபைத் தவிர ஏனைய பிரிவுகள் நரகத்திற்கு செல்லும் என்பதே அதுவாகும்.

கட்டுரையாளர் ஹதீஸின் வாசக அமைப்பை சுட்டிக்காட்டி பிரியக் கூடியோர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகின்றார். ஆதில் எமக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். எனவே இவ்விடயம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதொன்றாகும். அடுத்து ஹதீஸின் வாசக அமைப்பைக் கவனித்த கட்டுரையாளர் ஹதீஸின் வாசகத்தை கவனிக்காதது எத்தனை பெரிய தவறு என்பதை கட்டுரையாளர் உணர வேண்டும். ஒரு கூட்டத்தை தவிர ஏனைய எழுபத்தியிரண்டு கூட்டங்களும் நரகம் செல்லும் என்பதை ஹதீஸின் வாசகம் குறிப்பிடுகின்றது. நரகம் செல்லும் என்றவுடன் என்றோ ஒரு நாள் அப்பிரிவுகள் சுவனம் நுழையும் என்றோரு தவறான கருத்தையும் இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகள் முன்வைக்கின்றன. அது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் சுவனம் செல்லக்கூடிய கூட்டத்தில் எவருமே பாவம் செய்யமாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கையல்ல.

எனவே ஒரு கூட்டம் சுவனம் செல்லும் என்பது அக்கூட்டத்திலுள்ளோரில், பாவங்களின் காரணமாக எவரேனும் நரகம் சென்றால் என்றோ ஒருநாள் அவர்கள் அனைவரும் சுவனம் செல்லக்கூடியவர்களே. இதே போன்று நரகம் செல்லக்கூடியவன என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களால் கூறப்பட்ட பிரிவுகளும் நரகம் சென்றதன் பின்னால் சுவனம் செல்லும் என்றிருக்குமானால் எழுபத்தியிரண்டு கூட்டங்களை நரகம் எனவும் ஒரு கூட்டம் சுவனம் எனவும் பிரித்தறிவிக்கும் வஹி அர்த்தமற்றதாகி பேய்விடும் என்பதை சிந்தனையுள்ள எவரும் இலகுவாக புரிந்து கொள்வர். எனவே இஸ்லாத்தின் பார்வையில் பிரிவுகள் அனைத்தும் நிரந்தல நரகத்தை அடையக்கூடியன, அல்-ஜமாஅத் மாத்திரமே சுவனம் நுழையக்கூடியது.

குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து பிரிகின்ற அவர்களை ரஸூலுல்லாஹி (ஸல்) தனது உம்மத்தினர் எனக் கூறியதிலிருந்து அவர்களும் முஸ்லிம்களே எனக் கட்டுரையாளர் விளங்கியதை முதலாவது ஆதாரம் என்ற ரீதியில் முன்வைக்கிறார்.

முஸ்லிம்கள் பிரிவார்கள் என்பதற்கும், பிரிவுகளாக மாறிவிட்ட தன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பதற்குமிடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. முஸ்லிம்கள் பிரிவர்கள் என்பதிலிருந்து கட்டுரையாளர் விளங்கிய தவறான விளக்கமே பிரிவினையின் பின்னரும் அவர்கள் சுவனவாதிகளாக இருப்பார்கள் என்பது. இவ்விளக்கம் தவறு என்பதை நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஸ் நேரடியாக தீர்ப்பளிக்கின்றது. விளக்கமும் நேரடித் தீர்ப்பும் முரண்படும் போது விளக்கம் தவறு என்பதே விதியாகும். எனவே கட்டுரையாளர் நாம் எடுத்தெழுதியுள்ள ஹதீஸை அறியாததால் இத்தவறான விளக்கத்திற்கு வந்திருக்கலாம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளை மாற்றி ஏகத்துவ கோட்பாட்டிலிருந்து தடம் புரண்ட அமைப்புக்கள் வேண்டுமானால் இந்தக் கண்டிப்புக்குள்ளாகலாம். அதல்லாத அமைப்புக்கள் வழிகேட்டை விளைவித்தாலும் குப்ரை ஏற்படுத்தாது (பக்கம்: 29)

எழுபத்தியிரண்டு பிரிவுகளும் நிரந்தர நரகம் என்பதே இஸ்லாத்தின் முடிவாகும் இந்த முடிவு தவறு என்பதை கட்டுரையாளர் ஒரு போதும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாது. எனவே தான் பிரிவுகள் வழிகேட்டை விளைவிக்கின்றன என்பதை கட்டுரையாளரே மேற்கண்ட பந்தியில் ஒப்புக்கொண்டுள்ளார். வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லக் கூடியன என்பதும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் நேரடித் தீர்ப்பாகும்.

பிரிவை ஏற்படுத்தியது. குற்றமல்ல ஏகத்துவ கோட்பாட்டில் தடம்புரண்டதே குற்றம் என்றிருக்குமானால் அதற்காக கட்டுரையாளர் பிரிந்து செல்வதை இங்கு சம்பந்தப்பபடுத்த வேண்டிய அவசியமில்லை.

எனவே வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அல்-ஜமாஅத்திலிருந்து பிரிந்து செல்வது என்பது தனியொரு குற்றமாகும் அப்படிப் பிரிந்தவர்கள் ஒரு போதும் சுவனம் நுழைய முடியாது.

கட்டுரையாளர் பிரிந்த முஸ்லிம்கள் எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதுகின்றார்.

விசுவாசிகளிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் யுத்தம் செய்துகொண்டால் இருவ(குப்பா)ர்களுக்கிடையில் சமாதானப்படுத்தி விடுங்கள். புpன்னர் அவர்களில் ஒருவ(குப்பா)ர் மற்றொருவ(குப்பா)ரின் மீது (வரம்புமீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரம் செய்தவர்கள் அல்லாஹ் கட்டளையின்பால் வரும் வரையில் அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பால்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு(குப்பா)ர்களுக்குமிடையில் சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான். (49:09)

மேற்படி ஆயத்தில் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் குழுவினரைக் கூட அல்லாஹ் முஃமீன்கள்(விசுவாசிகள்) எனக்கூறுவதைக் காணலாம். மிஞ்சிமிஞ்சிப்போனால் அதில் ஒரு கூட்டத்தை பகீ அத்துமீறியவர்கள் என்கிறான். ஆல்லாஹ் பிரிந்து யுத்தம் செய்யும் இரு கூட்டத்தினரை முஃமீன்கள் என்கிறான். இவர்கள் பிரிந்தாலே காபிராகிவிடுவார்கள் என்கின்றனர். யார் சொல்வதை ஏற்கப்போகின்றீர்கள்! (பக் : 30)
முஸ்லிம்களில் இருகூட்டத்தினர் சண்மைட பிடித்தால் என்றவுடனேயே தீனிலே பிளவுபட்டு தத்தமக்கென தனித்தனியானதோ தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொண்டு சண்டை பிடித்தனர் எனக் கட்டுரையாளர் தவறான மற்றுமொர் முடிவிற்கு வந்திருக்கின்றார். முஸ்லிம்கள் தவறிழைக்கக் கூடியோர் என்பதில் மாற்றுக்கருத்து இஸ்லாத்தில் கிடையாது. இந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷைத்தானின் தூண்டுதலால் சில பிரச்சினைகள் அல்லது சண்டை சச்சரவுகள் தோன்றலாம். இதன்பொருள் இன்றுள்ள பிரிவுகளைப் போன்று அவ்விரு கூட்டங்களும் தத்தமக்கென தனித்தனியான தலைமைத்துவங்களையும், வணக்க வழிபாடுகளையும் நம்பிக்கை கோட்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்வார்கள் என்பதல்ல ரஸூலுல்லாஹி (ஸல்) உடைய காலத்தில் நடைபெற்ற சம்பவத்தை கவனியுங்கள்.

குபா வாசிகள் தங்களுக்கு மத்தியில் கற்களை எறிந்துகொள்ளும் அளவி;ற்கு சண்டை பிடித்தார்கள். அதுபற்றி ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட போது வாருங்கள் அவர்களுக்கு மத்தியில் சுமூகத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறினார்கள் (ஸஹீஹூல் புஹாரி)

குபாவாசிகள் தங்களுக்குள் தனித்தனி தலைவர்களை ஏற்படுத்தியிருந்தார்களா? தனித்தனியான பெயர்கள் வைத்திருந்தார்களா? வணக்க வழிபாடுகளில் தனித்தனியான வழிமுறைகளை கொண்டிருந்தார்களா? நம்பிக்கை கோட்பாடுகளில் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசங்களைக் கொண்ருந்தார்களா?.

எனவே தவறுகளில் ஒரு தவறாகிய சண்டை பிடித்தல் முஸ்லிம்களுக்கு மத்தியில் இடம்பெறலாம். சண்டை பிடிப்போர் பாவம் செய்யும் முஸ்லிம்களாகவேல இருப்பர். ஆனால் சண்டை கொலை செய்யுமளவிற்கு சென்றுவிட்டால் கொலை செய்தவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுவார். சுண்டையின் போது கொலை செய்யப்பட்டவரும் நரகிற்குச் செல்ல வேண்டி ஏற்படும்.

முஸ்லிமை தி;ட்டுவது பாவமாகும். ஆவனைக் கொலை செய்தல் குப்ர் ஆகும். (ஸஹீஹூல் புஹாரி, ஸஹீஹூல் முஸ்லிம்)

கட்டுரையாளரின் கருத்தை ஏற்பதா? வஹியின் தீர்ப்பை ஏற்பதா? மேற்கண்ட தீர்ப்பு வஹியையேயன்றி மொழியாத ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களினது கூற்றாகும். கட்டுரையாளரின் விளக்கம் அல்லாஹ்வுடைய தீர்ப்புடன் எவ்வாறு முரண்படுகிறது என்பதைப் பாருங்கள்.

மேலும் எவர் விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்கின்றாரோ அவருக்குரிய கூலி நரகமாகும். ஆதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி) இருக்கக் கூடியராவார். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொண்டு அவரை சபித்தும் விடுவான். அத்தோடு அவருக்கு மகத்தான தண்டனையையும் தயார் செய்து வைத்திருக்கின்றான். (4:93)

எனவே சண்டை பிடித்தல் என்றவுடன் தனித்தனி தலைமைத்துவங்களைக் கொஒ;ட இரண்டு பிரிவுகளைக் கற்பனை பண்ணுவதும் மிகப் பெருந் தவறாகும்.. முஸ்லிம்களுக்கு மத்தியில் சண்டை சச்சரவு ஏற்படலாம், ஆனால் அது தனிப்பிரிவு எனும் நிலையை அடைந்து விட்டால் அல்லது கொலை செய்யுமளவிற்குச் சென்று விட்டால் அது அவர்களை நிரந்தர நரகவாதிகளாக்கி விடும்.

கட்டுரையாளரின் விளக்கத்தில் காணப்படும் மற்றுமோர் அடிப்படைப் குழப்பத்தையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுதல் இஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாகும். அதாவது ஒரு குற்றத்தைக் குறிப்பிட்டு அதனை முஸ்லிம்களில் எவரேனும் செய்தால் என வரும்போது குற்றச்செயலை செய்வதற்கு முன்னர் அவர் முஸ்லிமாக இருந்தார் என்பதற்காக அதனைச் செய்ததன் பின்னரும் அவர் முஸ்லிமே என்றதோர் வாதத்தைக் கட்டுரையாளர் முன்வைக்கின்றார். இந்த வாதம் மிகத் தவறானது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸ்ப் படிப்பதன் மூலம் மிக இலகுவாக உணர்ந்து கொள்ளலாம்.
இரு முஸ்லிம்கள் தத்தமது வாள்களுடன் (ஒருவர் மற்றொருவரை கொலை செய்யும் நோக்கில்) சந்தித்துக்கொண்டால் கொலையாளியும் கொலைசெய்யப்பட்டவரும் நரகவாதிகளாவர் என ரஸூலுல்லாஹி (ஸல்) கூறிய போது இக்கொலையாளி (நரகத்திற்கு செல்லக் கூடியவரே) கொலை செய்யப்பட்டவர் எதற்காக நரகம் செல்ல வேண்டும் என நான் கேட்டதற்கு நிச்சயமாக அவர் தனது தோழரை அகாலை செய்யும் ஆர்வத்துடன் காணப்பட்டார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹூல் புஹாரி கி.தியாத்)

கட்டுரையாளின் வாதப்படி மேற்காணப்படும் ஹதீஸில் கொலையாளியை முதலாவதாக முஸ்லிம் எனக் கூறப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து அவரது செயலின் காரணமாக நரகவாதி எனவும்? முற்றொரு ஹதீஸ் அவரது செயல் குப்ர் எனவும், (4:93) எனும் அல்குர்ஆனிய வசனம் அவர் நிரந்தர நரகவாதி எனவும் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். ஆனால் முதலில் முஸ்லிம் எனக் கூறிய அதே ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தான் அவனது செயலின் காரணமாக அவனை நரகவாதி என்றும் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்றவன் என்றும் கூறுகின்றார்கள். முதலிலே முஸ்லிம் எனக் கூறியதை பற்றிப்பிடிக்கும் கட்டுரையாளர் அதன் பின்னால் கூறிய வார்த்தைகளை ஏற்க மறுப்பதேனோ? உலக நடைமுறையில் இதற்கோர் உதாரணம் கூறுவதென்றால் குறிப்பிட்டதோர் பாடசாலை அதிபர் ஒரு செயலை சுட்டிக்காட்டி அச்செயலை செய்யும் எந்தவொரு மாணவனும் அப்பாடசாலை மாணவனாக கருதப்படமாட்டான். ஆதன் பின்னால் அவன் அப்பாடலைக்கு சமூகமளிக்க முடியாது எனக் கூறியதன் பின்னர் குறிப்பிட்டதோர் மாணவன் அச்செயலை செய்துவிட்டு அதிபரிடம் நீங்கள் மாணவன் எனக் கூறிப்பிட்டதால் நான் இத்தவறைச் செய்ததன் பின்னரும் இப்பாடசாலை மாணவனே, தொடர்ந்தும் பாடசாலைக்கு நான் சமூகமளிக்க முடியும் என கூறுவதை ஒத்ததாகும். இம்மாணவனுடைய வாதம் எந்தளவு அறிவீனமானது என்பதை சிந்தனையுள்ளவர்கள் புரிந்து கொள்வதில் அணுவளவும் சிரமமிருக்காது.

கட்டுரையாளர் பிரிந்த முஸ்லிம்கள் என்ற தலைப்பில் பிரிவுகள் இஸ்லாம் என்பதை நிரூபிப்பதற்கு பின்வரும் ஹதீஸினை அடுத்த ஆதாரமாக பின்வருமாறு கூறுகின்றார் :

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது ஹஸன்(ரலி) அவர்களும் மிம்பரில் இருந்தார்கள். நுபி(ஸல்) அவர்கள் மக்களையும் ஹஸன்(ரலி)யையும் மாறிமாறிப் பார்த்தவராக எனது இந்தப் பேரர் தலைவராவார். இவர் மூலம் அல்லாஹூத் தஆலா இரண்டு பெரிய முஸ்லிம் பிரிவுகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான் எனக் கூறினார்கள்.

மேற்படி ஹதீஸ் பிற்கால நிகழ்வொன்றை முன்னறிவிப்பபுச ;செய்கின்றது அலி(ரலி) அவர்களின் மரணத்தின் பின் ஹஸன்(ரலி) முஆவியா(ரலி)யுடன் செய்து கொண்ட நல்லிணக்க ஒப்பந்தத்தின் மூலம் அலி (ரலி) யி;ன் ஆட்சியையும் முஆவியா (ரலி) யின் ஆட்சியையும் ஏற்றிருந்த இரண்டுபெரிய முஸ்லிம் பிரிவுகள் ஒன்றிணைந்த நிகழ்ச்சி மேற்படி முன்னறிவிப்பை நிறைவு செய்கின்றது(இந்த வரலாற்று உண்மையை மறுப்பவர்கள் மேற்படி நபி வாக்கையும் மறுப்பவர்களே என்பதை கவனத்தில் கொள்க)
கட்டுரையாளர் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸைக்கொண்டு ஒரே காலத்தில் முஸ்லிம்களுக்கு இரு தலைவர்கள் காணப்பட்டதாக சித்தரிக்கின்றார். அலி(ரலி) கலீபாவாக இருக்க முஆவியா(ரலி) மற்றுமோர் ஆட்சியை நிறுவியது வரலாற்று உண்மையெனக் கூறியதுடன், அதனை மறுத்தால் ஹதீஸை மறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளார். புரிதாபம் கட்டுரையாளர்! ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அதனை அறிவிக்கக் கூடியோர் அனைவரும் நம்பகமானவர்களா? என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசுவார்கள். ஆனால் வரலாறு எனும் பெயரில் எத்தகைய பெய்யை கூறினும் அதனை அப்படியே நம்புவதுடன் முஸ்லிம்களும் அதனை நம்ப வேண்டும் எனம் அடம்பிடிக்கிறார்கள். தாரீஹூத் தபரி எனும் மிகமுக்கியமானதோர் வரலாற்றுத் தொகுப்பை வழங்கிய இமாம் தபரி அந்நூலின் முன்னுரையில் கூறியிருப்பதனை கட்டுரையாளர் படிக்க வேண்டும். அவர் கூறுவதாவது : நாம் எமக்குக் கிடைத்த அனைத்துச் செய்திகளையும் இதில் பதிந்து வைத்துள்ளோம். எவரேனும் ஒருவர் ஆராய்து அவற்றில் எதனையும் மறுத்தால் அவருக்கு மறுக்கும் உரிமை இருக்கின்றது என்பதாகும்.

முஹிப்புத்தீன் அல் ஹதீப் என்பவர் அல் அவாசிம் மினல் கவாசிம் எனும் ஸஹாபாக்களிள் முக்கியமான சம்பவங்களைக் குறிப்பிடும் நூலிற்கு அடிக்குறிப்பு எழுதும் போது கட்டுரையாளர் வரலாற்று உண்மை எனக்கூறியுள்ள முஆவியா(ரலி) அவர்களது ஆட்சி பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஏனெனில் அவர்(முஆவியா(ரலி)) ஹலீபாவாக இருக்கவில்லை ஹிலாபத்திற்கு போராடவுமில்லை. உஸ்மான்(ரலி) வினது கொலையிலே சம்பந்தப்பட்டோர் மீது தண்டனை நிறைவேற்றும்படிதான் அவர்கள் கேட்டார்கள்...........
முஆவியா(ரலி) ஆட்சி (அலி (ரலி) அவர்களது மரணத்திற்கு பின்னர் நடந்த) ஹஸன் (ரலி) வுடனான உடன்படிக்கையின் பின்னரேயன்றி ஆரம்பிக்கவில்லை. ஹஸன்(ரலி) முஆவியா(ரலி) அவர்களுக்கு பையத்துச்செய்தபோதுதான் அது பூரணமடைந்தது. அன்றிலிருந்து தான் முஆவியா(ரலி) அமீருல் முஃமினீன் எனவும் அழைக்கப்பட்டார்கள் (பக் : 175)

இரு கலீபாக்கள் இரந்தாhகள் என்பதும் முஸ்லிம்களுக்கு இரு தலைவர்கள் இருந்தார்கள் என்பதும் வரலாற்றை திரிவுபடுத்தக்கூடியவர்களும் இட்டுக்கட்டக் கூடியவர்களும் அவற்றை வாசிக்கக் கூடியவர்களது உள்ளங்களிலே ஏற்படுத்திய தப்பெண்ணமேயாகும் எனவும் முஹிப்புத்தீன் அல்ஹதிப் மேற்குறிப்பிட்டுள்ள புத்தகத்திலே அடித்துரைக்கின்றார். இப்புத்தகம் கட்டுரையாளருக்கு வழிகாட்டக்கூயெ உலமாக்களினால் சவூதி அரேபிய அரசாங்கத்தின் மூலம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நூமாக மறுத்தால் வரலாற்று உண்மையை மறுக்கின்றோம் என கட்டுரையாளர் கதையாளக்கலாம் என்பதற்காகத்தான் மேற்குறிப்பிடப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதை எடுத்தொழுதியுள்ளோம். இல்லை என்றால் அலி(ரலி) அவர்களுடைய அட்சி காலத்தில் முஆவியா(ரலி) அவர்கள் தனியோர் ஆட்சியை பிரகடனப்படுத்தினார்கள் என்பதை நம்பகமான அறிவிப்பாளர் வரிசையுடன் முன்வையுங்கள் என்ற ஒரே கோரிக்கையைத்தான் கட்டுரையாளரிடம் நாம் விடுப்போம். மறுமை நாள் வரை அதனை அவர் நிறை வேற்ற முடியாது.

இப்போது அவர் சுட்டிக்காட்டியுள்ள ஹதீஸின் தெளிவென்ன? என்பதையும் பார்ப்போம். நும்பஹமான அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்ட உண்மைவரலாறு கூறுவது என்னவென்றால் உஸ்மான் (ரலி) கொலை செய்யப்பட்டதும், அவர்களைக் கொலை செய்தவர்கள் உடனடியாக தேடிப்படித்து தண்டிக்க வேண்டும் என முஆவியா (ரலி) குரல் கொடுத்தார்கள். அன்றைய சூழலில் அதனைவிட அவசியமாக செய்யப்பட வேண்டியது ஹவாரிஜ் எனப்படக்கூடிய அல்-ஜமாஅதிலிருந்து பிரிந்து சென்றோரை அழித்தொழிப்பதே எனக் கண்ட அலி(ரலி) கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதை சிறிது பிற்போட்டார்கள். இதில் தான் இவர்களுக்கு மத்தியில் சர்ச்சை ஏற்பட்டது. இச்சர்ச்சையை ஹஸன் (ரலி) முஆவியா (ரலி) அவர்களுடன் உடன்படிக்கை செய்து, அவர்களுக்கு பைஅத்துச் செய்வதன் மூலம் சர்ச்சைப்பட்டிருந்த முஸ்லிம்களின் இரு கூட்டத்தினரை ஒரே கூட்டமாக ஆக்கினார்கள். இதுதான் ஹதீஸ் கூறிய முன்னறிவிப்பு.

அலி(ரலி) அவர்களை எதிர்த்து முஆவியா(ரலி) தனியொரு ஆட்சியமைத்தார்கள் எனும் வரலாறு அறிப்பாளர் பட்டியல் கொண்டு நிரூபிக்க முடியாத விடயம் என்பது ஒரு புறமிருக்க ரஸூலுல்லாஹி (ஸல்) கூறிய நயவஞ்சகனே அலி(ரலி) அவர்களை பகைத்துக்கொள்வான் (ஸஹீஹ்-முஸ்லிம்) எனும் ஹதீஸ் இருக்கும் போது சுவனத்தைக் கொண்டு நனடமாரயங் கூறப்பட்ட முஆவியா(ரலி) அலி(ரலி) அவர்களை பகைத்துக்கொள்வார்களா? ஆதாரம் போலி என்பதுடன், அறிவும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு அபாண்டமே ஒரே நேரத்தில் அலி (ரலி) அவர்களும் முஆவியா(ரலி) அவர்களும் தனித்தனி ஆட்சி நிறுவினார்கள் என்பது.

கட்டுரையாளர் தனித்தனி தலைமைத்துவங்களைக் கொண்ட பிரிவுகள் இஸ்லாத்தின் உள்ளவையே என்பதை நிரூபிக்க மற்றுமோர் ஹதீஸை முன்வைக்கிறார். ஆந்த ஹதீஸ் பின்வருமாறு :

முஸ்லிம்களுக்கு மத்தியிலோர் பிரிவினை தோன்றும் போது ஒரு கூட்டம் (இஸ்லாத்தை விட்டும்) வெளியேறிச் செல்லும். அதனை அவ்விரு கூட்டங்களிலும் சத்தியத்திற்கு மிக நெருக்கமான கூட்டம் கொலை செய்யும் (ஸஹீஹ்-முஸ்லிம்)

அதனைத தொடர்ந்து பின்வருமாறு எழுதுகின்றார்:

வரலாறாக நாங்கள் இதைக் கூறும்போது ஏன் ஸஹாபாக்களை குறை கூறுகின்றீர்கள்? அவர்களுக்கிடையே பிரிவு ஏற்படவேயில்லை என சில சூனியங்கள் மறுக்கலாம். ஆனால் ஹதீஸை மறுக்க முடியாதல்லவா? மேற்படி ஹதீஸ் பிரிந்த அவ்விரு கூட்டத்தினரை முஸ்லிம்கள் என்றுதானே கூறுகின்றது? (பக். 32)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸினைப் புரிந்து கொள்வதற்கு துணைபுரியக் கூடியதோர் அல்-குர்ஆனிய வசனத்தைக் கவனியுங்கள்.
(விசுவாசிகளே) இணைவைப்போரினின்றும் ஆகிவிடாதீர்கள். (அதாவது) தங்கள் மார்க்கத்தைப்பிரித்து (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டோரினின்றும் ஆகிவிடாதீர்கள்.(30:31,32)

இஸ்லாத்தின் பார்வையில் பிரிவு என்பது மார்க்கத்தை துண்டுதுண்டாக்கி பல பிரிவுகளாகப் பிரிந்து, தனித்தனி தலைமைத்துவங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பதனை இவ்வசனத்தின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். எனவே தான் உலக ரீதியாக ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒவ்வொரு தலைவர் இருப்பதை அனுமதித்த ரஸூலுல்லாஹி (ஸல்) முஸ்லிம்களை இணைக்கக்கூடிய ஒரே தலைமைத்துவத்தை மிக மிக வலியுறுத்தியுள்ளார்கள். அத்துடன இரண்டாவதோர் தலைவர் நியமிக்கப்பட்டால் அவருக்குரிய தண்டனை பற்றி கருணையுள்ளம் கொண்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் தீர்ப்பைக் கோளுங்கள் :

இரண்டு ஹலீபாக்களுக்கு பைஅத்துச் செய்யப்பட்டால் அவ்விருவரில் பிந்தியவரைக்கொலை செய்துவிடுங்கள் (ஸஹீஹ் முஸ்லிம்)

எனவே அலி(ரலி) அவர்களுக்கும் முஅவியா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தலைமைத்துவத்திற்கான பிரச்சினையல்ல. அத்துடன் அவர்கள் அல்லாஹ்வுடைய தடையை மீறி தீனிலே பிளவுகளை ஏற்படுத்தி பிரிவுகளாக மாறிவிடவுமில்லை. முற்றுமுழுதாக இஸ்லாத்தின் எதிரிகளால் எழுதப்பட்ட வரலாறுகளை கட்டுரையாளர் அப்படியே நம்பி அல்-குர்ஆன் தக்வாவிற்கும் பொருத்தமானவர்கள் விசுவாசத்தால் உள்ளங்கள் அலங்கரிக்கப்பட்டவர்கள் எனப் போற்றுகின்ற நபித்தோழர்களை தினீலே பிளவுபட்டு ஆட்சிக்காக சண்டைப்பிடித்தார்கள் எனக் கூறுவது மிகப்பயங்கரமான செயலாகும். சில ஹதீஸ்களை கூட தம்மால் புரிந்துகொள்ள முடியாமல் அல்குர்ஆனிற்கு முரண் எனக் கூறி நிராகரிக்கின்ற பிரிவினைவாதிகள் அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு நிரூபிக்கப்படாத அல்குhஆனிற்கு முரணாக வரலாறுகளை அப்படியே நம்புவது ஆச்சரியத்தை தருகின்றது. எனவே அலி(ரலி) அவர்களும் முஅவியா(ரலி) அவர்களும் தலைமைத்துவத்தில் பிரியவில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றோம். அவர்கள் பிரிந்ததெல்லாம் கொலைக் குற்றத்தை நிரூபித்து அதற்கான தண்டனை வழங்குவதை உடனடியாக செய்வதா? அல்லது ஹவாரிஜ்களுக்கு முடிவுகட்டிவிட்டுச் செய்வதா? என்பதில் தான். கட்டுரையாளர் இதனை மறுத்தால் இரு தலைமைத்துவம் காணப்பட்டது என்பதனை அறிவி;ப்பாளர் வரிசையுடன் நிரூபிக்குமாறு கட்டுரையாளருக்கு சவால் விடுக்கின்றோம்


No comments:

Post a Comment